27.10.15

விவசாயி.........

எங்கள் தோட்டத்தில் ஒரு வாரமாக பீட்ரூட் எடுத்துக் கொண்டிருக்கிறோம்.
பீட்ரூட் நம்மிடம் கொள்முதல் செய்யும்
விலை கிலோ ரூபாய் 3 .
ஆனால் கடைகளில் நீங்கள் வாங்கும்
விலை கிலோ ரூபாய் 30.
விவசாயி தலையில் நல்ல ஆப்பு!
வியாபாரி கையில் தங்கக் காப்பு!!
உற்பத்தி விலை : ரூபாய் 5 ஆகிறது.
இப்படித்தான் இன்று விவசாயிகள் வஞ்சிக்கப்படுகிறார்கள்.
-------------------------------------------------------------------------------
வணக்கம்,
நான் பீட்ரூட் விவசாயிகள் படும் துயரம் பற்றி நான்கு நாட்களுக்குமுன் பதிவிட்டிருந்தேன்.அந்த பதிவுக்கு ஆதரவாக நிறைய பிண்ணூட்டங்கள் இட்டிருந்தீர்கள்.1500 க்கும் மேற்பட்ட Like கள்,1600 க்கும் மேற்பட்ட Share கள்,200 க்கும் மேற்பட்ட பிண்ணூட்டங்கள்.
விவசாயிகளுக்கு ஆதரவாக நீங்கள் இருக்கிறீர்கள் என்பதை உணர்த்தி, எனக்கு இன்னும் பெரும் நம்பிக்கையைத் தந்திருக்கிறீர்கள்.
பீட்ரூட்மட்டுமல்ல,அவரை,பீன்ஸ்,காளிஃப்ளவர்,தக்காளி,புடலை,வெண்டை,தேங்காய் போன்ற அனைத்து காய்கறிகள் பயிரிடும் எங்கள் அனைத்து விவசாயிகளுக்கும் இதே நிலைதான்.
எங்கள் கிராமங்கள் ஒட்டன்சத்திரத்தை மையமாகக் கொண்டுள்ளவை.
தமிழ்நாட்டிலேயே மிகப்பெரிய காய்கறி மார்கெட் இங்குதான் உள்ளது.
இங்கிருந்து தமிழ்நாடு முழுவதும் மற்றும் தென் மாநிலங்களுக்கும் தினசரி சுமார் 200 முதல் 300 லோடு காய்கறிகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. எனவே காய்கறி பயிரிடுவதே எங்களது பிரதான விவசாயமாக உள்ளது.
என்னுடைய பீட்ரூட் பதிவின் பிண்ணூட்டங்களில் நீங்கள் கூறியிருப்பது:
1)உழவர் சந்தையில் விற்கலாம்.
2)நேரடியாக மக்களிடம் போய் விற்கலாம்.
3)சிண்டிகேட் அமைத்து விற்கலாம்.
4)விவசாயிகள் நேரடியாக ஹோட்டல் போன்ற இடங்களில் விற்பனை செய்ய முயற்சி செய்ய வேண்டும்.
5)விவசாயம் மட்டும் தெரிந்தால் போதாது வணிக யுக்தியும் தெரிய வேண்டும்.
6)நேரடி விற்பனை செய்ய வேண்டியதுதானே.
இவையாவுமே சொல்வது எளிது.ஆனால் நடைமுறைப்படுத்த இயலாதுங்க.
உழவர் சந்தையில்,ஊருக்குள்,ஹோட்டல்களில்,நேரடியாக
மக்களிடத்தில் எல்லாம் விற்க முடியாது.ஒரு விவசாயி 5000 கிலோ காய்கறிகளை ஒருநாளைக்கு விற்க முடியுமா?ஆயிரம் விவசாயிகளின் காய்கறிகளை நீங்கள் சொல்வதுபோல சந்தைப்படுத்த இயலாது.மேலும் இவை யாவும் ஸ்டாக் வைத்து விற்கும் பொருள்களும் கிடையாது.எனவேதான் எங்களுக்கு இந்த கதி .இந்த இயலாமைக்கு நாங்கள் 'பலிகடா' ஆவதைதவிர வேறு வழியே இல்லை.
நாங்கள் வேண்டுமானால் ஒன்று செய்யலாம்,
இனிவரும் காலங்களில் எங்கள் தேவைக்கு மட்டும் காய்,கனிகளை விளைவித்துக் கொண்டு,மீதி நிலங்களை தரிசாகப் போட்டுவிடலாம்.ஆனால் உங்கள் கதி????....
இதற்கும் எங்களுக்குள் ஒற்றுமை இருக்காது.
இந்த ஒற்றுமையின்மையை பயன்படுத்திதான் வியாபாரிகள்,இடைத்தரகர்கள் எல்லாம் குளிர்காய்கிறார்கள்.
இந்த நிலை ஒருநாள் மாறும்.அப்போதுதான் தெரியும் விவசாயிகளின் அருமை.
இதையெல்லாம் அரசாங்கங்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றன.விவசாயத்தை மதிக்காத எந்த அரசாங்கமும் இனிவரும் காலங்களில் நீடித்து இருக்காது என்பது மட்டும் உறுதி!
"எங்களுக்கும் காலம்வரும்"
-
-
இப்படிக்கு:
அந்த காலத்திற்காக காத்திருக்கும்
'அபலை விவசாயிகள்'.
234 Likes36 Comments52 Shares


----------------------------------------------------------------------------------

No comments:

Post a Comment

நான் ஒரு விவசாயி.

My photo
CHENNAI, TAMILNADU, India
Work "MORE",Talk "LESS"
Powered By Blogger

Search This Blog