27.10.15

விவசாயி.........

எங்கள் தோட்டத்தில் ஒரு வாரமாக பீட்ரூட் எடுத்துக் கொண்டிருக்கிறோம்.
பீட்ரூட் நம்மிடம் கொள்முதல் செய்யும்
விலை கிலோ ரூபாய் 3 .
ஆனால் கடைகளில் நீங்கள் வாங்கும்
விலை கிலோ ரூபாய் 30.
விவசாயி தலையில் நல்ல ஆப்பு!
வியாபாரி கையில் தங்கக் காப்பு!!
உற்பத்தி விலை : ரூபாய் 5 ஆகிறது.
இப்படித்தான் இன்று விவசாயிகள் வஞ்சிக்கப்படுகிறார்கள்.
-------------------------------------------------------------------------------
வணக்கம்,
நான் பீட்ரூட் விவசாயிகள் படும் துயரம் பற்றி நான்கு நாட்களுக்குமுன் பதிவிட்டிருந்தேன்.அந்த பதிவுக்கு ஆதரவாக நிறைய பிண்ணூட்டங்கள் இட்டிருந்தீர்கள்.1500 க்கும் மேற்பட்ட Like கள்,1600 க்கும் மேற்பட்ட Share கள்,200 க்கும் மேற்பட்ட பிண்ணூட்டங்கள்.
விவசாயிகளுக்கு ஆதரவாக நீங்கள் இருக்கிறீர்கள் என்பதை உணர்த்தி, எனக்கு இன்னும் பெரும் நம்பிக்கையைத் தந்திருக்கிறீர்கள்.
பீட்ரூட்மட்டுமல்ல,அவரை,பீன்ஸ்,காளிஃப்ளவர்,தக்காளி,புடலை,வெண்டை,தேங்காய் போன்ற அனைத்து காய்கறிகள் பயிரிடும் எங்கள் அனைத்து விவசாயிகளுக்கும் இதே நிலைதான்.
எங்கள் கிராமங்கள் ஒட்டன்சத்திரத்தை மையமாகக் கொண்டுள்ளவை.
தமிழ்நாட்டிலேயே மிகப்பெரிய காய்கறி மார்கெட் இங்குதான் உள்ளது.
இங்கிருந்து தமிழ்நாடு முழுவதும் மற்றும் தென் மாநிலங்களுக்கும் தினசரி சுமார் 200 முதல் 300 லோடு காய்கறிகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. எனவே காய்கறி பயிரிடுவதே எங்களது பிரதான விவசாயமாக உள்ளது.
என்னுடைய பீட்ரூட் பதிவின் பிண்ணூட்டங்களில் நீங்கள் கூறியிருப்பது:
1)உழவர் சந்தையில் விற்கலாம்.
2)நேரடியாக மக்களிடம் போய் விற்கலாம்.
3)சிண்டிகேட் அமைத்து விற்கலாம்.
4)விவசாயிகள் நேரடியாக ஹோட்டல் போன்ற இடங்களில் விற்பனை செய்ய முயற்சி செய்ய வேண்டும்.
5)விவசாயம் மட்டும் தெரிந்தால் போதாது வணிக யுக்தியும் தெரிய வேண்டும்.
6)நேரடி விற்பனை செய்ய வேண்டியதுதானே.
இவையாவுமே சொல்வது எளிது.ஆனால் நடைமுறைப்படுத்த இயலாதுங்க.
உழவர் சந்தையில்,ஊருக்குள்,ஹோட்டல்களில்,நேரடியாக
மக்களிடத்தில் எல்லாம் விற்க முடியாது.ஒரு விவசாயி 5000 கிலோ காய்கறிகளை ஒருநாளைக்கு விற்க முடியுமா?ஆயிரம் விவசாயிகளின் காய்கறிகளை நீங்கள் சொல்வதுபோல சந்தைப்படுத்த இயலாது.மேலும் இவை யாவும் ஸ்டாக் வைத்து விற்கும் பொருள்களும் கிடையாது.எனவேதான் எங்களுக்கு இந்த கதி .இந்த இயலாமைக்கு நாங்கள் 'பலிகடா' ஆவதைதவிர வேறு வழியே இல்லை.
நாங்கள் வேண்டுமானால் ஒன்று செய்யலாம்,
இனிவரும் காலங்களில் எங்கள் தேவைக்கு மட்டும் காய்,கனிகளை விளைவித்துக் கொண்டு,மீதி நிலங்களை தரிசாகப் போட்டுவிடலாம்.ஆனால் உங்கள் கதி????....
இதற்கும் எங்களுக்குள் ஒற்றுமை இருக்காது.
இந்த ஒற்றுமையின்மையை பயன்படுத்திதான் வியாபாரிகள்,இடைத்தரகர்கள் எல்லாம் குளிர்காய்கிறார்கள்.
இந்த நிலை ஒருநாள் மாறும்.அப்போதுதான் தெரியும் விவசாயிகளின் அருமை.
இதையெல்லாம் அரசாங்கங்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றன.விவசாயத்தை மதிக்காத எந்த அரசாங்கமும் இனிவரும் காலங்களில் நீடித்து இருக்காது என்பது மட்டும் உறுதி!
"எங்களுக்கும் காலம்வரும்"
-
-
இப்படிக்கு:
அந்த காலத்திற்காக காத்திருக்கும்
'அபலை விவசாயிகள்'.
234 Likes36 Comments52 Shares


----------------------------------------------------------------------------------

படித்ததில் பிடித்தது.....




---------------------------------------------------------------------------------------------
நம் நாட்டிலிருந்து வெளிநாட்டுக்கு வேலை தேடிச் சென்றார் ஒருவர்.
அங்கே ஒரு விற்பனை நிலையத்தில்....
"சேல்ஸ் துறையில் உனக்கு முன் அனுபவம் இருக்கிறதா?" மேனேஜர் கேட்க,
"நான் எனது நாட்டில் சேல்ஸ்மேனாகத்தான் வேலை பார்த்தேன்" என்றார் நம்மாளு.
"அப்படியானால் உனக்கு நான் வேலை தருகிறேன். நாளை முதல் நீ வேலையைத் தொடங்கலாம். கடை மூடும்பொழுது நீ எப்படி வேலை பார்த்தாய் எனப் பார்ப்பதற்கு நான் வருவேன்"
முதல் நாள் கடை மூடும் நேரம் மேனேஜர் வருகிறார்.
"இன்று எத்தனை நபர்களிடம் சேல்ஸ் செய்தாய்?"
"ஒருவரிடம் மட்டும்…"
"என்ன ஒருத்தர் மட்டுமா? ... உன்னுடன் வேலை பார்க்கும் மற்றவர்களெல்லாம் நாள் ஒன்றுக்கு 20லிருந்து 30 வரை செய்யக் கூடியவர்கள். உன் வேலை நிரந்தரமாக வேண்டுமானால் நீயும் இவர்களைப் போல் முயற்சி செய்ய வேண்டும். சரி எவ்வளவு டாலருக்கு விற்றாய்?"
"$1012347.64"
"ஒரே ஒரு நபரிடம் இவ்வளவு டாலருக்கா? என்னென்ன விற்றாய்?"
"முதலில் அவரிடம் சிறிய தூண்டில்,
கொஞ்சம் பெரிய தூண்டில்,
அதைவிடப் பெரிய தூண்டில்,
ஃபிஷிங் ராட்,
ஃபிஷிங் கியர் எல்லாம் விற்றேன்.
பிறகு அவரிடம் “எங்கே மீன் பிடிக்கிறீர்கள்?” என்று கேட்டேன். அவர் கரையில் அமர்ந்து மீன் பிடிப்பதாகச் சொன்னார். உடனே நமது போட்டிங் டிபார்ட்மெண்ட் சென்று ஒரு போட்டை விற்றுக் கொடுத்தேன். அவர் என்னுடைய கார் இந்த போட்டை இழுக்குமா எனத் ன்று தெரியவில்லையே என்றார். நான் நமது ஆட்டோமோடிவ் டிபார்ட்மெண்ட் சென்று ஒரு 4x4 ட்ரக் விற்றுக் கொடுத்தேன். பின்னர் அவரிடம் நீங்கள் எங்கு தங்கியிருக்கிறார் எனக் கேட்டேன். இப்போதைக்கு இடம் எதுவும் இல்லை என்று சொன்னார். உடனே நான் அவருக்கு 4 பேர் தங்கக் கூடிய அளவுள்ள “டெண்ட்” –ம் விற்றுக் கொடுத்தேன்"
"என்ன ஒரு தூண்டில் வாங்க வந்தவரிடமா இவ்வளவும் விற்றாய்?"
மேனேஜர் அதிசயமாய்க் கேட்க, நம்மாளு சொன்னார்,
"அய்யோ! இல்லை சார்! அவர் தலைவலிக்காக அனாசின் மாத்திரை வாங்க வந்தார். நான்தான் மீன் பிடித்தால் மனசுக்கு ரொம்ப ரிலாக்ஸ் - ஆக இருக்கும். எப்போதும் உங்களுக்குத் தலைவலியே வராது என்று கூறினேன்"
இந்தியன்னா சும்மாவா?


----------------------------------------------------------------------------

நினைவிருக்கிறதா..?
போபால் விஷவாயு கசிவு கோரம்.....
1984-டிசம்பர் 3-ம் தேதி...!!!
போபால் ரயில்வே ஸ்டேஷனில்
'துருவே' என்ற ஸ்டேஷன் மாஸ்டருக்கு இரவு நேரப்பணி.
போபால் ஸ்டேஷன் வழியாக லக்னோவில் இருந்து மும்பை செல்லும் ரயிலுக்கு சிக்னல் க்ளியரன்ஸ் கொடுத்துவிட்டு வெளியே வந்தார்.அவரால் காற்றில் ஏதோவித்தியாசத்தை
உணர முடிந்தது. அவசர அவசரமாக சிக்னல்அறைக்கு ஓடினார். எப்படியாவது
லக்னோ டு மும்பை ரயிலைத் தடுத்துவிடுவதுதான் அவரது
நோக்கம். ஆனால், அந்த ரயில்
ஏற்கெனவே கிளம்பிவிட்டது.
துருவேயால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
லக்னோ-மும்பை ரயில் வந்தது. அதில் இருந்து இறங்கிய பயணிகள் எல்லாம் விஷ வாயுவைத் தாங்க முடியாமல் சுருண்டுவிழுந்தார்கள்.
ஓடியவர்கள் இன்னும் சீக்கிரம்
இறந்தார்கள்.கொஞ்ச நேரத்தில் போபால் ரயில் நிலையத்தில் 191 பிணங்கள்கிடந்தன.
அந்தக்காட்சி துருவேயை
நிலைகுலையவைத்தது.
பதற்றத்தோடு சிக்னல் அறைக்கு ஓடினார். அங்கு அவருக்குக்
கீழ் பணிபுரியும் சிக்னல் மேன்
வாயில் ரத்தம் வழிய செத்துக்கிடந்தார். அவரை
ஓரமாக நகர்த்திப்போட்டுவிட்டு, 'எந்த ரயிலும் போபால் வழியே வந்துவிட வேண்டாம்' என்று
தகவல் அனுப்பத் தொடங்கினார்.
அதையும் மீறி வரும் ரயில்கள்
ஜன்னலை மூடிக்கொண்டு போபால்ஸ்டேஷனில் நிற்காமல் வேகமாகப் போய்விடுமாறு
அறிவுறுத்தினார்.
மூக்கிலும் வாயிலும் வழிந்த
ரத்தத்தைத் துடைத்துக்கொண்டு, இரவு முழுவதும் விழித்திருந்து வேலை பார்த்தார்.
அந்த இரவு விடிந்தது. அடுத்த நாள் சிக்னல் அறையைத்
திறந்தபோது, ஸ்டேஷன் மாஸ்டர்
துருவே வாயில் ரத்தம் வழிந்த நிலை யில் சிக்னல் அனுப்பும் கருவியை ஒரு கையால் பிடித்தபடி செத்துக்கிடந்தார்.
துருவே மட்டும் இல்லை எனில்,
போபால் விஷவாயுக் கசிவின் மரண எண்ணிக்கைஇன்னும்
சில ஆயிரங்கள் கூடியிருக்கும்.
ஆனால்,போபால் நகரத்தில் விஷவாயு கசிந்த அந்த இரவில் மாநில முதல்வர் அர்ஜுன் சிங்,
நகரில் இருந்து 14 கி.மீ ஓடோடிச்
சென்று தப்பித்தார்.
’துருவே’ போன்றவர்களின்
தியாகம் ஏனோ
அங்கீகரிக்கப்படுவதுமில்லை,
ஞாபகம்இருப்பதும் இல்லை.
'துருவே' வுக்கு தலைவணங்கி வீரவணக்கம் செலுத்துவோம்.
-ஆனந்த விகடன் இதழிலிருந்து....

----------------------------------------------------------------------------------------


அடிப்படையில் சென்னையைச் சேர்ந்ததமிழரான அரவிந்துக்கு தற்போது வயது 32.தானியங்கித் துறையில் மிகுந்த ஆர்வம்
கொண்டவரான அரவிந்துக்கு,
அடிக்கடி நீண்ட மகிழுந்துப் பயணம்
மேற்கொள்ளுவது பிடித்தப்
பொழுதுபோக்கு. குறிப்பாக, சோதனை ஓட்டத்திற்கென்று
கொடுக்கப்படும் வாகனங்களைச்
சோதிப்பதற்காக நெடுந்தூரம் ஓட்டிச்
செல்வது இவரது வாடிக்கை.
அப்படித்தான் அண்மையில், ஃபோக்ஸ்வாகன் நிறுவனத்தின் ’பஸாட்’ காரை ஓட்டிச்
சென்ற அரவிந்திற்கு, அது ஒரு
வரலாற்று நிகழ்வாக அமையப்போகிறது என்று
நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார்.தற்செயலாக, அந்த வாகனத்தின் புகை
வெளியிடும் அளவைச் சோதித்த அரவிந்தும்,அவரது நண்பர் மார்க் பெஸ்சும் அதிர்ந்து போனார்கள்.
காரணம் புகை வெளியிடும் அளவை நிர்ணயிக்கும் ஈ.பி.ஏ
கட்டுப்பாட்டு விதிகளில் குறிப்பிட்டுள்ள அதிகபட்ச அளவை விட, இந்த வாகனத்தின் புகை வெளியேற்ற அளவு 20 மடங்கு
அதிகமாக இருந்தது.
இதேபோல ஃபோக்ஸ்வாகன் நிறுவனத்தின் மற்றொரு தயாரிப்பான ’ஜெட்டா’ விலும் 15 முதல் 35 விழுக்காடு அதிகப் புகைவெளியேறியிருக்கிறது.
ஆனால் தர நிர்ணயச்
சோதனைகளிலெல்லாம் மிக எளிமையாகத் தேர்வு பெற்றவை இந்த கார்கள்.
அது எப்படி? என்ற குழப்பத்திற்கான விடையைத் தேடுகையில்தான் அரவிந்த், ஃபோக்ஸ்வாகன்
நிறுவனத்தின் மாபெரும் ஊழலைக்
கண்டறிந்திருக்கிறார்.
காற்றில் நச்சுத்தன்மையை அதிகரிக்கும், மோனோ
நைட்ரஜன் ஆக்ஸைடு போன்ற காரீயத்தை (Lead)
சுற்றுச்சூழலில் அளவிற்கு அதிகமாக வெளியிடும் போதிலும், அந்த அளவைக் குறைத்துக் காட்டுமாறு, ஏமாற்றுத் திறன்
வாய்ந்த ஒரு மென்பொருளை
இந்த வாகனங்களில்
பொருத்தியிருக்கிறது இந்த நிறுவனம்.இதைக் கண்டறிந்த உடன், தன்னம்பிக்கையும்
துணிச்சலும் கொண்டவராக,
உடனடியாக புகார் பதிவு
செய்துள்ளார் அரவிந்த்.
இதைத் தொடர்ந்து, உலக ஊடக
வெளியில் பட்டவர்த்தனமாக
அம்பலமானது ஃபோக்ஸ்வாகன் ஊழல்.
இந்த அவமானத்தைத் தொடர்ந்து,
அந்த நிறுவனத்தின் முதன்மை இயக்குநரான மார்ட்டின் விண்டர்கோர்ன், இந்த மோசடிக்குப்
பொறுப்பேற்றுப் பதவி விலகினார்.
மேலும் ஃபோக்ஸ்வாகன் நிறுவனம், 18 பில்லியன் டாலர்கள் இழப்பீடு கட்டவேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதைத் தொடர்ந்து 5 நாட்களில் ஃபோக்ஸ்வாகன் நிறுவனம், பங்குச்சந்தையில்
தன் மதிப்பில், 25 பில்லியன் யூரோக்களை இழந்து,
அடிமட்டத்தை அடைந்துள்ளது.
ஒரு ராட்சத கார்ப்பரேட் நிறுவனத்தை, தனி
மனிதனாக நின்று ‘நெற்றிக்கண்
திறப்பினும் குற்றம் குற்றமே’ என்பது போல வீழ்த்திய தமிழரான அரவிந்த் திருவேங்கடம்,
உலக அரங்கில் உயர்ந்து நிற்கிறார்.
-
-
காராளர் வம்சம்.

காமராஜர்...

காமராஜர் ஒரு நாள் வீட்டில் அமர்ந்து மற்றவர்களுடன் பேசிக் கொண்டிருந்தார் . அப்பொழுது அவரைப் பார்க்க ஒரு சிறுமியும் சிறுவனும் உள்ளே .வந்தனர் பரட்டை தலையும் அழுக்குத் துணியும் அவர்களின் ஏழ்மையை பறைசாற்றின . பணியாளர் ஒருவர் அவர்களை விரட்ட , முற்பட , கேட் வரை ஓடிய குழந்தைகள் தயங்கி தயங்கி நின்றார்கள் . தம்மை பார்க்க வரும் பிரமுகர்களை வாசல் வரை வந்து வழியனுப்பிய காமராஜர் , அந்தக் குழந்தைகளை கவனித்து விடுகிறார் . அடுத்த நிமிடம் உற்சாகம் பொங்க " என்ன யாரை பார்க்க வந்தீங்க ?"" என்று கேட்டப் படி அவரே குழந்தைகளிடம் வந்து விட ...
அப்பொழுது அந்தச் சிறுமி தயங்கி பேசினாள் " உங்களைத் தான் பார்க்க வந்தோம் . எங்களுக்கு அப்பா இல்லை . அம்மா மட்டும் தான் . அண்ணனுக்கு டைப்ரைட்டிங் பரீட்சை பீஸ் கட்ட பணம் இல்லை . உங்களை பார்த்தா உதவி செய்வீங்கன்னு எல்லோரும் சொன்னாங்க அது தான் வந்தோம்" என்றாள் ...
அவர்களை அன்போடு தட்டிக் கொடுத்தப் படி , " அம்மா தான் அனுப்பிச்சாங்ளா ? என்று காமராஜர் கேட்க ... அந்த குழந்தைகளோ " இல்லை அய்யா , நாங்களாகத் தான் வந்தோம் . அம்மா அப்பளம் போட்டு வீடு வீடாக விக்கறாங்க அதுல தான் எங்களை படிக்க வைக்கிறாங்க """ என்று சொல்ல . அதற்கு மேல் கேட்க முடியாமல் . மாடிக்கு சென்ற அவர் ஒரு கவருடன் .வந்தார் சிறுமியிடம் கொடுத்து " இதில் கொஞ்சம் பணம் இருக்கு . அண்ணனுக்கு பீஸ் . கட்டிடுங்க அம்மா பேச்சை கேட்டு நல்ல பிள்ளைங்களா நடந்துக்கணும் என்று சொல்லி அனுப்பி வைத்தார் ...."
மறுநாள் மீண்டும் அந்தக் குழந்தைகள் வந்தனர் . உதவியாளர் வைரவன் குழந்தைகளை உள்ளே அழைத்து வந்தார் .... " வாங்க வாங்க " என்று அவர்களை வாஞ்சையுடன் அழைத்த காமராஜரிடம் அந்தக் குழந்தைகள் . " பரீட்சைக்கு பணம் கட்டி விட்டோம் அய்யா . அந்த ரசீதை அம்மா உங்களிடம் காட்டிட்டு வரச் சொன்னாங்க என்று காமராஜரிடம் அந்தச் சிறுமி ரசீதை நீட்டினாள் .... காமராஜர் கண் கலங்கி விட்டார் .
ஏழ்மையிலும் இவ்வளவு நேர்மையா ? குழந்தைகள் அவரை ...வணங்கினார்கள் அவரும் குழந்தைகளை வணங்கினார் .... வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்தார்.
-

சினிமா.

---சினிமாவின் மூலம் நாம் அடைந்த நன்மைகள் என்ன,
1) சகோதரிகளாக பார்க்க வேண்டிய இளம்பெண்களை காதலிகளாக பார்க்க வைத்தது இந்த சினிமா
2) பெற்றோர்களை எதிரிகளாக காட்டியது இந்த சினிமா
3) திருட்டின் வகைகளை கற்றுகொடுத்தது இந்த சினிமா
4) நகைச்சுவை என்ற போர்வையில் பொய்யை மனித பண்பாக மாற்றியது இந்த சினிமா
5) இசையை கேட்போரின் மனங்களில் திணித்து சிந்தனையை பாவங்களின் பக்கம் திருப்பியது இந்த சினிமா
6) வன்முறையை ஹீரோயிசமாக காட்டியது இந்த சினிமா
7) காதல் என்பதை புனிதமாக காட்டி பிஞ்சு மனங்களில் கூட நஞ்சை ஊட்டியது இந்த சினிமா
8) தீய பழக்க வழக்கங்களை ஆண்மைத்தனமாக காட்டியது இந்த சினிமா
9) Fashion என்ற பெயரில் பெண்களை அரைகுறை ஆடைகளுடன் வீதிகளில் திரிய விட்டு கலாச்சாரம்,பண்பாடுகளை அழித்தது இந்த சினிமா
10) ஆபாசத்திற்கு பொழுதுபோக்கு என்ற பெயரை வைத்தது இந்த சினிமா
11) உறவுகளின் புனிதத்தன்மையை பாழ்படுத்தியது இந்த சினிமா
12) உண்மையை சொல்கிறோம் என்ற பெயரில் வன்புணர்ச்சியை வளர்த்தது இந்த சினிமா
13) திரையில் பெண்களை போகப்பொருளாக ஆக்கியது இந்த சினிமா
14) "அழகை ரசிக்கலாம் ஆனால் அதை அடைய விரும்பாதே "என்ற அசிங்கமான தத்துவத்தை அறிமுகப்படுத்தி மனிதர்களை கண்களால் "விபச்சாரம்" செய்ய கற்றுக்கொடுத்தது இந்த சினிமா
15) வியாபார நோக்கத்திற்காக சமூக ஒற்றுமையை சீர் குலைத்தது இந்த சினிமா
ஒழுக்கக் கேட்டைத்தவிர இந்த சினிமாவினால் நாம் பெற்ற நன்மைகள் எதுவும் இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை
மொத்தத்தில் சினிமா என்பது ஓழுக்கச்சீர்கேட்டின் "கையேடு"
விபச்சாரத்தின் "நுழைவாயில்"
சமூக சீர் குலைவிற்கான "ஆயுதம்"
சினிமாவை குறை சொல்லும் முன் உங்கள் வீட்டில் டிவி சினிமாவை தூக்கி எறியுங்கள். அஸ்திவாரம் பலப்படும், அடுத்த தலைமுறை உருப்படும்.
------------------------------------------------------------------------------------------



நகைச்சுவை நடிகர் நாகேஷ் அவர்களின் தன்னம்பிக்கை மிக்க அருமையான வார்த்தைகள்...
- வானொலிப் பேட்டியொன்றில் நாகேஷ்
வானொலி: 
நியாயமாக உங்களுக்கு வரவேண்டிய நல்ல பெயர் மற்றவர்களுக்குச் செல்லும் போது உங்களுக்கு எப்படி இருக்கும்?
நாகேஷ்:
நான் கவலையே படமாட்டேன் சார்.
ஒரு கட்டடம் கட்டும் போது, சவுக்கு மரத்தை முக்கியமா வச்சு சாரம் கட்டி, குறுக்குப் பலகைகள் போட்டு, அதன் மேல பல சித்தாள்கள் நின்னு, கைக்குக் கை கல் மாறி கட்டடம் உயர்ந்து கொண்டே போய் பல ஆண்டுகளுக்குப் பிறகு அது முடிந்த பிறகு, அந்தக் கட்டிடத்துக்கு வர்ண ஜால வித்தைகள் எல்லாம் அடிச்சு, கீழ இறங்கும் போது ஒவ்வொரு சவுக்கு மரமாக அவிழ்த்துக் கொண்டே வருவார்கள்.
கட்டடம் முடிந்து கிரஹப் பிரவேசத்தன்று எந்தக் கட்டடம் கட்டுவதற்கு முக்கிய காரணமாக இருந்ததோ அந்தச் சவுக்கு மரத்தை யார் கண்ணிலும் படாமல் பின்னால் எங்கயோ மறைத்து வைத்துவிட்டு, வேறெங்கேயோ வளர்ந்த வாழை மரத்தை முன்னால் நட்டு கிரஹகப் பிரவேசம் நடத்தி அனைவரையும் வரவேற்பார்கள்.
அத்தனை பெருமையும் வாழை மரத்துக்குப் போய் விடும்.
இதில் உள்ள உண்மை என்ன தெரியுமா? அந்த வாழை மரம் மூன்று நாள் வாழ்க்கை தான் வாழும். ஆடுமாடுகள் மேயும். குழந்தைகள் பிய்த்தெடுப்பார்கள். பிறகு குப்பை வண்டியிலே போய்ச் சேரும்.
மறைந்து கிடக்கிறதே அந்தச் சவுக்கு மரம் கண்ணீர் விடுவதில்லை. அடுத்த கட்டடம் கட்டுவதற்கு தயார் நிலையில் என்றைக்கும் சிரித்துக் கொண்டேயிருக்கும்.!!!
நான் வாழை அல்ல...!
சவுக்கு மரம்....
Think positive always
-
-
இணையம்.

----------------------------------------------------------------------------------------------------------------------




ஆச்சி’ என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்பட்ட, நடிகை மனோரமா( வயது 78) இன்று நள்ளிரவு 12 மணிக்கு மேல் காலமானார். மாரடைப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தமிழ்சினிமாவின் தன்னிகரற்ற நடிகை மனோரமா, 1,500 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட மேடை நாடகங்களில் நடித்துள்ளார்.
சில ஆண்டுகளாகவே உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர், சமீபத்தில் விழாவில் பங்கேற்கும் அளவிற்கு உடல் நலம் பெற்றிருந்தார். மீண்டும் சினிமாக்களில் நடிக்கவிருப்பதாகவும் தெரிவித் தார். இந்நிலையில் அவர் மறைந்தது கலைத்துறையினரையும், ரசிகர்களையும் வருத்தப் பட வைத்திருக்கிறது.
மனோரமா! இவரது இயற்பெயர் கோபிசாந்தா. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் 26.5.1943 ல் பிறந்தார். இவரது பெற்றோர் காசி 'கிளாக்' உடையார் மற்றும் ராமாமிர்தம். மனோரமாவின் குடும்பத்தினர், அவர் சிறு வயதாக இருக்கும்போதே காரைக்குடி அருகே உள்ள பள்ளத்தூர் என்ற ஊருக்கு குடிபெயர்ந்தனர். நாடகங்களில் நடித்து அதன் மூலமாக திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்ற பின்னர் சென்னையில் வசித்து வந்தார்.
ஐந்து தலைமுறை நடிகர்களுடன் நடித்தவர் மனோரமா. 1000 திரைப்படங்களுக்கு மேல் நடித்ததற்காக கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார் மனோரமா. 2002ம் ஆண்டில் பத்ம ஸ்ரீ விருது பெற்றார். 1988ம் ஆண்டு, புதிய பாதை படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகை என்று தேசிய திரைப்பட விருது பெற்றார். தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது, பிலிம்பேரின் விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார்.
நடிகை மனோரமா வாழ்கை வரலாறு:.......................
தமிழ் திரைப்பட ரசிகர்களால் ‘ஆச்சி’ என அன்போடு அழைக்கப்படும் மனோரமா அவர்கள், இந்தியத் திரைப்படத்துறையில் மாபெரும் சாதனைப் படைத்த ஒரு புகழ்பெற்ற நடிகை ஆவார். தமிழ்த் திரையுலகம் தந்த முதல்வர்கள் அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், செல்வி ஜெயலலிதா மற்றும் ஆந்திர மாநில முதல்வர் என்.டி.ஆர் என ஐவருடன் நடித்த பெருமைக்குரிய ஒருவர், அவர் மட்டுமே. தமிழ் சினிமாவில் அவருடைய சாதனை மிகவும் வியப்புக்குரியது தான். அவர் சுமார் 5000-த்திற்கும் மேற்பட்ட நாடகங்களிலும், 1500-க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்து உலகப் புகழ்பெற்ற கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். அது மட்டுமல்லாமல், கலைத் துறைக்கு அவர் ஆற்றிய ஈடுஇணையற்ற பங்களிப்பிற்காக இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான ‘பத்ம ஸ்ரீ விருது’ வழங்கி கெளரவிக்கப்பட்டார்.
மேலும், தமிழக அரசின் ‘கலைமாமணி விருது’, ‘புதிய பாதை’ திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான ‘தேசிய விருது’, மலேசிய அரசிடம் இருந்து ‘டத்தோ சாமுவேல் சரித்திர நாயகி விருது’, கேரளா அரசின் ‘கலா சாகர் விருது’, ‘சினிமா எக்ஸ்பிரஸ் விருது’, சிறந்த குணச்சித்திர நடிகைக்காக ‘அண்ணா விருது’, ‘என்.எஸ்.கே விருது’, ‘எம்.ஜி.ஆர். விருது’, ‘ஜெயலலிதா விருது’ மற்றும் பல முறை ‘ஃபிலிம்ஃபேர் விருதுகள்’ எனப் பல விருதுகளை வென்று சாதனைப் படைத்துள்ளார். நாடக நடிகையாகத் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி, தமிழ் சினிமாவில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திரம் எனப் பல்வேறு கதாபாத்திரங்களை ஏற்று சுமார் 1200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து, திரைப்படத்துறை வரலாற்றில் மாபெரும் சாதனைப் படைத்த ‘ஆச்சி’ அவர்கள்.
பிறப்பு: மே 26, 1943
பிறப்பிடம்: மன்னார்குடி, தமிழ்நாடு மாநிலம், இந்தியா
பணி: திரைப்பட நடிகை
நாட்டுரிமை: இந்தியன்
பிறப்பு
கோபிசாந்தா என்னும் இயற்பெயர் கொண்ட அவர், 1943 ஆம் ஆண்டு மே 26 ஆம் நாள் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள மன்னார்குடி என்ற இடத்தில் தந்தையார் காசி கிளார்க்குடையார் என்பவருக்கும், தாயார் ராமாமிர்தம்மாள் என்பவருக்கும் மகளாகப் பிறந்தார்.
ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி
வறுமை மற்றும் பல குடும்பப் பிரச்சனைக் காரணமாக, இவரும் இவருடைய தாயாரும் இராமநாதபுரம் மாவட்டம் காரைக்குடிக்கு அருகிலுள்ள பள்ளத்தூர் என்ற இடத்தில் குடிபெயர்ந்தனர். தன்னுடைய பள்ளிப்படிப்பை பள்ளத்தூரிலுள்ள ஒரு ஆரம்பப் பள்ளியில் தொடங்கிய அவர், சிறுவயதிலிருந்தே பாடுவதில் ஆர்வம் பெற்று விளங்கினார். ஒரு காலகட்டத்தில் அவரது அம்மாவிற்கு ரத்தப்போக்கு ஏற்படவே, தன்னுடைய பள்ளிப்படிப்பை பாதியிலேயே முடித்துக்கொண்டு, ஒரு பண்ணையார் வீட்டில் குழந்தையைப் பார்த்துக்கொள்ளும் வேலைக்குச் சேர்ந்தார்.
நாடகத் துறையில் ஒரு பயணம்
ஒரு நாள் அவருடைய ஊரில் ‘அந்தமான் காதலி’ என்ற நாடகத்தை அரங்கேற்றினார்கள். அதில் பெண் வேடம் போட்டவருக்கு சரியாக பாடவரவில் எனக் கருதி, மனோரம்மாவை அதில் நடிக்க வைத்தார்கள். அந்த நாடகத்தில் இவருடைய பாட்டையும், குரல் இனிமையையும், நடனத்தையும் பார்த்த அனைவரும் இவரை வெகுவாகப் பாராட்டினார்கள். அது மட்டுமல்லாமல், இந்த நாடகத்தில் பணியாற்றிய இயக்குனர் சுப்பிரமணியனின் உதவியாளர் திருவேங்கடமும், ஆர்மோனியம் வாசித்த தியாகராஜனும் அவருடைய பெயரை ‘மனோரமா’ என மாற்றினார்கள். இதனைத் தொடர்ந்து, பல நாடகங்களில் நடிக்கத் தொடங்கிய அவர், ‘நாடக உலக ராணி’ என்று போற்றும் அளவிற்கு உயர்ந்தார்.
திரைப்படத்துறையில் அவரது பயணம்
அவர், வைரம் நாடக சபாவில் நடித்துக்கொண்டிருந்த பொழுது, சென்னையில் சில நாடகங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது.
அப்பொழுது, ஜானகிராமன் என்பவர் இவரைத் தேடிவந்து, தான் “இன்ப வாழ்வு” என்னும் திரைப்படத்தை தயாரிக்க இருப்பதாகவும், அதில் நடிக்க ஒப்பந்தம் செய்ய வந்திருப்பதாகவும் கூறினார். ஆனால், அந்தப் படம் பாதியிலேயே நின்றுவிடவே, அதன் பிறகு கவிஞர் கண்ணதாசனின் ‘ஊமையன்கோட்டை’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். அந்தப் படமும் ஆரம்பத்திலேயே நின்று விடவே, மிகவும் மனமுடைந்து போனார். இருந்தாலும், கவிஞர் கண்ணதாசன் அவர்கள், 1958 ஆம் ஆண்டு ‘மாலையிட்ட மங்கை’ என்ற படத்தில் நகைச்சுவை நடிகையாக சினிமா திரையில் முதன் முதலாக மனோரமாவை அறிமுகம் செய்தார்.
கலையுலக வெற்றிப் பயணம்
தன்னுடைய முதல் திரைப்படத்திற்கு பிறகும், பல நாடகங்களில் நடித்து வந்த அவர், ‘மாலையிட்ட மங்கை’, ‘களத்தூர் கண்ணம்மா’, ‘கொஞ்சும் குமரி’, ‘பாலும் பழமும்’, ‘பார் மகளே பார்’, ‘திருவிளையாடல்’, ‘அன்பே வா’, ‘தில்லானா மோகனாம்பாள்’, ‘சரஸ்வதி சபதம்’, ‘கந்தன் கருணை’, ‘எதிர் நீச்சல்’, ‘கலாட்டா கல்யாணம்’, ‘ஆயிரம் பொய்’, ‘பட்டிக்காடா பட்டணமா’, ‘காசேதான் கடவுளடா’ எனத் தொடர்ந்து பல வெற்றிப்படங்களில் நடித்து, தமிழ் சினிமாவில் தனக்கெனத் தனி இடம் பிடித்தார்.
1958 ஆம் ஆண்டு கவிஞர் கண்ணதாசன் அவர்களின், ‘மாலையிட்ட மங்கை’ என்ற படத்தில் தன்னுடைய சினிமா வாழ்க்கையைத் தொடங்கிய அவர், இன்று வரை சுமார் 1000 – த்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து ‘உலக சாதனை கின்னஸ் புத்தகத்தில்’ தன்னுடைய பெயரை பதிவு செய்து, மாபெரும் சாதனைப் படைத்துள்ளார். இன்னும் சொல்லப்போனால், தமிழ் திரையுலகம் தந்த முதல்வர்கள் அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், செல்வி ஜெயலலிதா மற்றும் ஆந்திர மாநில முதல்வர் என்.டி.ஆர் என ஐவருடன் நடித்த பெருமைக்குரிய ஒருவர், மனோரமா மட்டுமே. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, சிங்களம் எனப் பல மொழிகளில் தனக்கே உரித்தான நடிப்பில் முத்திரைப் பதித்துள்ளார். இதுமட்டுமல்லாமல், ‘காட்டுப்பட்டிச் சரித்திரம்’, ‘அன்புள்ள அம்மா’, ‘தியாகியின் மகன்’, ‘வானவில்’, ‘ஆச்சி இன்டர்நேஷனல்’, அ’ன்புள்ள சிநேகிதி’, ‘அல்லி ராஜ்யம்’, ‘அவள்’, ‘ரோபோ ராஜா’, ‘மனுஷி’, ‘வா வாத்தியாரே’, ‘டீனா மீனா’ போன்ற பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.
அவர் நடித்த சில திரைப்படங்கள்
‘மாலையிட்ட மங்கை’, ‘புதிய பாதை’, ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’, ‘ரத்த திலகம்’, ‘கொஞ்சும் குமரி’, ‘அன்பே வா’, ‘கந்தன் கருணை’, ‘தில்லானா மோகனாம்பாள்’, ‘கலாட்டா கல்யாணம்’, ‘எங்கள் தங்கம்’, ‘காசேதான் கடவுளடா’, ‘அந்தமான் காதலி’, ‘வாழநினைத்தால் வாழலாம்’, ‘என் கேள்விக்கு என்ன பதில்’, ‘குப்பத்து ராஜா’, ‘பில்லா’, ‘காளி’, ‘தீ’, ‘வாழ்வே மாயம்’, ‘போக்கிரி ராஜா’, ‘தங்க மகன்’, ‘பாயும் புலி’, ‘அடுத்த வாரிசு’, ‘சம்சாரம் அது மின்சாரம்’, ‘நான் அடிமை இல்லை’, ‘அன்னை என் தெய்வம்’, ‘பேர் சொல்லும் பிள்ளை’, ‘உன்னால் முடியும் தம்பி’, ‘பாட்டி சொல்லத் தட்டாதே’, ‘இது நம்ம ஆளு’, ‘குரு சிஷ்யன்’, ‘அபூர்வ சகோதரர்கள்’, ‘நடிகன்’, ‘மன்னன்’, ‘எங்கிட்ட மோதாதே’, ‘மைக்கேல் மதன காமராஜன்’, ‘இதயம்’, ‘சின்னத் தம்பி’, ‘சின்ன கவுண்டர்’, ‘சிங்கார வேலன்’, ‘அண்ணாமலை’, ‘எஜமான்’, ‘ஜென்டில்மேன்’, ‘வியட்நாம் காலனி’, ‘மே மாதம்’, ‘காதலன்’, ‘நந்தவனத் தேரு’, ‘நான் பெத்த மகனே’, ‘முத்துக் காளை’, ‘இந்தியன்’, ‘லவ் பேர்ட்ஸ்’, ‘அருணாசலம்’, ‘மறுமலர்ச்சி’, ‘புதிய பாதை’, ‘பாண்டவர் பூமி’, ‘மாயி’, ‘சாமி’, ‘பேரழகன்’.
தனிப்பட்ட வாழ்க்கை
சபா நாடகக் குழுவில் நடித்து கொண்டிருந்த பொழுது, அந்த நாடகக் குழுவில் முக்கிய பொறுப்பில் இருந்த எஸ். எம். ராமநாதன் அவர்கள், மனோரமாவைக் காதலித்தார். அதன் பிறகு, அவருடைய காதலை மனோரமா ஏற்றுக்கொண்டதால், திருச்செந்தூரிலுள்ள முருகன் கோவிலில் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு பூபதி என்ற மகன் உள்ளார்.
விருதுகளும், மரியாதைகளும்
தமிழ் நாடு அரசின் ‘கலைமாமணி விருது’.
1988 – ‘புதிய பாதை’ திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான ‘தேசிய விருது’.
2002 – மத்திய அரசால் ‘பத்ம ஸ்ரீ விருது’.
1000 திரைப்படங்களு மேல் நடித்ததற்காக ‘கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில்’ இடம்பெற்றுள்ளார்.
மலேசிய அரசிடம் இருந்து’ டத்தோ சாமுவேல் சரித்திர நாயகி விருது’.
கேரளா அரசின் ‘கலா சாகர் விருது’.
‘சினிமா எக்ஸ்பிரஸ் விருது’.
சிறந்த குணச்சித்திர நடிகைக்காக ‘அண்ணா விருது’, ‘என்.எஸ்.கே விருது’, ‘எம்.ஜி.ஆர். விருது’, ‘ஜெயலலிதா விருது’ எனப் பல்வேறு விருதுகளை, தமிழ் நாடு அரசு அவருக்கு வழங்கி கெளரவித்தது.
சினிமா உலகில், நகைச்சுவை என்றால் நடிகர்கள் மட்டும் தான் என்னும் நிலையை மாற்றி, நடிகைகளும் காமெடியில் சாதனைப் படைக்க முடியும் என்று நிரூபித்தவர், மனோரமா அவர்கள். திரையுலக வரலாற்றில் 1000 படங்களுக்கு மேல் நடித்து, உலகப் புகழ் பெற்ற கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்ற சாதனை; இந்தியாவில் ஐந்து முதல்வர்களுடன் நடித்த பெருமை; தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, சிங்களம் என ஆறு மொழிகளிலும் சிறந்த குணச்சித்திர நடிகை என இன்னும் பல அடையாளங்களை இவருக்கு சொல்லிக்கொண்டே போகலாம். குறிப்பாக சொல்லப்போனால், சினிமாவில் நகைச்சுவை, குணச்சித்திரம் என இவர் ஏற்று நடிக்காத கதாபாத்திரங்களே கிடையாது எனலாம். ஒரு சாதாரண மேடை நடிகையாக தன்னுடைய கலையுலக வாழ்க்கையைத் தொடங்கி, சினிமாவில் எம்.ஜி.ஆர், சிவாஜி என அன்றைய காலம் முதல் இன்றைய தலைமுறை வரை சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ் திரையுலகை ஆட்சி செய்து கொண்டிருந்தார் என்று சொன்னால் அது மிகையாகாது.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடியில் பிறந்த இவரின் இயற்பெயர் கோபிசாந்தா. தென்னிந்தியாவில் அண்ணாதுரை, கருணாநிதி இருவரும் நாடக மேடைகளில் மனோரமாவுடன் நடித்திருக்கிறார்கள். தவிர ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆர், ஆகியோருடனும், என். டி. ராமராவுடன் தெலுங்கு படங்களில் என 5 முதல்வர்களுடன் நடித்திருக்கிறார்.
நடித்த சில முக்கியபடங்கள்:
5 தலைமுறை நடிகை
*மாலையிட்ட மங்கை (முதல் திரைப்படம் )
*தில்லானா மேகனம்பாள்
*களத்தூர் கண்ணம்மா
*திருவிளையாடல்
*அன்பேவா
*கந்தன் கருணை
*கலாட்டா கல்யாணம்
*காசேதான் கடவுளடா
*முகமது பின் துக்ளக்
*அனுபவி ராஜா அனுபவி
*பாட்டி சொல்லை தட்டாதே
*சம்சாரம் அது மின்சாரம்
*சின்னக்கவுன்டர்
*அபூர்வ சகேதாரர்கள்
*எஜமான்
*மன்னன்
*அண்ணாமலை
*ரசிகன்
*சின்னதம்பி
*சூரியன்
*கிழக்கு வாசல்.

-----------------------------------------------------------------------------------------

நேற்று நடிகர் சங்க தேர்தலால் தெரிந்து கொண்ட தகவல்களில் முக்கியமானது:
தமிழ்நாட்டில் மொத்தம் 3000 நடிகர்கள் இருக்கிறார்கள் என.
தமிழ்நாட்டின் ஜனதொகை 6 கோடி என வைத்துக்கொண்டால் இந்த 3000 பேரில் இருந்து யாரோ ஒருவர் தான் கடந்த 40 ஆண்டுகளாக முதல்வராக இருந்து வந்திருக்கிறார்கள். ஒட்டுமொத்த ஊடகங்களும், தமிழ்நாட்டின் பத்திரிக்கைகளும், விளம்பர உலகமும் இந்த 3000 பேரை நம்பியே உள்ளன. அதிலும் இந்த 3000ல் பெரும்பாலானோர் நாடக, சின்னதிரை நடிகர்கள். உண்மையான அதிகார மையம் என்பது இதில் ஒரு 50 பேர் இருக்கலாம்.
ஆக மைனாரிட்டியிலும் மைனாரிட்டியான இந்த சிறு துறையே தமிழகத்தின் எதிர்காலத்தையே தீர்மானிக்கிறது.
இவர்களுடன் பெரிய தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் என சேர்த்தால் ஒரு 100 பேர் மொத்த தமிழகத்தையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள்.
இவர்களுக்கு எதாவது ஒன்று என்றால் நாடே அழுகிறது, மக்கள் வேலை வெட்டியை விட்டுவிட்டு இவர்கள் வாழ்க்கையில் நிகழும் சம்பவங்களுக்காக வருத்தமோ, மகிழ்ச்சியோ அடைகிறார்கள். கட்சிகள், இயக்கங்கள் துவக்கபடுகின்றன. இவர்களை பற்றிய செய்திகளாலேயே ஊடகங்கள் 'சர்வைவ்' ஆகின்றன.
இந்த பிரபலங்களுக்கும் நமக்கும் இருக்கும் ஒரே வித்தியாசம் என்ன?
இவர்கள் இவர்களை பற்றி மட்டுமே கவலைபடுவார்கள். அம்பானி எங்காவது எந்த நடிகனுக்காவது ரசிகர் மன்றம் ஆரம்பித்ததையோ, வம்சம் சீரியலை உட்கார்ந்து பார்த்ததையோ நம்மால் காண இயலுமா?
ஆனால் நாம் இவர்களை போல இல்லாது நம்மை பற்றி கவலைபடாது இந்த பிரபலங்களை பற்றிய செய்திகளை படித்தே வாழ்க்கையில் அதிக நேரங்களை வீணடிக்கிறோம்.
அவர்களை மாதிரி நாமும் நம்மை பற்றி சிந்திக்க கற்றுகொண்டால் அதுவே உருப்படுவதற்கான வழியாகும்.
அதை விட்டுட்டு ஒட்டுமொத்த தமிழ்நாடும் நடிகர் சங்க தேர்தலை முன்னிட்டு பைத்தியமாக ஆனதை நினைத்தால் தலையை குட்டிசுவத்தில் முட்டிக்கலாம் என தான் தோன்றுகிறது.
அவர்கள் தான் படத்திலேயே "போயி புள்ள குட்டிய படிக்க வைங்க"னு சொல்றாங்களே?
'ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலை இல்லை' என படத்தில் பாடுகிறார்கள்.
அதை எல்லாம் கேட்கிறோமா நாம்?
நாளைக்கு சரத்குமார் தோத்தத்துக்காக யாரச்சும் தீக்குளிச்சாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
----------------------------------------------------------------------------------------



திண்டுக்கல்.

🐅திண்டுக்கல் மாநகரம்🇮🇳 .
----------------------------
திண்டுக்கல் பெருமை & அதன் சிறப்பு பற்றி.........
👇👇👇👇👇👇👇
💥திண்டுக்கல் என்றாலே மிக சிறப்பு வாய்ந்த..
மலைக்கோட்டையும்
உலக புகழ்மிக்க பூட்டு..
மற்றும் தோல் பதனிடுதல்....
💥திராட்சைக்கு திண்டுக்கல்...
💥எண்ணை புரோட்டாவுக்கு & மாம்பழத்தத்திற்கும் நத்தம்..
💥மல்லிகை பூ மதுரைக்கு பெருமைஇல்லை. நம்ம
நிலக்கோட்டைக்குதான் உலக பெயர் போனது இது பலருக்கு தெரியாது...
💥மலைகளின் இளவரசி
கொடைக்கானல்..
இதமான தென்றல் காற்று சாரல் மழை..
எல்லா நாளும் வெளிநாட்டவர் வருகை....
💥தமிழ்நாட்டின் 2வது வருமானம்..
நம்ம பழனி முருகன் கோவில் காணிக்கை மற்றும் தெய்வ மனம் மருத்துவ குணம் கொண்ட திருபிரசாதம்🌹பஞ்சாமிர்தம்🌹
மற்றும் வருடத்திற்க்கு தை பூசம் பங்குனி உத்திரம் ஆகிய விழா காலங்களில் கோடிக்கணக்கான எல்லா மதத்தினரும் தரிசணம் செய்கின்றனர்...
💥வெத்தலைக்கு வத்தலக்குண்டு...
💥ஆடி மாததில் கணக்கில் கொள்ளாத அளவுக்கு கிடா வெட்டும் வத்தலக்குண்டு விராலிபட்டி கோட்டை கருப்பணசாமி கோவில்...
💥தென்னிந்திய புகையிலை ஆராய்ச்சி மையம் வேடசந்தூர்...
💥 முருகனின் 8வது படை வீடான திருமலைகேனி..
💥 சுவைமிகுந்த பாரம்பரியமிக்க பால்பன் 24மணி நேரமும் கிடைக்கும் நம்ம கோபால்பட்டி..
💥நயமான சுவைமிக்க தரமான சாரயத்திற்க்கு...நம்ம வக்கம்பட்டி
ஆ.வெள்ளோடு...
💥 பக்தர்கள் அதிகம் வருகை தரும் தமிழ்நாட்டில் சிறப்புமிக்க
பைரவர் கோவில் தாடிக்கொம்பு...
💥 தக்காளி மார்க்கெட்க்கு
அய்யலூர்.
💥 தமிழகத்தில் மிக பெரிய காய்கனி மார்கெட் மற்றும் இந்தியாவில் எல்லா மாநிலத்திற்கும் காய்கனி
ஒட்டன்சத்திரத்திலிருந்து அனுப்பப்படுகின்றன...
மற்றும் மாட்டுச்சந்தை
💥 தென்தமிழகத்தின் கேட் நம்ம திண்டி மாநகரம்..
💥 காஷ்மிர் -2- கன்னியாகுமரி
தேசியநெடுஞ்சாலை NH-7 மற்றும் இரயில் போக்குவரத்து
திண்டுக்கல் வழியாக செல்கின்றன...
💥 உலகத்தில சுவைமிகுந்த பிரியாணி என்றாலே..
நாவிற்கு எச்சல் ஊறும் நம்ம
திண்டுக்கல் பிரியாணி🍴
💥தமிழகத்தில் எங்கும் காணத பஸ் ஸ்டாண்ட் நுழைவாயில் 8(வழிகள்) உள்ளது..
💥 மா பலா வாழைபழம் என்ற முக்கனிக்கு சொந்தம் சிறுமலை...
இதமான சிறுமலை சாரல்...
மூலிகை சூழ்ந்த அடர்த்தியான வனகாடுகள்..
அரிய வனவிலங்கும்..
ஆஞ்சநேயர் தூக்கி சென்ற மூலிகை மலையின் சிறிய உதிரிதான் நம்ம சிறுமலை...
💥 ஆடிமாதம் மற்றும் மாசி மாதம் விழாகாலங்களில் உலக புகழ்பெற்ற திண்டுக்கல் கோட்டைமாரியம்மன் திருவிழா...
💥 தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் புகழ்மிக்க திருக்கோவில்...
💥 பல மாநிலங்களை இணைக்கும் மேற்கு தொடர்ச்சிமலை..
💥 நம்ம மாவட்டத்தை சுற்றி மதுரை
தேனி
சிவகங்கை
புதுக்கோட்டை
திருச்சி
கரூர்
திருப்பூர்
கோவை ஆகிய மாவட்டமும், கேரளா மாநிலமும் எல்லையாகவும் உள்ளது.... இதைவிட சிறப்பு ஏது...
💥 வானம் அதிர வீரக்கல்....
💥பழமை வாய்ந்த கிறிஸ்துவ ஆலயம் அதிகம் உள்ள மாவட்டம்..
💥 இந்தியாவில் 2வது மிக பெரிய பள்ளிவாசல் பேகம்பூர்
💥 உலக புகழ் புண்ணியமிக்க தலமான சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்லும் முக்கிய போக்குவரத்து சாலை திண்டுக்கல்-தேனி..
💥இதலெல்லாம் விட
💘பாசத்திற்கும்
வீரத்திற்கும்🔫
அடிக்கவும் அடியாட்களுக்கு
அடங்காதவனும்,
அலபரைக்கும்
அஞ்சாதவனும்,
அருவாமீசைக்கும்
அராஜகத்திற்க்கும்
அடிபணியாதவனும்,
அன்புக்கு அடிபணியுரவனும்
எல்லா பாசகார நண்பனும்
திண்டுக்கல்லதான்.
🔪ஆல் ஏரியா மாஸ்🏆கிங்.. நாங்கதான்.
இப்படி சொல்லிக்கிட்டே போகலாம்
திண்டுக்கல் மாநகர பெருமைய....
🎿 "உப்பு இல்லாத சாப்பாடும்🍛..
🌆திண்டுக்கல்லுல வாழாத வாழ்க்கையும் சப்புனுதான் இருக்கும்".
⏩அடி கொடுக்க அனுமந்ராயன் கோட்டை
➡நெஞ்ச நிமித்னா நிலத்துக்கு உரமாக்க நிலக்கோட்டை
↪ஆல சிதைக்க சித்தையன்கோட்டை
⬇பகைக்கு பாளையங்கோட்டை
↗வெடி கொடுக்க வேல்வார்கோட்டை
▶வீரத்திற்கும் கம்பீரத்திற்கும் மலைகோட்டை
🔀எங்ககிட்ட பன்னாத சேட்ட..
✅மொத்ததுல திண்டுக்கல் எங்க கோட்டை....

மனவளக் கட்டுரைகள்.

மனதிற்கான மருந்துகள்.
மனவளக் கட்டுரை.
1) செலவுகளுக்கு யோசிக்காதீர்கள். மண்டையைப் பிய்த்துக்
கொள்ளாதீர்கள். உங்கள் தேவைகளுக்கு நீங்கள் செலவழிக்காவிட்டால் - யார் செலவழிப்பார்கள்? ஆகவே தேவைகளுக்குப் பணத்தைச் செலவழியுங்கள்.
2. இரசிக்க வேண்டியதை ரசியுங்கள். அனுபவிக்க வேண்டியதை அனுபவியுங்கள். மொத்தத்தில் enjoy பண்ண வேண்டியதை எஞ்சாய் பண்ணுங்கள்
3. முடிந்த அளவு, தான, தர்மம் செய்யுங்கள்.பணத்தை வைத்துப்
பிறருக்கு உங்களால் முடிந்த அளவிற்கு உதவுங்கள்.
4.உங்கள் குழந்தைகளையோ அல்லது பேரக்குழந்தைகளையோ,நீங்கள் செத்தபிறகுதான், உங்கள் பணம் அவர்களுக்குக் கிடைக்கும்
என்கின்ற நிலைமையை, நினைப்பை உண்டாக்கிவிடாதீர்கள்.
5. நீங்கள் செத்த பிறகு உங்களுடைய பணம் என்ன ஆகும் என்றோ அல்லது உங்களை யார் பாராட்டுவார்கள் அல்லது திட்டித் தீர்ப்பார்கள் என்ற கவலை எல்லாம் உங்களுக்கு வேண்டாம். அதைக் கேட்பதற்கோ அல்லது பார்ப்பதற்கோ நீங்கள் இருக்கப்போவதில்லை.
6. நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்து, சேர்த்த பணம் சொத்து எல்லாம்
ஒரு நாள் உங்களை விட்டுப் போகப் போகிறது. அதைத் தடுப்பதற்கும்
அல்லது காப்பாற்றுவதற்கும் நீங்கள் இருக்கப் போவதில்லை. அதை
மனதில் வையுங்கள்!
7. உங்கள் குழந்தைகளுக்காக அதிகம் கவலைப் படாதீர்கள். அவர்களின் வாழ்க்கை அவர்களுடைய தலைவிதிப்படிதான் நடக்கும். அதில் உங்கள் பங்காற்றலுக்கு எந்த வாய்ப்பும் இல்லை. நோ சான்ஸ் ஃபார் யூ!
8. நீங்கள் மாங்கு மாங்கென்று என்னதான் உழைத்தாலும், தினசரி
வாழ்க்கை ஒரே மாதிரி சீராக இருக்காது. தொட்டிலில் படுத்திருந்த
காலத்தில் இருந்து சுடுகாட்டில் படுக்க வைக்கப்படும் காலம்வரை
ஒரே மாதிரி இருந்தால், அதில் சுவாரசியம் எங்கே இருக்கும்?
ஒரு நாள் மகிழ்ச்சியோடு இருப்பீர்கள். ஒரு நாள் மகிழ்ச்சியின்றி
இருப்பீர்கள். எல்லா தினங்களையும் ஒரே மனப்போக்கில் ஏற்றுக்கொள்ளுங்கள்.
”வந்ததை வரவில் வையுங்கள்
சென்றதை செலவில் வையுங்கள்”
அதுதான் கவியரசர் கண்ணதாசன் எழுதிவைத்த மகிழ்ச்சிக்கான
சூத்திரம்!
9. எப்போதும் உற்சாகமாக இருந்தால் உங்களுக்கு ஏற்படும் நோய்,நொடிகள் தானாகவே சரியாகும். உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் இருப்பவரை நோய் நொடிகள் அண்டாது!.
10. உங்கள் உறவினர்களையும், நண்பர்களையும் போற்றி வைத்துக்கொள்ளுங்கள். அவர்கள் இல்லையேல் உங்கள்
வாழ்க்கை தனிமைப்பட்டுப் போய்விடும்!
11. மன அழுத்தம் ஏன் ஏற்படுகிறது தெரியுமா? எதிர்பார்ப்பிற்கும்,
நடப்பிற்கும் உள்ள இடைவெளிதான் மன அழுத்தத்தை உண்டு
பண்ணும். அந்த இடைவெளி அதிகமாக அதிகமாக மன அழுத்தமும் அதிகமாகும். ஆகவே எதையும் எதிர்பார்க்காதீர்கள். எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ளுங்கள்
12. அடிக்கு அடி, சரிக்குச் சரி, என்ற போட்டி மனப்பான்மையை
உதறித் தள்ளுங்கள். ஒரு நாய் நம்மைக் கடித்தால் அதை நாம் திருப்பிக்கடிக்க முடியாது. ஆகவே உங்கள் தராதரத்தை, மேன்மையை விட்டுக் கொடுக்காதீர்கள். அடுத்தவர்களுக்கு உதாரணமாக இருங்கள்.அதுதான் நல்லது.
சுருக்கமாக, எதையும் ஒரு முறைக்கு இருமுறை யோசித்துச் செய்யுங்கள். புத்திசாலித்தனத்துடன் நடந்து கொள்ளுங்கள். நடப்பதை ஏற்றுக்கொள்ளுங்கள். வாழ்க்கை சுவையாக இருக்கும்.
--------------------------------------------------------------------

உங்கள் மனைவி அல்லது காதலியிடம் நல்ல பெயர் வாங்க சில ஐடியாக்கள் இங்கே உங்களுக்கு......Just for FUN.
1.காலையில் எழுந்தவுடன் 'ஹாய்..குட்மார்னிங்'ன்னு ஒரு SMS அனுப்பனும். உன் குரலை கேட்டாத்தான் இன்னைக்கு பொழுதே நல்லபடியா விடியுதுன்னு ஒரு அப்பட்டமான பொய்யை அவிழ்த்து விடணும் (ஒருரூபாய்செலவுதான்.என்னங்க
பண்றது? பண்ணித்தான் ஆகணும்.) இதே விஷயத்தை ராத்திரி தூங்குறதுக்கு முன்னாடியும் நீங்க செஞ்சாகணும்.
2.அவங்களைப் பார்க்கபோறதுக்கு முன்னாடி உங்க செல்ஃபோனோட ஸ்கிரீன்சேவர்ல அவங்களோட புகைப்படத்தை கண்டிப்பா வெச்சுக்கணும். (எப்பவும் உன்முகத்தையே பார்த்துகிட்டே இருக்கணும்ன்னுதான் இந்தமாதிரி வெச்சிருக்கேன்னு சொல்லுங்க. இதுலையே அவங்க க்ளீன் போல்ட்)
3.அவங்க பேரோட முதல் எழுத்தை பைக்-கீ-செயின்ல தொங்கவிட்டுக்குங்க. எப்பவும் நீ என் கூடவே இருக்கணும்ன்னு தான் இந்தமாதிரி செய்யுறேன்னு ஒரு பிட்டை விடுங்க. அப்புறம் பாருங்க...
4.சினிமாவுக்கு கூட்டிட்டு போனீங்கன்னா படத்தை பார்க்கறீங்களோ இல்லையோ கண்டிப்பா ஐந்துநிமிஷத்துக்கு ஒருவாட்டி அவங்களை திரும்பி திரும்பி பார்க்கணும். 'எதுக்கு என்னையே பார்க்குறீங்க'ன்னு கேட்பாங்க. 'உன்னைப் பார்க்கும்போது இருக்கிற சுவாரஸ்யம் படம் பார்க்கும் போது இல்லை'ன்னு நீங்க சொல்லணும். (வேறவழி இல்லைங்க. இந்த மாதிரி எல்லாம் நாம டயலாக் விடணும்ன்னு அவங்க எதிர்பார்ப்பாங்க)
5.அவங்க பேர்ல நிச்சயம் ஏதாவது தமிழ்பாட்டு வந்திருக்கும். அந்த பாட்டை எப்படியாவது தேடி கண்டுபிடிச்சு ரிங்டோனா வெச்சுக்குங்க. அவங்க உங்ககிட்ட சண்டை போடும்போது, உங்க ஃபிரண்டைவிட்டு உங்க நம்பருக்கு கால் பண்ண சொல்லுங்க. அந்தபாட்டு வந்த உடனே அவங்களை பாருங்க. சண்டை எல்லாம் எங்கே போகுதுன்னே தெரியாது.
6.கவிதைங்கிற பேர்ல எதையாவது நீங்க கிரீட்டிங் கார்ட்ல கிறுக்கிக் கொடுத்தே ஆகணும். அந்த கவிதைகள்ல
வானம்,கடல்,குயில்,தேவதை,மயில்,போன்ற வார்த்தைகள் கண்டிப்பா இருந்தே ஆகணும்.
7. "நீரொம்ப அழகா இருக்கே" ங்கிற அகில உலக பொய்யை ஒரு நாளைக்கு ஐந்து வாட்டியாவது நீங்க சொல்லியே ஆகணும். (இதுக்கு நீங்க கடவுள்கிட்ட தனியா மன்னிப்பு கேட்டுக்குங்க)
8.ஹோட்டலுக்கு கூட்டிட்டு போனீங்கன்னா 1st நீங்க ஆர்டர் பண்ணக்கூடாது. மெனுகார்டை அவங்ககையில கொடுத்து, அவங்களைத்தான் ஆர்டர் பண்ண சொல்லணும்.புரியுதா? (பெண்களோட உணர்வுகளுக்கு நீங்க மதிப்பு கொடுக்குறவர்ன்னு அவங்களுக்கு தெரியணும் இல்லை. அதுக்குத்தான்)
9.அவங்க எப்படித்தான் ட்ரஸ் பண்ணாலும், "இந்தட்ரஸ்ல நீ தேவதை மாதிரி இருக்கேன்னு மனசாட்சியை கழட்டிவெச்சிட்டு பொய் சொல்லணும்".(ராத்திரியில நீங்க தூங்கும் போது தேவதைங்க உங்க கண்ணை குத்தும். சமாளியுங்க)
10.ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயம். அவங்க தோழிங்ககிட்ட பேசும் போது ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும். அவங்க தோழிங்களை நீங்க கண்டுக்காத மாதிரியே இருக்கணும். ஏன்னா பல பிரச்சனைகளோட தொடக்கம் இங்கே இருந்துதான் ஆரம்பிக்குது.
இந்த விஷயங்களை எல்லாம் கடைபிடிச்சு பாருங்க.உங்க காதலி அல்லது மனைவி உங்களை தலையில தூக்கி வெச்சு கொண்டாடுவாங்க.
--------------------------------------------------------------------------------


எனது பக்கம்............

கள்ளங்கபடமற்ற இந்த சிரிப்பு
மட்டுமே கலப்படமில்லாதது!
-
எனது ஒன்றரை வயது பேத்தி 'பிரணவி'.

படமும் பாடமும்....










விஜயகாந்த் பற்றி........

விஜயகாந்தை கிண்டல் செய்வதற்கு முன் சில உண்மைகளை தெரிந்து கொள்ளுங்கள்,
1. 1982 முதல் 2000வரை நடிகர் சங்கத்தில் நடைபெற்றிருந்த ஊழல்களின் விளைவாக சங்கத்தின் கடன்சுமை கோடிகளில் இருந்தது. தான் தலைமையேற்று சொந்தப்பணம்10 லட்சம், கலைநிகழ்ச்சிகள் என கடனை தன் நிர்வாக திறமையால் அடைத்தவர் விஜயகாந்த். 1கோடிக்கு மேல் லாபம் சங்கத்தில் வைத்துவிட்டு,
கட்சி துவங்கியவுடன் கட்சித்தலைவர், சங்கத் தலைவர் என இரு பதவிகளில் இருக்க கூடாது என்று எண்ணி சங்கத் தலைவர் பதவியை விட்டு விலகினார்.
2. இவர் அவதூறாகப் பேசினார் என்றுதான் வழக்குகள் உள்ளனவோ தவிர, ஒரு முறைகேடு புகார் கூட இல்லாத இந்திய மாநிலங்களின் ஒரே எதிர்கட்சி தலைவர்.
3. கட்சி நிதி மாநாட்டு நிதி என்று கடைகளில் வசூல் செய்யக் கூடாது என்று கூறியுள்ள ஒரே கட்சி தலைவர். இதுவரை மாநாட்டிற்காக அது இது எனக் கூறி கடை அதிபர்கள் , நகைக்கடை அதிபர்களிடம் பணவசூல் செய்யக் கூடாது என்று கட்சி நடத்துபவர்.
4.கட்சி நிதி வாங்கிக் கொண்டு MLA சீட் தராத நபர். இவரின் 29 MLA களில் பலர் ஏழைகளாய் இருந்து MLA ஆன பிறகுதான் லோன் பெற்று கார் வாங்கியவர்கள்.
5. இவரது MLA களில் சிலர் இவரை தான் ஏமாற்றினார்களே தவிர , இவர் இதுவரை யாரையும் ஏமாற்றியதில்லை.மேலும் மருத்துவமனைகளுக்கு இலவச பொருளுதவி . மேலும் நடிகராக இருந்த காலத்தில் இயற்கை சீற்ற பாதிப்புகாலங்களில் அதிக நிதி கொடுக்கும் நடிகர் இவர்தான்.
விஜயகாந்த் உண்மையான மனிதர்.கோபம் அவரது இயல்பான சுபாவம். தைராய்டு கோளாறு எனவே பேச்சில் சற்று தடுமாற்றம் வரும்.அதற்காக அவரை கிண்டல் செய்ய வேண்டாம்.
நல்லவர்களை கிண்டல் செய்யவேண்டியதில்லை. எவ்வளவோ ஊழல்வாதிகள் கட்சி நடத்துகிறார்கள் பேச்சுத்திறமையை மட்டும் வைத்துக் கொண்டு அவர்களை கிண்டல் செய்வதை விடுத்து, விஜயகாந்த் போன்ற நல்லவர்களை கிண்டல் செய்வதை தவிர்க்கலாமே.
நான் விஜயகாந்த் கட்சியை சார்ந்தவன் அல்ல என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
'மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் இருக்கும்'

தீபாவளி............

தீபாவளி வரப்போகிறது. சாதாரணமாக 300 கோடி ரூபாய்க்கும் மேல் பட்டாசு வெடிக்க போகிறோம்..
வருடத்தில் ஒரு தடவை தான், பரவாயில்லை காசை பொருட்படுத்தாமல் வெடிப்போம்..
ஆனால் வெடிப்பது சிவகாசி பட்டாசாக இருக்கட்டும்., சீனப்பட்டாசுகள் பயன்படுத்த வேண்டாம்..நாம் கரியாக்கும் காசினால் தமிழர்கள் வாழ வேண்டும்...
சீனர்கள் பிழைக்க நாம் பண்டிகை கொண்டாடத் தேவையில்லை.. தயவு செய்து பகிர்வு கொள்ள வேண்டும்...

--------------------------------------------------------------------------------------------------------------------------------
அனைவரும் விரும்பும் தீபாவளி இந்த வருடமும் வரப்போகிறது.
புத்தாடை பளபளக்க இனிப்புகளோடு மத்தாப்பு, வெடி, வாண வேடிக்கை என வழக்கம் போல் தீபாவளியை நாம் கொண்டாடபோகிறோம். கொஞ்சம் யோசிப்போமா?
பல்லயிரக்கணக்கான குழந்தை தொழிலாளர்களின் வாழ்கையை கெடுத்து அவர்களின் உடல்நலனை காவு கொடுத்து கனவுகளை சிதைத்து உருவாக்கப்பட்டது தான் மத்தாப்பு, வெடி, வாண வேடிக்கை.
...See More

சமுதாய பிரச்சனைகள்.



சிந்திக்க சில விஷயங்கள்.
கும்பகோணத்தில் 83 பிஞ்சு உள்ளங்களை தீயின் கோர நாக்குக்கு பலி கொடுத்த பிறகுதான் ஓலைக்கூரைகள் எத்தனை ஆபத்தானவை என்ற விழிப்புணர்வு நமக்கும் அரசுக்கும் வருகிறது.
மாண்புமிகு முதல்வர் அவர்களது வீட்டிலேயே ஓலைக்கூரை அகற்றப்பட்டு ஓடுகள் பொறுத்தப்பட்டதும் கும்பகோணம் சோகத்துக்குப்பிறகுதான்.
என்ன காரணத்தோலோ விபரீதமாக ஏதாவது நடந்த பிறகே அது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற மெத்தனப்போக்கை அரசும் அரசு அதிகாரிகளும் தொடர்ந்து கடைப்பிடித்து வருகின்றனர்.
ரங்கநாதன் தெருவை அங்குள்ள கடைக்காரர்கள் அத்துமீறி ஆக்ரமித்திருப்பதை நாம் அறிந்து கொள்ள சரவணா ஸ்டோர்ஸ் கட்டிடம் தீப்பிடித்து எரிய வேண்டியுள்ளது.
அதில் சில தொழிலாளர்கள் உடல் கருக வேண்டியுள்ளது.
பொதுமக்களுக்கு ஏற்கனவே பெட்ரோல் விலை உயர்வு, அரிசி விலை உயர்வு, பருப்பு விலை உயர்வு என்று ஏகப்பட்ட கவலைகள். ஆகவே இது போன்ற விஷயங்களுக்காக கொடி பிடிக்கவில்லையே என்று அவர்களைப் பார்த்து கோபப்படுவதில் அர்த்தமில்லை.
இந்த சூழ்நிலையில் “வருமுன் காப்போம்” என்ற அடிப்படையில் அரசு கவனம் செலுத்த வேண்டிய சில அதிரடி விஷயங்கள் குறித்து கீழே பட்டியலிடப்பட்டுள்ளது.
அரசின் கவனத்திற்கு
பிரச்னை 1.
”சென்னையில் உள்ள நகைக்கடைகளில் இரண்டைத்தவிர மற்ற கடைகளில் விற்கப்படும் தங்கம் கலப்படத் தங்கம்” என்று ஒரு பண்பலை அலைவரிசை ஒரு நாள் முழுவதும் உரக்கச் சொன்னது.
தங்கம் விற்கும் நகைக்கடைகளை அடிக்கடி சோதனை செய்து அவைகளைத் தரக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் விதத்தில் நடவடிக்கை எடுக்க விடாமல் அரசு நிர்வாகத்தைத் தடுப்பது எது?
பிரச்னை 2
பள்ளிகள் தங்களது மாணவர்களை அழைத்து வருவதற்காக ஏற்பாடு செய்துள்ள அனைத்து பேருந்து மற்றும் வேன்களில் மாணவர்கள் ஆட்டு மந்தைகள் போல் அடைக்கப் படுகின்றனர். ஒரு வேனுக்கு இவ்வளவு மாணவர்கள்தான் பயணிக்க வேண்டும் என்ற விதிமுறையை கட்டாயமாக நடைமுறைக்கு கொண்டு வருவதில் என்ன பிரச்னை?
பிரச்னை 3
பெருவாரியான தனியார் தொலைக்காட்சிகளில் காலை அல்லது இரவு வேளைகளில் யாராவது ஒரு தாடி வைத்த அல்லது வைக்காத ஒருவர் “மருத்துவர்’ என்று தன்னை சொல்லிக்கொண்டு எந்த மருத்துவராலும் தீர்க்க முடியாத அனைத்து வியாதிகளையும் தான் தீர்த்து வைப்பதாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்.
இவர்கள் எல்லோரும் உண்மையான மருத்துவர்கள்தானா? இவர்களது சிகிச்சையால் யாராவது குணமடைந்திருக்கிறார்களா என்று ஆராய்ந்து பார்க்க வேண்டியது அரசின் கடமையில்லையா?
பிரச்னை 4
தமிழ்நாட்டில் உள்ள பல கோவில்களில்அர்ச்சகர்கள் பலர் கடவுளின் பெயரால் நடத்தும் வழிப்பறிக் கொள்ளைகளுக்குப் பயந்து ஆலயங்களுக்கு செல்வதற்கே மக்கள் பயப்படுகின்றனர். இவர்களிடம் அயல் நாட்டுக்காரர்களும், சுற்றுலா பயணிகளும் படும்பாடு கொஞ்சநஞ்சமல்ல.
இதற்கு ஒரு தீர்வு காண வேண்டியது அரசின் அத்தியாவசிய பணியில்லையா?
பிரச்னை 5
“சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவள்” என்பது போன்று அரசு பேருந்து ஓட்டுநர்கள் எந்த விதிமுறைகளுக்கும் கட்டுப்படத்தேவையில்லை
என்கிற சலுகை அவர்களுக்கு வழங்கப் பட்டிருக்கிறதா என்று தெரியவில்லை.
பெரும்பாலான அரசு பேருந்துகள் ‘நோ எண்ட்ரி” களில் சர்வ சதாரணமாக செல்வதையும் எந்த சிக்னலையும் மதிக்காமல் போவதையும் கண்ணெதிரே பார்த்த பிறகும் அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்க காவல் துறை தயங்குவது ஏன்?
அரசு பேருந்தை ஒட்டுபவரென்றால் அவர் எந்தத் தவறு செய்தாலும் அவருக்கு தண்டனை கிடையாதா?
இது போன்ற எண்ணற்ற விசயங்கள் இன்னும் இருக்கின்றன.இவற்றையெல்லாம் சரிசெய்ய வேண்டிய அரசுகள் தூங்கிக்கொண்டுள்ளன.
நாம் தாலாட்டிக்கொண்டிருக்கிறோம்.
வாழ்க ஜனநாயகம்!
===============================================================



பொழுதுபோக்கு அவசியம் தான்...அதை விட முக்கியம் சாப்பிட உணவு......
அன்புள்ள நண்பர்களே......
சற்று முன் நான் இணையதளத்தில் பார்த்த செய்தி ஒன்று என் மனிதல் பல கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்புகிறது. பாகுபலி இயக்குனர் ராஜமெளலி 1000 கோடி ரூபாய் செலவில் மகாபாரதம் திரைப்படம் எடுக்க போகிறராம்.பிரம்மாண்டம் பொழுதுபோக்கு,நல்ல திரைப்படம்,இந்திய சினிமாவை வேற நிலைக்கு எடுத்து செல்வது.
இதை எல்லாம் தாண்டி கொஞ்சம் ஆழமாக சிந்தித்து பாருங்கள்.நம் நாட்டில் ஒரு வேளை உணவு கூட கிடைக்காமல் நிறைய பேர் இருக்கிறார்கள்.500 ரூபாய் வட்டி காசு கட்ட இயலாமல் 1000 கணக்கில் விவசாயிகள் தினமு‌ம் தற்கொலை செய்து கொண்டு இருக்கிறார்கள்..
அப்படி இருக்க இந்த 1000 கோடி ரூபாய் எங்கே இருந்து வந்தது.இது யாருடைய பணம்...1000 கோடி ரூபாய் செலவில் ஒரு திரைப்படம் தயாரிக்கபடுகிறது என்றால்.அந்த தயாரிப்பாளருக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும்..அந்த படத்தை வாங்கி விற்கும் விநோயகிஸ்தர்களுக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும்..அதை திரையில் ஓட வைக்கும் திரையரங்கு உரிமையாளர்களுக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும்...
அடுத்து உங்கள் மனதில் என்ன கேள்வி எழும் என்றும் எனக்கு தெரியும் எல்லா திரைப்படங்களும் வெற்றி பெறுவது இல்லையே...உண்மைதான்,ஆனால் படம் தோல்வி அடைந்ததால் தயாரிப்பாளரோ,இயக்குநரோ,திரையரங்கு உரிமையாளரோ..அந்த படத்தில் நடித்த கதாநாயகனோ தற்கொலை செய்து கொண்டதாக நான் கேள்விப்பட்டது இல்லையே..
ஏன் என்றால் அவர்களை பொறு‌த்தவரை அது வெறும் ஒரு தொ‌ழி‌ல் ஒரு படம் தோல்வி அடைந்ததால் அடுத்த படத்தில் சம்பாதித்து விடலாம்....
ஆனால் ஒரு விவசாயி தன்னால் எப்பொழுது விவசாயம் பண்ண முடியவில்லை என்ற நிலைக்கு தள்ளப்படுகின்றானோ அன்றுடன் இந்த உலகில் வாழ தான் தகுதி இல்லாதவன் என்று தன்னை மாய்த்துக் கொள்கிறான்..ஏன் என்றால் விவசாயம் அவன் தொழில் அல்ல அது அவனுடைய உயிர்....தன்னால் ஒரு மனிதனின் உணவின் தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லையே என்ற உண்ணதமான உணர்வு...
ஆனால் நாம் என்ன செய்வோம் விவசாயி தன் வியர்வையை சிந்தி,அவன் கோமாதா ரத்தத்தை முறித்து தரும் பாலை நமக்காக எந்த விதத்திலும் பயன்படாத கதாநாயகனின் 60 அடி கட் அவுட் மேல் நின்று கீழே வீணாக ஊற்றுவோம்..
அடுத்ததாக உங்கள் கேள்வி இதுவாகத்தான் இருக்கும் திரைப்படத்துறையிலும் நிறைய பேரின் வாழ்வாதாரம் அடங்கி இருக்கு என்று..என்னுடைய கேள்வி இதுதான் சொகுசு கார்,சொகுசு பங்களா என்று வாழும் நடிகரின் சம்பளம் எவ்வளவு..அந்த திரைப்படத்திற்காக நாள் முழுவதும் வெயிலில் வேலை பார்க்கும் அடிமட்ட தொழிலாளியின் சம்பளம் எவ்வளவு...ஏன் இந்த இருவருக்கும் இடையே இவ்வளவு ஏற்ற தாழ்வு...
ஒருபக்கம் நம் பொழுதுபோக்கு காக பயண்படும் சினிமா எடுக்க கோடி கணக்கில் பணம்.மறுபக்கம் நாம் தினமும் உண்ணும் உணவை தயாரிக்கும் விவசாயி பணம் இல்லாமல் தற்கொலை...
நாம் எதை நோக்கி சென்று கொண்டு இருக்கிறோம் சற்று சிந்தித்து பாருங்கள் நண்பர்களே.......
200 ரூபாய் செலவு செய்து சினிமா பார்க்கும் நாம் தான்...வெட்கமே இல்லாமல் காய்கறி கடைகாரனிடம் 2 ரூபாய்க்கு பேரம் பேசுகின்றோம்...இதனால் பாதிக்க படுவது யாருடைய வாழ்வாதாரம்....
இந்த பதிவு சிலரை காயப்படுத்தி இருக்கலாம்...சிலரின் பார்வைக்கு தேவை இல்லாத பதிவாக இருக்கலாம்....
ஆனால் என்னை பொறு‌த்தவரை நான் தினமும் உண்ணும் உணவில் ஒரு விவசாயின் உழைப்பு இருக்கிறது..என்னால் அந்த மனிதனுக்கு 60 அடியில் கட் அவுட் வைக்க முடியாது...மாறாக அவர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற இந்த பதிவினை பதிவிடுகிறேன்....
இது பலரின் பார்வைக்கு கொண்டு செல்வது உங்கள் கையில் தான் உள்ளது......

--------------------------------




மரண விலாஸ் ஓட்டல்கள்.
-----------------------------
திண்டுக்கல்லில் இருந்து சென்னைக்கு
அரசு போக்குவரத்து கழக பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தோம். இரவு உணவகம் ஒன்றில் பேருந்தை நிறுத்தினார்கள்.
காலி பிளாஸ்டிக் பாட்டிலால் ஒருவன் பஸ்ஸை டமால் டமால்னு தட்றான்.குழந்தைகள் முதல் அனைவரும் தூக்கம் கலைந்து விடுகிறார்கள்.இவர்களுக்கு இந்த அதிகாரம் யார் தந்தது?.
திறந்தவெளி கழிப்பறை, அருகிலே கொசு மொய்க்கும் சமையல்கூடம், அழுக்கான சாம்பார் வாளி, கழுவப்படாத டம்ளர்கள், காது கிழியும் குத்துப் பாடல்… சாப்பிட உட்காரவே தயக்கமாக இருந்தது.
பரோட்டா, சப்பாத்தி, தோசை மூன்று மட்டுமே இருப்பதாகச் சொன்னார்கள். தோசைக்கு சட்னி, சாம்பார் கிடையாது. குருமா வாங்கிக்கொள்ள வேண்டும். அது 75 ரூபாய். தோசை 100 ரூபாய். ‘தோசைக்கு யார் குருமா வைத்து சாப்பிடுவார்கள்?’ என்றேன். ‘இஷ்டம் இருந்தா சாப்பிடுங்கள்’ என்றார்கள்.
ஓசியில் சாப்பிடுவதற்காக டிரைவர்,கண்டக்டர்கள் இங்குதான் பஸ்ஸை நிறுத்துவார்கள்.அவர்களுக்கு அங்கு கவனிப்பே தனி.
உணவு,வாட்டர் பாட்டில்,சிகரெட் பாக்கெட்,பீடா,பிஸ்கட் அனைத்தும் இலவசம்.
மதுவிருந்தும் இருப்பதாகச் சொல்கிறார்கள்.
பசிக்கு ஏதாவது பழம் வாங்கி சாப்பிடலாம் என நினைத்து வெளியே வந்தால், பழக்கடையில் ஒரு வாழைப்பழம் 15 ரூபாய். பெயர் தெரியாத ஒரு பிஸ்கட் பாக்கெட்டின் விலை 50 ரூபாய். ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட ஆப்பிள் 80 ரூபாய்.
ஹோட்டல் வாசலில் ஒரு கிராமத்துப் பெண் கோபமாகக் கத்திக்கொண்டிருந்தார். ‘ஒத்தை தோசை 100 ரூபாயா? பகல் கொள்ளையா இருக்கு. ஒரு கிலோ இட்லி அரிசி 25 ரூபாய். ஒரு கிலோ உளுந்து 61 ரூபாய். மாவு ஆட்டுற செலவு, எண்ணெய் எல்லாம் சேர்த்தாகூட ஒரு தோசை விலை 20 ரூபாய்க்கு மேல வராது. வியாபாரம் பண்ணுறவன் 30 ரூவான்னு வித்துட்டு போ. 100 ரூபாய்னு அநியாயம் பண்ணாதப்பா. இந்த துட்டு உடம்புல ஒட்டாது’ என்று சாபமிட்டார்.
அந்த அம்மாவின் கோபத்தை ஒருவரும் கண்டுகொள்ளவில்லை. ஹோட்டலில் இருந்து வெளியே வந்த ஒருவர், ‘தோசை ஒரே புளிப்பு. ரப்பர் மாதிரி இருக்கு. கிழங்கு மாவு கலந்து இருக்காங்க’ என்றார். ‘ஹெல்த் இன்ஸ்பெக்டரிடம் புகார் செய்ய வேண்டியதுதானே?’ என்றதும், ‘இது கட்சிக்காரங்க கடை’ என சுவரில் மாட்டப்பட்ட புகைப்படத்தைக் காட்டினார். இதிலுமா கட்சி?
‘சாப்பாட்டு விஷயத்துலகூட கட்சி வெச்சிருக்கிறது தமிழர்கள்தான்’ என்று ஒரு சொற்பொழிவில் எம்.ஆர்.ராதா கேலி செய்வார். தோசை வரை கட்சி ஆக்ரமித்திருக்கிறது.
ஒரு நாளைக்கு நெடுஞ்சாலையில் ஆயிரமாயிரம் கார்கள் போய்வருகின்றன. எங்கும் முறையான கழிப்பறை கிடையாது. குடிநீர் கிடையாது. உணவகம் கிடையாது. முதலுதவி மருத்துவமனைகள் கிடையாது. ஆனால், டோல்கேட் வசூல் மட்டும் முறையாக நடக்கிறது. அடிப்படை வசதிகள் பற்றி யாரும் எந்தப் புகாரும் தெரிவிப்பது இல்லை… தெரிவித்தால் கண்டுகொள்வதும் இல்லை.
சாலையோர கடைகளில் மாமிசம் சுவையாக இருப்பதற்காகவும் உடனடியாக வேக வேண்டும் என்பதற்காகவும் பாரசிடமால் மாத்திரைகளைக் கலக்குகிறார்கள் என்கிறார்கள். சாலையோர உணவகங்களில் தொடர்ந்து சாப்பிட்டால், இரைப்பை மற்றும் சிறுகுடலில் ரத்தக்கசிவு ஏற்படக்கூடிய அபாயமும் உள்ளது.
இந்தக் கொடுமை போதாது என்று சமீப காலமாக நெடுஞ்சாலை எங்கும் கும்பகோணம் காபி கடைகள் பத்து அடிக்கு ஒன்றாக முளைத்திருக்கின்றன. இந்தக் கடைகளுக்கும் கும்பகோணத்தின் ஃபில்டர் காபிக்கும் ஒரு ஸ்நானப்பிராப்தியும் கிடையாது. ஏமாற்றுவதற்கு ஒரு பெயர்தானே வேண்டும். எல்லா கடைகளிலும் சொல்லிவைத்தாற்போல செம்பு டபரா, டம்ளர் செட், அதில் பாயசத்தில் காபி தூளைப் போட்டுக் கலக்கியதுபோல ஒரு காபி. பாவம் மக்கள்… இந்தக் கண்றாவியைக் குடித்துவிட்டு வாயை மூடிக்கொண்டு பயணம் செய்கிறார்கள்.
நெடுஞ்சாலை உணவுக் கொள்ளையைப் போல ஊர் அறிந்த மோசடி எதுவுமே இல்லை. ஸ்குவாட் அமைத்து எதை எதையோ அதிரடியாக சோதனை செய்கிறார்களே… அப்படி ஒரு பறக்கும் படை அமைத்து உணவகங்களை சோதனை செய்து தரமற்ற கடைகளை மூடலாம்.
சமீபத்தில் சீன ஜனாதிபதி சி ஜின்பிங் எவ்விதமான முன்னறிவிப்பும் இன்றி சாலையோர உணவு விடுதி ஒன்றில் எதிர்பாராமல் நுழைந்து, வரிசையில் நின்று தனக்குத் தேவையான உணவை வாங்கிக்கொண்டு மக்களோடு மக்களாக அமர்ந்து சாப்பிட்டார். உணவுக்கு அவர் தந்த கட்டணம் வெறும் 21 யுவான். அந்தப் பணத்தில் பெரிய ஹோட்டலில் ஒரு பாட்டில் தண்ணீர்கூட வாங்க முடியாது. நாட்டின் ஜனாதிபதி உணவகத்துக்கு வந்தபோதும், கடையில் ஒரு பரபரப்பும் இல்லை. மக்கள் இயல்பாக அவரோடு இணைந்து சாப்பிட்டுப் போனார்கள்.
நமது அரசியல் தலைவர்கள், ஆட்சியாளர்களை ஒருமுறை ஹைவே மோட்டலுக்குச் சென்று மக்களோடு ஒன்றாக அமர்ந்து சாப்பிடச் சொல்ல வேண்டும். அப்போது தெரியும்… அது எவ்வளவு பெரிய கொடுமை என்று.
சாலையோர மோட்டல்களை
'மரண விலாஸ்'
என்றுதான் அழைக்க வேண்டும் . 
அதைவிட சிறந்த பெயர் இருக்க முடியாதுதானே?

--------------------------------------------------------------------------------------


எனக்கு பிடித்த நிஜ மனிதர்கள் - கண்ணையா.
வெளியூர் நண்பர் ஒருவர் இன்று கோவை அண்ணப்பூர்னா ஹோட்டலில் தங்கியிருந்தார். இன்று இரவு சென்னை திரும்புகிறார் என்பதால் ஒரு ஐந்து மணி சுமாருக்கு பக்கத்திலேயே எங்காவது பேசிக் கொண்டிருப்போம் என்று காந்தி பூங்கா சென்று காலாற நடந்தோம்.
ஆங்காங்கே, காதல் ஜோடிகள், நடைப்பயிற்சி செய்பவர்கள், பொழுது போக்குபவர்கள் என்று பூங்கா உயிரோட்டமாக இருந்தது. உட்கார இடமில்லாமல் பலர் இடத்தை பிடித்திருந்தனர். நெருக்கமாக இருக்கும் மரங்களின் மேலே கணக்கற்ற வௌவால்கள் தொங்கிக் கொண்டிருக்கின்றன. உட்காருவதற்காக போடப்பட்டிருந்த‌ க்ரானைட் மேஜைகளில் வௌவால்கள் மற்றும் காக்கைக‌ளின் எச்சங்கள் நிறைந்திருந்தன.
நாங்கள் பூங்காவை பெரிதாய் ஒரு வட்டம் அடித்து விட்டு திரும்புகையில், ஒரு பெரியவர் ஒரு க்ரானைட் மேஜையை துடைத்து கொண்டிருந்தார். பக்கத்தில் ஒரு தண்ணீர் பாட்டிலும் இருந்தது. ஒரு தகடை போல் ஒன்றை வைத்திருந்தார். நான் இவர் என்ன செய்கிறார் ? எனக் கேட்க, நண்பர் "உட்காருவதற்காக துடைக்கிறார் போலும்" என்றார். எனக்கு அப்படி தோன்றவில்லை. அவரை பார்த்தால் பூங்காவில் வேலை செய்பவர் போன்றும் இல்லை. என் கரபேசியில் ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டேன். பின்னர் "ஐயா" என்று அழைத்ததும் திரும்பினார். என்ன செய்கிறீர்கள் ?என்று கேட்டதும். "இந்த பூங்காவிற்கு எத்தனையோ பேர் வருகிறார்கள், குடும்பத்தோடு வந்து உட்கார இடம் இல்லாமல் தவிக்கிறார்கள், அதனால், நான் இங்கு வரும்போதெல்லாம் இந்த சிறு வேலையை செய்கிறேன்" என்றார். மீண்டும் பேசிக் கொண்டே அந்த க்ராணைட் மேஜையில் உள்ள எச்சங்களில் கரைகளை சுத்தம் செய்தார்.
பூங்காவிற்கு வந்துள்ள அத்தனை மக்களுக்கு இல்லாத அந்த சமூக அக்கறை இந்த பெரியவருக்கு இருப்பதைக் கண்டு நான் திகைத்து போனேன். முழுவதுமாக துடைத்து முடித்துவிட்டு பெரியவர் நிறைய பேசினார். அவர் பெயர் "கண்ணையன்" என்றும் "கவுர" சமூகத்தை சேர்ந்தவர் என்றும், சொன்னார். அவரோடு பேச பேச அவரின் பல சமூக சேவைகள் தெரிய வந்தன.
வார்த்தைக்கு வார்த்தை "நாராயணா" என்கிறார். சிறு வயதில் அவர் வளையல் வியாபாரியாம். பிரிட்டீஷ் காலத்தில் திருச்சூரில் இருந்து வளையல் வாங்கி வந்து வியாபாரம் செய்வாராம். கோவையில் கவுரவ சமூகத்திற்காக, ஒவ்வொருவரிடமும் நாலணா வீதம் வசூல் செய்து கல்யான மண்டபம் கட்டியுள்ளாராம். வலையல் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் அடைந்து இருந்தாராம். இப்போது கடைசியாக‌ பண்ணிரெண்டு வருடம் தாராபுரம் பக்கத்தில் உள்ள ஒரு காட்டில் தன் குல தெய்வமான "கருப்பராயன் மற்றும் கண்ணிமார்" கோவிலில் தங்கி விட்டாராம். அங்கு இறைவனுக்கு தொண்டு செய்த போது கிடைத்த திருப்தி, தன் வாழ்வில் வேறு எதுவும் தரவில்லை என்றார். இப்போது கோவையில் உள்ள மகன் வீட்டுக்கு வந்து ஐந்து மாதம் ஆகியுள்ளதாம்.
இப்போது எல்லாவற்றையும் இழந்து விட்டிருப்பாரோ ? அவருக்கு ஏதேனும் சிறு பன உதவி செய்யலாமா என்று நான் மனதில் யோசித்து கொண்டிருந்தேன். அவர் தவறாக நினைத்துவிடப் போகிறார் என்று, "உங்களுக்கு ஏதாவது பிரச்சினைகள் உள்ளதா" என்று கேட்டேன் ? "எனக்கு ஒரு குறையும் இல்லை" என்றார். வளையல் வியாபாரத்தில் பல சொத்துக்களை வாங்கி போட்டிருப்பதை யதார்தமாய் சொன்னார். வணிக வளாகங்கள் கூட நகரின் மைய பகுதியில் உள்ளதாம். எல்லாவற்றையும் மகனிடம் ஓப்படைத்து விட்டு, நிம்மதியாய் உள்ளாராம்.
எனக்கு ஒரு சத்தியமான துறவியை கண்ட திருப்தி ஏற்பட்டது. இப்படிப்பட்டவர்கள் வாழ்வதால் இன்னும் இந்த பூமி நிலைப்பெற்றிருப்பதை உணர்ந்தேன். இறைவன் இப்படி பட்டவர்களின் உருவத்தில் தான் வந்துக் கொண்டிருக்கின்றான் வாழ்க்கையில் தோல்வி அடைந்த பலர் துறவரம் நோக்கி செல்வதை பார்க்கலாம். அது நிலைக்காது. வாழ்க்கையை முழுமையாய் வென்றுவிட்டு துறவரம் செல்பவனே நிலைத்திருப்பான்.
உங்கள் வயதென்ன என்று கேட்கையில் "பயப்படாதீங்க தொன்னூற்றி ஐந்து" என்று சொல்லி, வெள்ளைக்காரன் காலத்திலிருந்து, பல‌ கதைகளை சொன்னார். உட்காராமல் நின்றுக் கொண்டே பேசினார். விடை பெறுகிறேன் என்றதும், ஒரு சிறுவனைப் போல‌ கையை கூப்பிக் கொண்டு "ஓம் நமோ நாராயனாய நமஹ" என்றார்.
நான் அவரிடம் சொன்னேன் "ஐயா இந்த மந்திரத்தை 18 முறை தன் குருவிடம் சென்று அறிந்துக் கொண்ட இராமானுஜர், சமூக நலமே முக்கியம் என்பதற்காக, தான் நரகத்திற்கு போனாலும் பரவாயில்லை, அனைவரும் சுவர்கம் செல்ல வேண்டும் என்று இதை அனைவருக்கும் உபதேசித்தார். அதே சமூக அக்கறையை உங்களிடமும் காண்கிறேன். நீங்களும் ஒரு இராமானுஜர்தான்" என்றேன். பெரியவர் நெகிழ்வோடு சிரித்துவிட்டு, வேறொரு மேஜையை துடைக்கச் சென்றார்.
---------------------------------------------------------------------------------------------------------

பாம்பு கடித்தால் உடனே செல்ல வேண்டியது அரசு மருத்துவமனைக்கு என்பது யாருக்காவது தெரியுமா ?
சமீப காலமாக பாம்பு கடிபட்ட ஏழைகள் தனியார் மருத்துவ மனைக்கு வருவது அதிகரித்த வண்ணமே இருக்கிறது. தனியார் மருத்துவ மனைகளில் போதிய அளவு ஆன்டிவெனம் எனப்படும் விஷமுறிவு மருந்துகள் கையிருப்பு இருப்பதும் இல்லை. அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகள் விஷமுறிவு மருந்துகளை பேசன்டிடமே வாங்கி தர சொல்லுவதும் (அதன் விலை 15000) அதன் பிறகு 30000 - 40000 வரை பில் போடுவதும் பெரும்பாலான ஏழைகளை மேலும்கடனாளியாக ஆக்கிவிடுகிறது.
ஆனால் பாம்பு கடிக்கு தனியார் மருத்துவமனைகளில் இருப்பதைவிட உயரிய சிகிச்சை அரசு மருத்துவமனைகளில் இலவசமாக கிடைக்கிறது என்பது பெரும்பாலானவர்களுக்கு தெரிவதில்லை.
கோவை அரசு மருத்துவமனையில்அனைத்து விதமான ஆன்ட்டிவெனம் மருந்துகளும் எப்போதும் தயாராக வைக்கப்பட்டுள்ளது. இதே நிலை தான் தமிழகத்தில் இருக்கும் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இருக்கும் என்று நம்புகிறேன். ஆனால் பாம்பு கடி பட்டவர்கள் 108 ஆம்புலன்ஸ் அழைக்கும் போது சற்று எச்சரிக்கையாக இருப்பது நலம். தங்களுக்கு பணம் கிடைக்கிறது என்பதற்காக தனியார் மருத்துவமனைகளில் பாதிக்கப்பட்டவர்களை ஒப்படைக்கும் போக்குதான் பரவலாக காணபடுகிறது.
பாம்பு கடி பேசன்ட்டுகள் முதலுதவிக்கு பின் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட வேண்டும் என்று அரசே ஒரு உத்தரவு போட்டாலும் பரவாயில்லை என்று தான் தோன்றுகிறது.
வன உயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை (WNCT)
அமைப்பாளர் திரு சாதிக் அலி கூறும்போது "பாம்பு கடிக்கும் இடங்களில் பணக்காரர்கள் வசிப்பது குறைவு என்பதால் பெரும்பாலும் பாம்பு கடி வாங்குபவர்கள் ஏழைகளாகவே இருக்கிறார்கள், சிகிச்சைக்கு போதிய அளவு பணம் இல்லாமல் அல்லாடும் போக்கே நிலவுகிறது. அப்படியான சிகிச்சை பெற எங்கள் டிரஸ்ட் உதவுகிறது. அவர்கள் எந்த நேரமும் எங்களை தொடர்பு கொண்டு (தொடர்பு எண் சரவனன் 9787257999)
உதவி பெறலாம்" என்றும் அரசு மருத்துவமனைகளில் இலவசமாக சிகிச்சை கிடைக்கிறது என்பதை நாம் எல்லோரும் பிரபல படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த நல்ல செய்தியை எல்லோருக்கும் பரப்புங்கள்.
இனிமேல் யாரையாவது பாம்பு கடித்தால் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வையுங்கள் நண்பர்களே !!!

--------------------------------------------------------------------
'இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி' என்ற படத்தை எல்லாரும் பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இந்த படத்தின் ஒவ்வொரு காட்சியும் ஆழமான அர்த்தம் உள்ளதாக இருக்கும்.
அரசன் இறந்துவிட, அவனது பால்ய மகன் புலிகேசியை சிறு வயது முதலே கேளிக்கைகளிலும், விளையாட்டுகளிலும் ஈடுபடுத்தி, உண்மையான அதிகாரத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பான் இளவரசனின் மாமன். கொஞ்சம் பெரியவனானவுடன், அந்தப்புரத்தில் காலத்தை ஓட்டி, மதி மயங்கி கிடக்க வைத்திருப்பான்.
இதே தந்திரத்தை, இந்திய அளவில் (ஏன்.. உலக அளவில்) கார்ப்பரேட்கள் நடத்திக் கொண்டிருக்கிறது என்பது பெரும்பாலானவர்கள் உணர்வதில்லை.
குழந்தைகளுக்கு கார்ட்டூன்
இளைஞர்களுக்கு காதல் படங்கள்.
கல்யாணமானவர்களுக்கு பணத்தாசை
வீட்டு பெண்களுக்கு சீரியல்.
இவை அனைத்தும் திட்டமிட்டே பெரிய அளவில் அரங்கேற்றப்படுகிறது. சமுதாயத்தை கேளிக்கையில் ஈடுபடுத்தி அவர்களை அடிமைப்படுத்துவது தலையாய நோக்கம்.
இப்படி கேளிக்கைகளில் மூழ்கியிருக்கும் ஒரு சமுதாயம் தங்கள் உரிமைகளுக்காக போராடும் ஆற்றலை இழந்து விடுகிறார்கள்.
இன்னும் சொல்லப்போனால் தங்களுக்கு என்னென்ன உரிமைகள் இருக்கிறது என்பது கூட தெரியாத நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். மீடியா என்ன சொல்கிறதோ, அதை உண்மை என்று நம்பும் கூட்டங்களாக நாம் மாறிவிட்டோம்.
நம் ஒவ்வொருவரின் தேவைகள் அனைத்தும் கார்ப்பரேட் கம்பெனிகளை மையப்படுத்தியே கட்டமைக்கப்படுகிறது. நமது விருப்பு வெறுப்புகள் அனைத்தும் ஊடகத்தால் நிர்ணயிக்கப்படுகிறது.
கிட்டத்தட்ட ஒரு Seduced நிலையில்தான் இருக்கிறோம்.
இதிலிருந்து மீட்டெடுக்கும் உக்கிரபுத்திரன் யார் என்பதுதான் தெரியவில்லை.
----------------------------------------------------------------------------------------------------------



நான் ஒரு விவசாயி.

My photo
CHENNAI, TAMILNADU, India
Work "MORE",Talk "LESS"
Powered By Blogger

Search This Blog