10.11.15

தமிழ் ஹீரோக்களின் இனிவரும் படங்களின் பெயர்கள்.....

அஜித் : மங்காத்தா,மாரியாத்தா , செல்லாத்தா

விஜய் : கத்தி,அருவா,குண்டூசி, கடப்பாற

விக்ரம் ; I,J,K,L M....

சூர்யா : சிங்கம், கரடி, கழுதை,,,

கார்த்தி: நான் மகான் அல்ல, நான் சிவகுமார் மகனும் அல்ல, நான் மனுசனே அல்ல ...


தனுஷ் : படிக்காதவன், எழுதாதவன், வெலங்காதவன்,

ஜீவா : SMS,MMS, MISSED CALL,


விஷால்: சத்தியம், பைத்தியம்,சூனியம்,,


சிம்பு: விண்ணைத்தாண்டி வருவாயா, சுவரைத்தாண்டி வருவாயா, அட்லீஸ்ட் துண்டையாவது தாண்டி வருவாயா?,,,

மாதவன்: குரு என் ஆலு,உஷா உன் ஆலு அப்ப கொளரி யாரோட ஆலு?

நீங்க மட்டும் சிரிச்சா போதுமா?

மத்தவங்களையும் சிரிக்க வையுங்க பாஸ்
"உங்களுக்கு நல்லதா பார்த்து எதையுமே செலக்ட் பண்ணத் தெரியாதா?"

-என மனைவி நம்மிடம் கேட்கும் போது  அவளையே பார்ப்பது தான்,

"அர்த்தம்"பொதிந்த பார்வை!
நரி பூனையிடம் தற்பெருமை பேசிக் கொண்டது.

''எனக்கு பகைவர்களிடமிருந்து தப்பிக்க நூறு தந்திரங்கள் தெரியும்.'

உனக்கு ..?

“எனக்கு ஒரே ஒரு தந்திரம் தான் தெரியும்.” என்றது பூனை.

அப்போது பெரிசாக சப்தம் கேட்டது.

ஒநாய்களும், வேடர்களும் துரத்தி வரும் இரைச்சல் கேட்டது.

பூனை லபக்கென்று மரத்தில் பாய்ந்து உச்சாணியில் ஏறிக் கொண்டது.

நரிக்கு தன் நூறு தந்திரங்களில் எந்தத் தந்திரத்தைப் பயன் படுத்துவது என்ற யோசனையில் காலதாமதமாகி வேடர்களிடம் மாட்டிக்கொண்டு உயிர் துறந்தது.

ஆம்.,நண்பர்களே.,

இந்தக் கதையின் நீதியாதெனில்.,

''சந்தேகத்துக்குரிய நிச்சயமில்லாத நூறு வழிகளைவிட
பத்திரமான ஒரு வழியே மேல்.''
எவரோ விதைத்த விதையில் வளர்ந்த மரத்தின் கனியை நாம் சுவைத்து அந்தமரம் வீசும் தென்றலை சுவாசித்து எவரோ ஒருவருக்கு கடனாளியாகிறோம்!

நாமும் ஒரு விதை விதைத்து அந்த மரத்தின் கனியை யாரோ ஒருவர் சுவைத்து அந்த மரத்தின் காற்றை யாராவது  அனுபவித்தால் தான் நாம் பட்ட கடன் தீரும் !

விதை விதைப்போம்...

மரம் வளர்ப்போம்...

கடன் தீர்ப்போம் !!!
-
-
Green-Clean Vedasandur 
? வானிலை அறிக்கை :


தமிழ்நாட்டில் பரவலாக ☁மழை பெய்ய  உள்ளதால் அரசு பேருந்தில்  பயணிப்பவர்கள் தயவு செய்து குடை☔ எடுத்துச் செல்லவும்💃💃💃
#‎2016_தேர்தல்‬ :
இது அரசியல் பதிவு இல்லை....விழிப்புணர்வு பதிவு மட்டுமே ....

கொங்கு தலைவர்களே சிந்தியுங்கள் ...

நீங்கள் சுயநலத்திற்காக ஒரு கூட்டத்தை சேர்த்துக்கொண்டு தனித்தனியாக அரசியல் என்று நிற்பதால் நம் மானம் போகிறது, நல்லதும் நடப்பதில்லை ....

யோசியுங்கள் எந்த கவுண்டனும் வேறு எந்த கட்சிக்கும் போகாமல் ஒற்றுமையாக இருந்தால் நம் பண்பாடு,பாரம்பரியம் எல்லாம் பாதுகாக்கப்பட்டுஇருக்கும்,...
வார்டு முதல் மந்திரி வரை நம் ஆட்கள் மட்டுமே இருந்திருக்கலாம் ....

நல்ல கொள்கை,நிர்வாகத்திறன் இல்லாமல் வெற்றி இல்லை ...
நிர்வாகத்தை செவ்வனே செய்து திராவிடம் வெற்றி பெறும்போது நம்மால் முடியாதா ???
நாம் ஒன்றுபட்டு அவர்களை கூட்டணி க்கு காக்க வைப்பதே உண்மையான வெற்றி...
அவர்களிடம் கூட்டணிக்கு அலைந்து 4,5 சீட் வாங்குவதில்லை ....
பிழைப்புக்காக வந்தவனிடம் போய் பிழைப்பதா நாம் ???....
உங்கள் கெளரவம் எல்லாம் தேர்தல்,கூட்டணியில் காணாமல் போவது ஏன் ??.

நீங்கள் கட்சி ஆரம்பித்தவுடன் ஓடிவரும் இளைஞர்கள் உங்களுக்காக வரவில்லை. #‎கொங்கு‬ என்ற பெயருக்காக தான் வந்துள்ளார்கள் என்பதை உணர்ந்து இனத்திற்காக பாடுபடுங்கள் ....
ஒன்றுபடுங்கள் ....
நீங்கள் ஒன்றாக இணைந்தால் இன்னும் நிறைய பேர் இணைவார்கள் ...

‪#‎ஒற்றுமை_இல்லையெனில்
#கண்முன்னே_இனம்_அழியும்‬ ...
.
‪#‎ஒற்றுமை_நிறைந்த_சமூகமே
#உயர்வான_சமூகம்‬ ...
இந்தியாவின் கெஜ்ரிவால்  கூறியுள்ள செய்தி ..... இந்தியாவில் 121 கோடி பேரில் 10% தான் தினமும் பழச்சாறு அருந்துகிறார்கள் தினசரி  அருந்தினால் 3600 கோடி  தோராயமாக  !!!!!!
நாம் பெப்சி மற்றும் கோகோ கோலா குடிக்கும் போது, இந்த 3600 கோடி நம் நாட்டின் வெளியே செல்கிறது. பெப்சி மற்றும் கோகோ கோலா நிறுவனங்கள் சுமார் 7000 கோடி ஒவ்வொரு நாளும் பெறுகின்றனர்.
நாம் கரும்பு சாறு அல்லது இளநீர் அல்லது  பழசாறுகள் குடித்தால் நம் நாட்டின் 7000 கோடி சேமிக்கலாம் நம் விவசாயிகளுக்கு அவற்றை கொடுக்க நம்
விவசாயிகள் யாரும் இனிமேல் தற்கொலை செய்துகொள்ள மாட்டார்கள் நாம் பழச்  சாறுகள் உட்கொள்ளும் போது ஒரு கோடி பேருக்கு வருமானம் கொடுக்கும்.  ₹ 10 கிடைக்கும் பழச்சாறு நாளடைவில்  ₹ 5 கிடைக்கும் இந்தியப் பொருட்கள் ஆதரவு மற்றும் நம் நாட்டின் நிதி வலுவடையும்  (இந்த செய்தியை குறைந்தது 3 பேருக்கு அனுப்பவும் )கோகோ கோலா, Maggi, ஃபாண்டா, கார்னியர், ரெவ்லோன், லோரியல், Huggies, Levis, நோக்கியா, மெக்டொனால்டு, கால்வின் கிளின், கிட் கேட், மாய சிறு தெய்வம், நெஸ்லே, பெப்சி, கேஎஃப்சி.  இவற்றை முற்றிலும் தவிர்க்கவும் கோல்கேட் இல்லாத போது கணவன் மனைவி சந்தோஷமாகக் குடும்பம் நடத்தவில்லையா
நாட்டை காப்பாற்ற. அனைத்து இந்தியர்களும் 90 நாட்கள் இடைவெளியில் வெளிநாட்டு பொருள் வாங்குவதை நிறுத்திவிட்டால் பிறகு இந்தியா உலகின் இரண்டாவது பணக்கார நாடாகமாறும். வெறும் 90 நாட்களில் ரூபாயின் மதிப்பு ₹ 2 1 டாலருக்கு💵 சமமாக இருக்கும். நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து அதை செய்ய வேண்டும். நாம் இதை செய்யவில்லை என்றால், பிறகு நாம் வெளிநாடுகளுக்கு நம் செல்வத்தை இழக்க நேரிடும். நாம் இவ்வளவு ஜோக்ஸ் செய்திகளையும் வாழ்த்துக்களை மற்றவருடன்  பகிர்ந்துகொள்கிறோம் அது  போல   இதையும் இந்தியர்கள்  அனைவரும் அடையும் படி  அனுப்புகவோம்
என் குடும்ப பசி மட்டும் தீர வேண்டுமென்றால் ஏரோபிளேன் ஏறியிருப்பேன்...

என் மக்கள் பசி தீர வேண்டுமென்பதற்காக ஏர்கலப்பையை ஏந்தினேன்..!

‪#‎விவசாயி‬.
ஹரப்பா, மொகஞ்சதாரோவை விடுங்கள்.. நம்மூர் நாகரீகம் எப்படிப்பட்டது தெரியுமா? வாட்ஸ்அப் கலகல

சென்னை: வாட்ஸ்சப்பில் தற்போது வைரலாக சுற்றிவரும் ஒரு மெசேஜ் சிரிக்கவும், சிந்திக்கவும் வைப்பதாக உள்ளது. அந்த தகவலை பாருங்கள்!

ஹரப்பா, மொகஞ்சதாரோ நாகரிகத்தை தொல்பொருள் ஆராய்ச்சியால் கண்டறிவது போல், தற்போதைய நம்மூரு நாகரிகத்தை, அடுத்த இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் எழுதப்படும் வரலாறு எப்படிப் புரிந்துகொள்ளும் என சிந்தித்துப் பார்த்ததில் இருந்து சில சிந்திக்கவும், சிரிக்கவும் வைக்கும் கற்பனை:

பொதுச் சொத்துக்களை கொள்ளையடிக்கும் உரிமை அரசாங்கத்திடமே இருந்திருக்கிறது. அப்படி கொள்ளையடிக்க விருப்பமுள்ளவர்களை தேர்வு செய்யும் பொறுப்பு மட்டும் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. கொள்ளையர்களை அடையாளம் காண்பதற்காக அவரவர்க்கென தனித்தனி சின்னங்களும் வண்ணக் கொடிகளும் இருந்திருக்கின்றன!

வாகனப் போக்குவரத்து மிகுந்து காணப்பட்டிருக்கிறது. அரசு பேருந்துகளின் படிக்கட்டுகளில் ஊஞ்சலாடியபடி இனிதே பயணிக்கும் முறை இருந்திருக்கிறது. நடத்துநர் என்றழைக்கப்பட்டவர், விசில் என்ற இசைக் கருவியை இசைப்பதில் தேர்ச்சி பெற்றவராக இருந்திருக்கிறார். அவரது இசைக்கேற்ப பேருந்துகள் பயணிகளை ஏற்றி, இறக்கி விட்டபடி இயங்கியிருக்கின்றன!

சமையல் செய்வதற்கென மிக்ஸி, கிரைண்டர் போன்ற சாதனங்களைப் பயன்படுத்தியுள்ளனர். நீர் அருந்தப் பயன்படுத்திய பிளாஸ்டிக்கிலான பாட்டில் முதல், மிக்ஸி கிரைண்டர் வரை அனைத்திலும் ஒரு பெண்மணியின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. அந்த உபகரணங்கள் அனைத்தையும் கண்டுபிடித்ததன் காரணமாக அவரின் உருவம் பொறிக்கப்பட்டிருக்கலாம் என வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்!

பொதுமக்களில் வயதால் மூத்தவர்கள் மட்டுமே அரசியல் தலைவர்களாக உருவாகியிருக்கிறார்கள். அந்த அரசியல் தலைவர்களின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் ஊரெங்கும் சுவர்களில் அவர்களின் பெயர்களையும் உருவத்தையும் வரைந்து, மறக்காமல் அவர்களின் முதுமையை குறிக்கும்வகையில் ‘வாழ்த்த வயதில்லை, வணங்குகிறோம்!' என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்!

பிளெக்ஸ்கள், பிளாஸ்டிக்குகள் போன்றவை அக்காலத்தில் நிறைய பயன்படுத்தப்பட்டுள்ளன. டன் கணக்கில் தயாரிக்கப்பட்ட அவை மண்ணில் மக்காமல் கிடந்து உலகின் அழிவுக்கே காரணமாக இருந்திருக்கின்றன.

பொதுமக்கள் சிறுநீர் கழிப்பதற்காக குட்டிக் குட்டி கழிப்பறைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக கட்டப்பட்டுள்ளன. அவை தவிர, நகரின் முக்கிய வீதிகளில் மூத்திரச் சந்து என்ற திறந்தவெளிப் பகுதியில், எவ்வித நெருக்கடியுமில்லாமல் சிறுநீர் கழிக்கும் வசதி செய்து தந்திருக்கிறார்கள். அப்படி சிறுநீர் கழிக்கும் போது வேடிக்கை பார்ப்பதற்காக கவர்ச்சிப் பட சுவரொட்டிகளை மூத்திரச் சந்தின் சுவரெங்கும் ஒட்டும் முறையும் கையாளப்பட்டிருக்கிறது!

சாலைகளனைத்தும் கருங்கற்களால் கட்டப்பட்டிருக்கின்றன. அந்த கருங்கற்களின் மீது, பயணிப்பவர்களை காத்து கருப்பு அண்டக் கூடாதென்பதற்காக தார் என்ற கறுப்பு பொருளை லேசாக தெளித்து வைக்கும் சாஸ்திரம் கடைபிடிக்கப்பட்டுள்ளது!

ஒரு பக்கம் பசுமையான விவசாய வியாபாரம் அமோகமாக நடந்து வந்திருக்கிறது. இன்னொரு பக்கத்தில் விவசாய நிலங்களை பல வண்ணங்களில் அழகுபடுத்தி விவசாய நில வியாபாரமும் அமோகமாக நடந்து வந்திருக்கிறது! விவசாய நிலங்களில் வீடு கட்டி, மொட்டை மாடிகளில் தொட்டிச் செடிகளில் விவசாயம் செய்யும் அதிநவீன விவசாயத்தையும் கடைபிடித்து வந்திருக்கிறார்கள்!

ஏரிகள் என்ற பெயரிலான அபாயகரமான நீர் நிறைந்த பள்ளத்தாக்குகளை மேடாக்கி வீடுகள் கட்டவும், அந்த வீடுகள் கட்டும் கற்களுக்காக, மலைகள் என்றழைக்கப்பட்ட மேடான பகுதியை வெட்டியெடுத்து சமப்படுத்துவதும் நடந்து வந்திருக்கிறது!

மக்களின் பொழுதுபோக்குக்காக செல்வந்தர்களால் விலைக்கு வாங்கப்பட்ட அடிமைகள், உருண்டையான பந்து என்ற ஆயுதத்தாலும், பேட் என்றழைக்கப்பட்ட மரத்தினால் செய்யப்பட்ட ஆயுதத்தாலும் மோதிக்கொள்ளும் விளையாட்டு நடைமுறையிலிருந்தது. அவர்களில் யார் ஜெயிப்பார்கள் தோற்பார்களென பந்தயம் கட்டும் முறையும் இருந்து வந்திருக்கிறது!

இவ்வாறு செல்கிறது அந்த வாட்ஸ்சப் மெசேஜ்.

30.10.15

எனது முகநூல் பதிவேற்றங்கள்-6

3 மாணவர்கள் சரியாக படிக்காத காரணத்தால் பரீட்சைக்கு வராமல் கட் அடித்து விட்டு படத்துக்கு சென்றனர்.
படம் முடிந்ததும் ஆடையில் சேற்றை பூசி கொண்டு தலைமையாசிரியரிடம் சென்றனர்.

அவரிடம் "சார் காலையில் ஒரு கல்யாணத்துக்கு போயிட்டு பரீட்சைக்கு வந்திரலாம்னு நெனைச்சோம்...
வர்ற வழில பைக் பஞ்சராகி மூனு பேரும் சேத்துல விழுந்துட்டோம் சார்...எங்களுக்கு இன்னொரு சான்ஸ் கொடுங்க சார்" என்றனர்.

ஆசிரியரும் புரிந்து கொண்டு மூன்று நாள் அவகாசம் கொடுத்தார்.மூன்று நாள் கழிச்சு மூன்று பேரும் நல்லா படிச்சிட்டு வந்தாங்க.மூனு பேரையும் தனித்தனி ரூம்ல உட்கார வச்சார்.
கேள்வி தாள்ல நாலே கேள்வி தான் இருந்திச்சு.

1.யாருக்கு கல்யாணம்?(25 மார்க்)

2.கல்யாணம் எங்க நடந்துச்சு?(25 மார்க்)

3.மாப்ள என்ன கலர் டிரஸ் போட்டிருந்தார்?(25 மார்க்)

4.எந்த பைக்ல போனீங்க?(25 மார்க்)

கண்டிசன்: பதில்லெல்லாம் ஓரே மாதிரி இருக்கனும்.!!"

என்ன சார் இப்படி பண்ணீட்டீங்களே சார்...😝😝😝😜
-
-
இணையம்.

28.10.15

யானையின் எடையை எப்படி அறிவது?
அரசர் ஒருவருக்குத் திடீரென்று ஒரு நாள், தன்
பட்டத்து யானை எவ்வளவு எடை இருக்கும் என்று
அறிய ஆவல் ஏற்பட்டது. அந்தக் காலத்தில்
எடைமேடைகள் எல்லாம் இல்லை; யானையை
அளக்கும் அளவுக்குப் பெரிய தராசும்
கிடையாது.
யானையின் எடையை எப்படி அறிவது.? என்று
அமைச்சர்களிடம் கேட்டார் மன்னர். யாருக்கும்
அதற்கான வழி தெரியவில்லை. அப்போது
அமைச்சர் ஒருவரின் பத்து வயது மகன், ‘நான்
இதன் எடையைச் சரியாகக் கணித்துச்
சொல்கிறேன்’ என்றான். அதைக் கேட்டு
அனைவரும் சிரித்தனர். ஆனால், அவனுக்கும்
ஒரு வாய்ப்பு கொடுத்தார் மன்னர்.
அந்தச் சிறுவன், யானையை நதிக்கு அழைத்துச்
சென்றான். அங்கே இருந்த மிகப் பெரிய படகில்
யானையை ஏற்றினான். யானை ஏறியதும்,
தண்ணீரில் ஆழ்ந்தது படகு. உடனே அவன், தண்ணீர்
நனைத்த மட்டத்தைப் படகில் குறியீடு செய்தான்.
பிறகு, யானையைப் படகிலிருந்து இறக்கி,
பெரிய பெரிய கற்களைப் படகில் ஏற்றச்
சொன்னான். முன்பு குறித்து வைத்திருந்த
குறியீடு அளவுக்குப் படகு தண்ணீரில் மூழ்கும்
வரை, கற்கள் ஏற்றப்பட்டன. பின்பு, அரசரிடம் அந்தக்
கற்களைக் காட்டி, ”அவற்றின் எடைதான் அந்த
யானையின் எடை” என்றான். அனைவரும்
வியந்தனர். அவனது புத்திசாலித்தனத்தைப்
போற்றிப் புகழ்ந்தனர்.
எல்லோரும் யானையை ஒட்டுமொத்த
உருவமாகத்தான் பார்த்தார்கள். ஆகவே,
அவர்களால் அதன் எடையைக் கணிக்கமுடியும்
எனும் நம்பிக்கை வரவில்லை. ஆனால் அந்தச்
சிறுவனோ, பல எடைகளின் கூட்டுத்தொகையே
யானையின் எடை என்று எண்ணிச் செயல்பட்டான்;
எளிதில் விடை கண்டான்.
எவ்வளவு பெரிய செயலாக இருந்தாலும்,
அதைச் சின்னச் சின்ன செயல்களாகப்
பிரித்துக்கொள்ளவேண்டும். பிறகு, அந்த
ஒவ்வொரு செயலையும், செவ்வனே செய்து
முடிக்கவேண்டும். அப்போது, ஒட்டுமொத்தத்
திட்டமும் அழகாக நிறைவேறிவிடும்...


-காராள வம்சம் 

முகநூலில் எனது பதிவேற்றங்கள்-5

கண்டிப்பாக படியுங்கள்..

மாற்றம் தேடி....

இப்படியும் சில அதிகாரிகள் இருக்கத்தான் செய்கிறார்கள்....

கடையநல்லூர் காவல் நிலையத்திற்கு சென்றபோது இந்த மனிதரை சந்திக்க நேர்ந்தது அங்கு ஆய்வாளராக பணிபுரிபவர்..., என்ன செய்தார் இவர்.?

* காவல் நிலைய ஆய்வாளராக வந்த பின் ஆக்கிரமிப்பு கடைகள் சாலைகளில் இருந்த இடையூறுகளை அகற்றினார்

*பல இடங்களில் புதிதாக மரங்கள் பல நட்டுள்ளார்.

*காவல் நிலையத்தில் பல மாற்றங்களை செய்துள்ளார்.

* இயற்கை மேல் கொண்ட பாசத்தால் மரங்களில் ஆணி அடித்து செய்யப்பட்ட விளம்பரங்களை தன்னார்வலர்களுடன் இணைந்து அகற்றியதோடு விளம்பரம் செய்ய வேண்டுமா அதற்கும் வழி தருகிறேன் என சிட்டுக்குருவிக்கு கூடுகள் செய்து அந்த கூட்டில் விளம்பரம் செய்து மாட்டுங்கள் அதனால் சிட்டுக்குருவிகள் பெருகும் என அறிவுறுத்துகிறார்...

*சிரட்டைகளில் கூண்டுகள் செய்து அதனை மரங்களிலும், கூடு தேடும் இடங்களிலும் பொருத்தி வருவதோடு இதை செய்ய மாணவர்களிடம் விழிப்புணர்வு ஊட்டி வருகிறார்.

*கண்ட இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டுவதை தடுக்க இவரே சுவரொட்டி ஒட்ட போர்டுகள் பொருத்தி வருகிறார்.

* அவர் போகும் வழியில் ஏதேனும் பள்ளி தென்பட்டால் வாகனத்தை நிறுத்தி பாலிதீன் கவர்கள் குப்பைகள் அகற்றவேண்டிய விழிப்புணர்வை மாணவர்களுக்கு ஊட்டுவதோடு தனது வாகனத்தில் எப்போதும் வைத்திருக்கும் குப்பைதொட்டியில் குப்பைகளை பாலிதீன் குப்பைகளை சேகரிக்க அறிவுறுத்தி சாக்லெட் பரிசு வழங்குகிறார்.

* சென்று கொண்டிருக்கும் போதே வெற்றிடமிருந்தால் அங்கு மரக்கன்றுகளை வாகனத்தை நிறுத்தி. நட்டு செல்கிறார்...

*கழிவு சாக்குகள் கழிவு கேஸ் டியூப்கள் போன்ற பொருட்களை கொண்டே குப்பை சேகரிக்க பைகள் செய்ய கற்றுத்தருகிறார்.
இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக பாலிதீன் பைகள் ஒழிப்பில் முழு கவனம் செலுத்தி வரும் இவர் தானே டிசைன் செய்து ஒரு பையை வடிவமைத்து அதனை அதிகமாக தயாரிக்க செய்து விற்பனையும் செய்கிறார். மிகவும் மலிவான விலையில் ஒரு மணி பர்சை போன்ற இந்த பை தேவைக்கு ஒரு பிக்சாப்பர் பையாக மாறுகிறது. இந்த பை இருந்தால் கண்டிப்பாக கடைக்கு செல்லும் போது பாலிதீன் பை தேவைப்படாது அதைப்பார்த்தவுடன் 100 ரூபாய்க்கு ஒரு பை வாங்கினேன். இனி வாழ்வில் எங்கும் எந்த இடத்திலும் பாலிதீன் பயன்படுத்தக்கூடாது என முடிவெடுக்க வைத்தது அந்த பை..

ஆடம்பரமாக விழா கொண்டாட்டம் அனுமதி கேட்பவர்களிடம் கனிவாய் கல்வி உபகரணங்களை தங்கள் பகுதி மாணவர்களுக்கு வழங்கவும் அறிவுறுத்துகிறார் கனிவாக...

காவல் நிலையத்தில் பசுமை விரும்பி பல ஜாடிகளில் பசுமை செடிகளையும்,  குப்பைத்தொட்டிகளையும்  வைத்துள்ளார்

ஒரு அட்டைப்பெட்டியும் இருந்தது. அதில் மாணவர்களுக்கான சீருடையும் இருந்தது. எதற்கு என விசாரித்த போது தான் தெரிந்தது அது வறுமையில் உள்ள மாணவர்களுக்கு சீருடை வழங்கிட அவரது சொந்த முயற்சியில் வரவழைத்து என.

மேலும் இவர் இதுவரை 25 முறைக்கு மேல் இரத்த தானம் கொடுத்துள்ளார்

இவையனைத்தும் எந்த விளம்பரத்தினையும் எதிர்பார்க்காமல்.
நம்ம போட்டோ எடுத்ததையே அனுமதிக்கல இவரு.
அப்புறம் காலர் பிக்சருக்குன்னு சொல்லிதான் படமெடுக்க முடிந்தது இவரை.

உண்மையில் இப்படி சிலர் இருப்பதால் தான் இயற்கை அன்னை வாழ்கிறாள்...

இயற்கை அன்னையின் வளம் காக்க இவர் செய்யும் முயற்சிகளில் இது துளி அளவே இன்னும் பதிவிட முடியாமல்.....

வெளியே தெரியாமல் செய்வது இவர் நோக்கம் என்றாலும் இவர்கள் போன்ற சமூக ஆர்வலர்களை வெளிப்படுத்துவது தமிழ்நாடு சமூகசேவை கழகத்தின் கடமையாகும் இவர்கள் போன்று அனைத்து அரசு ஊழியர்களும் தன் கடமையோடு சேர்த்து சமூகசிந்தனையோடு வாழ்ந்தால் விரைவில் உருவாகும்
வறுமை இல்லாத தமிழகம்.

கல்லாதவர் இல்லாத தமிழகம். சுகாதாரமான வளமான தமிழகம் வெகுதூரமில்லை....
-
-
-
இணையம்

முகநூலில் எனது பதிவேற்றங்கள்-4




என்னதான் தனித்துப் போட்டின்னு அறிவிச்சாலும்
வேட்பு மனு தாக்கல் பண்ணும்போது பத்து பேரு கூட
போயாகணும்…!
-
எல்லா கட்சிளிடமும் நோட்டு வாங்கி நோட்டாவுக்கு
வாக்களிப்போர் சங்கம்
 ----------------------------------------------------
மீசையைத் தாண்டி கருமை படாமல்
டை அடிப்பது கஷ்டம்..!

 -------------------------------------------------------------

வரையறையின்றி ஒரு பெண் உரத்துப்

பேசினால் பெரிய இந்த பூமி அதிரும்

இரண்டுபேர் சேர்ந்து அவ்வாறு பேசினால் வானத்து

நட்சத்திரங்கள் உதிர்ந்துவிடும்

மூன்று பேர் சேர்ந்து அவ்வாறு பேசினால்

கடலலைகள் வற்றிவிடும்

-
பல பெண்கள் சேர்ந்து பேசினால் உலகம்

என்னாகுமோ
----------------------------------------- 

 அன்பு கிடைத்தவர்களுக்கு தெரியாது,

கிடைக்காதவர்களுக்கு புரியாது,

தொலைத்தவருக்குத்தான் தெரியும் அருமை..!
 ------------------------------------------------------------

உன் நண்பனைப் பற்றிச் சொல்
உன்னைப்பற்றிச் சொல்கிறேன் – இது பழசு
=-
உன் கம்ப்யூட்டரில் என்னென்ன சேமித்து வைத்திருக்கிறாய்
சொல்…உன்னைப் பற்றிச் சொல்கிறேன் – இது புதுசு
-------------------------------------------------------------------- 
பேங்கஃல அக்கவுன்ட் வச்சிருக்கித விடதெருமுனை
டீக்கடைகளில்தான் அதிகம் பேர் அக்கவுன்ட் வச்சிருக்காங்க..
------------------------------------------

சென்னையில் ஒரு தெருவில் எட்டுக்கும் மேற்பட்ட
இடங்களில் ஆண் பைக்கில் உட்கார்ந்துகொண்டும்
பெண் நின்றுகொண்டு பைக்கின் ஹேண்டில்பாரை 
பிடித்தபடியும் பேசிக்கொண்டிருந்தால்அந்தத்
தெருவில் பெண்கள் விடுதி இருக்கின்றது என்று 
அர்த்தம்!
 --------------------------------------------------------------------------



-----------------------------------------------------------------------------------------------------

அந்த ஆளுக்கு கடன் கொடுத்தா வாங்குறதுக்குள்ள நடையா நடந்து செருப்பு தேஞ்சிரும்ன்னு சோன்னேனே... அப்படியும் ஏன் பணம் கொடுத்தே..?

நான் என்ன அவ்வளவு முட்டாளா..? செருப்புக்கு காசு கழிச்சுகிட்டுதான் கடன் கொடுத்தேன்.. தெரிஞ்சுக்கோ..!


சுசி என்னா மாசி.. உன் செல்லுக்கு எப்போ கால் போட்டாலும் ஸ்விட்ச்டு ஆஃப் ன்னு சொல்லுதே.. ஆன் பணணவே மாட்டியா..?

மாசி ஐயோ...ஐயோ.. அது என்னோட காலர் ட்யூன்.. !

-----------------------------------------------------------------------------------


            
ஜூனியர் சுசி எங்கப்பா தீப்பெட்டி வாங்கினால் குச்சியை 
எண்ணிப் பார்த்துதான் வாங்குவார்...

ஜூனியர் மாசி இது என்ன பிர்மாதம்..? எங்கப்பா 
தீப்பெட்டி வாங்கினா எல்லா குச்சியும் எரியுதான்னு 
கொளுத்திப் பார்த்துதான் வாங்குவார்..!

"நிறைய மெகா சீரியல் பார்ப்பீங்களோ..?

"ஏன்..?"

"இல்லே.. ரேஷன் கார்டுலஅபிஅரசிஅண்ணாமலைசெல்விதொல்காப்பியன்பாஸ்கர்இப்படி பேராவே இருக்கே.. அதான் கேட்டேன்.."

-------------------------------------------------------------------


அவரு தேர்தல்ல கள்ளவோட்டாலேயே ஜெயிச்சிருக்காருன்னு நினைக்கின்.

எப்படிச் சொல்றீங்க?

தேர்தல்ல வோட்டுப் போட வராதவங்களுக்கு நன்றிங்கறாரே..


""எங்க சலூன்ல "கட்டிங்பண்ணிகிட்டா "ஷேவிங்இலவசம்!"" 

"அவ்வளவுதானா..? எங்க ஃபைனான்ஸ் கம்பெனிலே "சேவிங்பண்ணினா 
"மொட்டையே இலவசம்!""

------------------------------------------------------------------------------



கட்டித் தயிரில்
முளைத்த
குட்டிப் பயிர்
அவளின் முகப்பரு!


""என்னங்க இது.. உங்க 
பையன் "யுனிவர்சிட்டி'ங்கறதை "யுனிவர்குட்டி'னு தப்பா படிக்கிறான்?''

""அவனுக்கு இங்க்லீஷ் புரிஞ்சுக்கற கெப்பாகுட்டி இல்ல..தயவு
செஞ்சு இதை வெளியில் சொல்லிபப்ளிகுட்டி பண்ணாதீங்க சார்.

------------------------------------------------------------------------------------------------


முற்பகல் செயின் என்று தொடங்கும் குறள் சொல்..

பிற்பகல் அடகு வை..!



-------------------------------------------------------------------------------------------------------

எதுக்கு உன் மனைவி படத்தை ஸ்கூட்டர்ல ஒட்டி வச்சிருக்கே..?

கொஞ்சம் ஸ்டார்ட்டிங் ட்ரபுள்.. அவ படத்தைப் பார்த்துகிட்டே உதைச்சாதான் கிளம்புது..!

-----------------------------------------------------------------------------------------------------
சேவை மனப்பான்மையோடுதான் நான் அரசியல் குதித்தேன்னு சொல்லிட்டுஇப்ப கோடி கோடியா சொத்து சேர்த்திருக்காரே நம்ம தலைவர் ?

போகப் போக தேவை மனப்பான்மை வந்திருக்கும்..!
---------------------------------------------------------------------------------------------

திரைப்படம் வரும் பின்னே
திருட்டு VCD வரும் முன்னே.

-----------------------------------------------------------------
நான் அந்தக் காலத்தில் இருந்தே அரசியலில் இருக்கேன்எனக்கு அண்ணாதுரையை எல்லாம் நல்லாத் தெரியும்

நான் கொஞ்ச நாளாத்தான் அரசியலில் இருக்கேன்எனக்குத் தம்பிதுரையைத்தான் தெரியும..!

-------------------------------------------------------------------------------------------


"ஐயா என் மனைவியை ஒரு வாரமா காணுங்க"

"போட்டோ இருக்கா?"

"அசின் மாதிரி யாராவது இருந்தா கூட பரவால்லீங்க."

------------------------------------------------------------------------------------------------------

வேலைக்காரி எல்லா வேலையையும் இழுத்துப் போட்டுக்கிட்டுதானேம்மா செய்யறேன்... அப்புறம் ஏம்மா குறை சொல்றீங்க?

வீட்டுக்காரி நல்லா இழுத்துப் போர்த்திக்கிட்டும் செய்யணும்புரிஞ்சுதா?




-------------------------------------------------------------------------------



---------------------------------------------------------------------------------------------------------









எனது மகனுக்கு நிறைய கதைகள் சொல்லியுள்ளேன்அதில் ஒன்று
ஒரு பாழடைந்த வீட்டில் நிறைய எலிகள் இருந்தன.
அவைகள் ஒடி விளையாடி சந்தோசமாக வாழ்ந்து வந்தனஒரு நாள் ஒரு பூனை அந்த வீட்டிற்கு வந்திச்சாம்.அங்கு நிறைய எலிகள் விளையாடிக் கொண்டிருப்பதைக் கண்டு பூனை சந்தோசம் அடைந்ததாம்.அது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு எலியாகப் பிடிச்சு சாப்பிட்ட தொடங்கிச்சாம்எலிகள் மிகவும் பயந்து நடுங்கிச்சாம்.எலிகள் எல்லாம் ஒன்றுகூடி பூனையிடம் இருந்து எப்படித் தப்புவது என்று கதைத்தார்களாம்அதில் ஒரு எலி சொல்லிச்சாம் எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது சொல்லட்டுமா என்று கேட்டதுஆம் சொல்லு என்றதாம்.ஒரு மணியைக் கொண்டுவந்து காட்டி சொல்லிச்சாம் இந்த மணியை பூனையின் கழுத்தில் கட்டினால்,அது நடந்து வரும் போது டிங் டிங் டிங் என்று சத்தம் கேட்கும் நாங்கள் ஓடி ஒளித்து விடலாம்பூனை எம்மைத்தேடி ஏமாந்து போகும்நாம் பயமின்றி சந்தோசமாக வாழலாம் என்று கூறியது.இதைக் கேட்டதும் எலிகள் எல்லாம் மகிழ்ச்சியால் துள்ளிக் குதித்து ஆரவாரம் செய்தனமிகவும் அருமையான யோசனை என்று சொன்னார்கள்.அப்போது ஒரு எலிஇந்த
மணியை யார் பூனையின் கழுத்தில் கட்டுவது என்று கேட்டுதாம்.இதைக் கேட்டதும் எலிகளின் மகிழ்ச்சி,ஆரவாரம் எல்லாம் குறைந்து போய்விட்டதாம்.யாரால் மணியை பூனையின் கழுத்தில் கட்டமுடியும் என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே "மியாவ்" "மியாவ்""மியாவ்என்ற பூனையின் சத்தம் கேட்டவுடன் எலிகள் பயந்து நடுங்கியவாறு ஓடி ஒளித்துக் கொண்டன.
இதில் இருந்து தெரிந்து கொள்வது என்னவென்றால் "முடியாத யோசனையால் எந்தப் பயனும் இல்லை".



திருமண நாள் வாழ்த்து

என் வாழ்வின் வழித்தடம் 
இருண்ட சாலைக்கு ஒளித்தடம் 
உருகிய உள்ளம் கொண்ட 
பெருகிய இன்ப வெள்ளம் கண்ட 
என் அண்ணன்(ஆசான் அண்ணிக்கு
திருமண வாழ்த்து கவி 

இருமனம் இணைந்து 
திருமணம் நடந்து 
காலம் பல கடந்து 
வாழ்வில் -கஷ்ட நஷ்டங்களை அனுபவித்து 
ஞாலம் தங்களை 
வியந்து பார்க்கும் வண்ணம் 
வாழ்ந்து காட்டினீர் இன்னும் 
வாழ்ந்து காட்டுவீர் 
இது திண்ணம் 

விட்டு கொடுப்பவன் என்றும் 
கெட்டு போவதில்லை என்பதற்கு 
நீங்கள்தான் சாட்சி -அதற்கு சாட்சி 
நாங்கள் நேரில் கண்ட காட்சி 
நீங்கள்தான் பாசத்தை 
ஆளுகின்ற ஆட்சி 

வாழுங்கள் பல்லாண்டு 
இவையகம் உள்ளவரை 
ஆளுங்கள் நூறாண்டு 
நீங்கள்தான் ()ல்லவரே 

மீண்டும் மீண்டும் இந்த நன்னாள் மலர 
வேண்டும் வேண்டும் என்று -பூவிலுடைய சாஸ்தாவை 
பூசிக்கிறேன் என் இரு கரம் கொண்டு 

நீவிர் இருவரும் 
செந்தமிழ் போல் 
பைந்தமிழ் போல் 
பல்லாண்டு பல்லாண்டு 
வாழ்க 


என் வாழ்வின்,
வழித்தடம் இருண்ட சாலைக்கு
ஒளித்தடம் தந்தவள் என் மனைவி!

உருகிய உள்ளம் கொண்ட அவள்,
பெருகிய இன்பம் தந்தவள்!

உன்னில் வாழ்தல் எனது தவம்!
உன்னால் வாழ்தல் எனது வரம்!


இருமனம் இணைந்து 
திருமணம் நடந்து 
காலம் பல கடந்து 
வாழ்வில் -கஷ்ட நஷ்டங்களை அனுபவித்து 
ஞாலம் எங்களை 
வியந்து பார்க்கும் வண்ணம் 
வாழ்ந்து காட்டியிருக்கிறோம் இன்னும் 
வாழ்ந்து காட்டுவோம்


நாங்கள் இருவரும் 
செந்தமிழ் போல் 
பைந்தமிழ் போல் 
பல்லாண்டு பல்லாண்டு 
வாழ வாழ்த்துங்கள்!
-
-
(குறிப்பு :  எங்கள் வாழ்வு வசப்பட்ட நாள் - 12/09/1980.
மிக சிறிய வயதில் எங்களுக்கு திருமணம் நடந்ததால் 35 வருடங்கள் என்பது ஒரு கணக்கீடு ஆகி விட்டது.)



இன்று துவங்குகிறது
இல்வாழ்வில் முப்பத்தி
ஐந்தாம் ஆண்டு!

இன்னும் வேண்டும் எனக்கு
உன்னோடு வாழ நூறாண்டு!

ஒளிக்குவலையே நீ
உள் நுழைந்த நேரம்
உறவுகள் சூழ்ந்தது
ஒளிக்கற்றையாய்!

உன்னில் வாழ்தல் எனது தவம்!
உன்னால் வாழ்தல் எனது வரம்!

நாங்கள் இருவரும் 
செந்தமிழ் போல் 
பைந்தமிழ் போல் 
பல்லாண்டு பல்லாண்டு 
வாழ வாழ்த்துங்கள்!

(குறிப்பு :  எங்கள் வாழ்வு வசப்பட்ட நாள் - 12/09/1980.)






  



எந்நாளும் உனைத் தேடி
வசந்தங்கள் வந்து விழ...
மகிழ்ச்சிக் கடலலை உன்
வாழ்வில் பொங்கியெழ...
என்றென்றும் வாழ்க நீ நட்பே...
பல்லாண்டு... பல்லாண்டு...
பல்லாயிரத்தாண்டு வாழ்கவே..!



நான் ஒரு விவசாயி.

My photo
CHENNAI, TAMILNADU, India
Work "MORE",Talk "LESS"
Powered By Blogger

Search This Blog