27.10.15

மனவளக் கட்டுரைகள்.

மனதிற்கான மருந்துகள்.
மனவளக் கட்டுரை.
1) செலவுகளுக்கு யோசிக்காதீர்கள். மண்டையைப் பிய்த்துக்
கொள்ளாதீர்கள். உங்கள் தேவைகளுக்கு நீங்கள் செலவழிக்காவிட்டால் - யார் செலவழிப்பார்கள்? ஆகவே தேவைகளுக்குப் பணத்தைச் செலவழியுங்கள்.
2. இரசிக்க வேண்டியதை ரசியுங்கள். அனுபவிக்க வேண்டியதை அனுபவியுங்கள். மொத்தத்தில் enjoy பண்ண வேண்டியதை எஞ்சாய் பண்ணுங்கள்
3. முடிந்த அளவு, தான, தர்மம் செய்யுங்கள்.பணத்தை வைத்துப்
பிறருக்கு உங்களால் முடிந்த அளவிற்கு உதவுங்கள்.
4.உங்கள் குழந்தைகளையோ அல்லது பேரக்குழந்தைகளையோ,நீங்கள் செத்தபிறகுதான், உங்கள் பணம் அவர்களுக்குக் கிடைக்கும்
என்கின்ற நிலைமையை, நினைப்பை உண்டாக்கிவிடாதீர்கள்.
5. நீங்கள் செத்த பிறகு உங்களுடைய பணம் என்ன ஆகும் என்றோ அல்லது உங்களை யார் பாராட்டுவார்கள் அல்லது திட்டித் தீர்ப்பார்கள் என்ற கவலை எல்லாம் உங்களுக்கு வேண்டாம். அதைக் கேட்பதற்கோ அல்லது பார்ப்பதற்கோ நீங்கள் இருக்கப்போவதில்லை.
6. நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்து, சேர்த்த பணம் சொத்து எல்லாம்
ஒரு நாள் உங்களை விட்டுப் போகப் போகிறது. அதைத் தடுப்பதற்கும்
அல்லது காப்பாற்றுவதற்கும் நீங்கள் இருக்கப் போவதில்லை. அதை
மனதில் வையுங்கள்!
7. உங்கள் குழந்தைகளுக்காக அதிகம் கவலைப் படாதீர்கள். அவர்களின் வாழ்க்கை அவர்களுடைய தலைவிதிப்படிதான் நடக்கும். அதில் உங்கள் பங்காற்றலுக்கு எந்த வாய்ப்பும் இல்லை. நோ சான்ஸ் ஃபார் யூ!
8. நீங்கள் மாங்கு மாங்கென்று என்னதான் உழைத்தாலும், தினசரி
வாழ்க்கை ஒரே மாதிரி சீராக இருக்காது. தொட்டிலில் படுத்திருந்த
காலத்தில் இருந்து சுடுகாட்டில் படுக்க வைக்கப்படும் காலம்வரை
ஒரே மாதிரி இருந்தால், அதில் சுவாரசியம் எங்கே இருக்கும்?
ஒரு நாள் மகிழ்ச்சியோடு இருப்பீர்கள். ஒரு நாள் மகிழ்ச்சியின்றி
இருப்பீர்கள். எல்லா தினங்களையும் ஒரே மனப்போக்கில் ஏற்றுக்கொள்ளுங்கள்.
”வந்ததை வரவில் வையுங்கள்
சென்றதை செலவில் வையுங்கள்”
அதுதான் கவியரசர் கண்ணதாசன் எழுதிவைத்த மகிழ்ச்சிக்கான
சூத்திரம்!
9. எப்போதும் உற்சாகமாக இருந்தால் உங்களுக்கு ஏற்படும் நோய்,நொடிகள் தானாகவே சரியாகும். உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் இருப்பவரை நோய் நொடிகள் அண்டாது!.
10. உங்கள் உறவினர்களையும், நண்பர்களையும் போற்றி வைத்துக்கொள்ளுங்கள். அவர்கள் இல்லையேல் உங்கள்
வாழ்க்கை தனிமைப்பட்டுப் போய்விடும்!
11. மன அழுத்தம் ஏன் ஏற்படுகிறது தெரியுமா? எதிர்பார்ப்பிற்கும்,
நடப்பிற்கும் உள்ள இடைவெளிதான் மன அழுத்தத்தை உண்டு
பண்ணும். அந்த இடைவெளி அதிகமாக அதிகமாக மன அழுத்தமும் அதிகமாகும். ஆகவே எதையும் எதிர்பார்க்காதீர்கள். எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ளுங்கள்
12. அடிக்கு அடி, சரிக்குச் சரி, என்ற போட்டி மனப்பான்மையை
உதறித் தள்ளுங்கள். ஒரு நாய் நம்மைக் கடித்தால் அதை நாம் திருப்பிக்கடிக்க முடியாது. ஆகவே உங்கள் தராதரத்தை, மேன்மையை விட்டுக் கொடுக்காதீர்கள். அடுத்தவர்களுக்கு உதாரணமாக இருங்கள்.அதுதான் நல்லது.
சுருக்கமாக, எதையும் ஒரு முறைக்கு இருமுறை யோசித்துச் செய்யுங்கள். புத்திசாலித்தனத்துடன் நடந்து கொள்ளுங்கள். நடப்பதை ஏற்றுக்கொள்ளுங்கள். வாழ்க்கை சுவையாக இருக்கும்.
--------------------------------------------------------------------

உங்கள் மனைவி அல்லது காதலியிடம் நல்ல பெயர் வாங்க சில ஐடியாக்கள் இங்கே உங்களுக்கு......Just for FUN.
1.காலையில் எழுந்தவுடன் 'ஹாய்..குட்மார்னிங்'ன்னு ஒரு SMS அனுப்பனும். உன் குரலை கேட்டாத்தான் இன்னைக்கு பொழுதே நல்லபடியா விடியுதுன்னு ஒரு அப்பட்டமான பொய்யை அவிழ்த்து விடணும் (ஒருரூபாய்செலவுதான்.என்னங்க
பண்றது? பண்ணித்தான் ஆகணும்.) இதே விஷயத்தை ராத்திரி தூங்குறதுக்கு முன்னாடியும் நீங்க செஞ்சாகணும்.
2.அவங்களைப் பார்க்கபோறதுக்கு முன்னாடி உங்க செல்ஃபோனோட ஸ்கிரீன்சேவர்ல அவங்களோட புகைப்படத்தை கண்டிப்பா வெச்சுக்கணும். (எப்பவும் உன்முகத்தையே பார்த்துகிட்டே இருக்கணும்ன்னுதான் இந்தமாதிரி வெச்சிருக்கேன்னு சொல்லுங்க. இதுலையே அவங்க க்ளீன் போல்ட்)
3.அவங்க பேரோட முதல் எழுத்தை பைக்-கீ-செயின்ல தொங்கவிட்டுக்குங்க. எப்பவும் நீ என் கூடவே இருக்கணும்ன்னு தான் இந்தமாதிரி செய்யுறேன்னு ஒரு பிட்டை விடுங்க. அப்புறம் பாருங்க...
4.சினிமாவுக்கு கூட்டிட்டு போனீங்கன்னா படத்தை பார்க்கறீங்களோ இல்லையோ கண்டிப்பா ஐந்துநிமிஷத்துக்கு ஒருவாட்டி அவங்களை திரும்பி திரும்பி பார்க்கணும். 'எதுக்கு என்னையே பார்க்குறீங்க'ன்னு கேட்பாங்க. 'உன்னைப் பார்க்கும்போது இருக்கிற சுவாரஸ்யம் படம் பார்க்கும் போது இல்லை'ன்னு நீங்க சொல்லணும். (வேறவழி இல்லைங்க. இந்த மாதிரி எல்லாம் நாம டயலாக் விடணும்ன்னு அவங்க எதிர்பார்ப்பாங்க)
5.அவங்க பேர்ல நிச்சயம் ஏதாவது தமிழ்பாட்டு வந்திருக்கும். அந்த பாட்டை எப்படியாவது தேடி கண்டுபிடிச்சு ரிங்டோனா வெச்சுக்குங்க. அவங்க உங்ககிட்ட சண்டை போடும்போது, உங்க ஃபிரண்டைவிட்டு உங்க நம்பருக்கு கால் பண்ண சொல்லுங்க. அந்தபாட்டு வந்த உடனே அவங்களை பாருங்க. சண்டை எல்லாம் எங்கே போகுதுன்னே தெரியாது.
6.கவிதைங்கிற பேர்ல எதையாவது நீங்க கிரீட்டிங் கார்ட்ல கிறுக்கிக் கொடுத்தே ஆகணும். அந்த கவிதைகள்ல
வானம்,கடல்,குயில்,தேவதை,மயில்,போன்ற வார்த்தைகள் கண்டிப்பா இருந்தே ஆகணும்.
7. "நீரொம்ப அழகா இருக்கே" ங்கிற அகில உலக பொய்யை ஒரு நாளைக்கு ஐந்து வாட்டியாவது நீங்க சொல்லியே ஆகணும். (இதுக்கு நீங்க கடவுள்கிட்ட தனியா மன்னிப்பு கேட்டுக்குங்க)
8.ஹோட்டலுக்கு கூட்டிட்டு போனீங்கன்னா 1st நீங்க ஆர்டர் பண்ணக்கூடாது. மெனுகார்டை அவங்ககையில கொடுத்து, அவங்களைத்தான் ஆர்டர் பண்ண சொல்லணும்.புரியுதா? (பெண்களோட உணர்வுகளுக்கு நீங்க மதிப்பு கொடுக்குறவர்ன்னு அவங்களுக்கு தெரியணும் இல்லை. அதுக்குத்தான்)
9.அவங்க எப்படித்தான் ட்ரஸ் பண்ணாலும், "இந்தட்ரஸ்ல நீ தேவதை மாதிரி இருக்கேன்னு மனசாட்சியை கழட்டிவெச்சிட்டு பொய் சொல்லணும்".(ராத்திரியில நீங்க தூங்கும் போது தேவதைங்க உங்க கண்ணை குத்தும். சமாளியுங்க)
10.ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயம். அவங்க தோழிங்ககிட்ட பேசும் போது ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும். அவங்க தோழிங்களை நீங்க கண்டுக்காத மாதிரியே இருக்கணும். ஏன்னா பல பிரச்சனைகளோட தொடக்கம் இங்கே இருந்துதான் ஆரம்பிக்குது.
இந்த விஷயங்களை எல்லாம் கடைபிடிச்சு பாருங்க.உங்க காதலி அல்லது மனைவி உங்களை தலையில தூக்கி வெச்சு கொண்டாடுவாங்க.
--------------------------------------------------------------------------------


No comments:

Post a Comment

நான் ஒரு விவசாயி.

My photo
CHENNAI, TAMILNADU, India
Work "MORE",Talk "LESS"
Powered By Blogger

Search This Blog