27.10.15

ஹைக்கூ.....

------------------------------------------------------
தையும் பிறந்தது
வழியும் திறந்தது
சபரிமலை யாத்திரை
------------------------------------------------
எல்லா "மிஸ் யூ"களும் 
காதலை நோக்குவதாகவும்,

எல்லா "லவ் யூ"களும் 
காமத்தைநோக்குவதாகவும்
மட்டுமே இருந்து விடுவதில்லை!

-----------------------------------------------------------------------------------------
காந்திஜி பிறந்த நாள்

கைதிகளுக்கு கருணை விடுதலை.
வெளியே வந்தவன் நொந்து கொண்டான்
இன்னைக்குப் போயி வெளியே வந்தேனே
எல்லாக் கடையும் அடைச்சிருக்கு!

-----------------------------------------------------------------------

சுதந்திர தினம்
கைதிகளுக்கு 
வடை பாயாசத்தோடு சாப்பாடு!

அறவழியில் போராட்டம்

புறப்பட்டார் தலைவர்
பின்னாலேயே 
பாதுகாப்புக்கு 
துப்பாக்கியுடன் பூனைப்படை

------------------------------------------------------------
அகிம்சை

என்கெளன்ட்டர் முடித்து
வெற்றிகரமாக திரும்பி வந்தார் இன்ஸ்பெக்டர்.
இருக்கைக்குப் பின்புறம் காந்தி சிரித்துக் கொண்டு!

--------------------------------------------------
ஊருக்கே படியளந்த
விவசாயிக்கு
மதிய உணவு திட்டம்...

----------------------------------------------------------

மூன்று மணி நேரம் ஷகீலா படம்.
மிஞ்சிய முப்பது காசு சில்லறையில்
தெருக்கோயிலுக்குக் கற்பூரம்...

-------------------------------------------------------------
ஒரு குடம் பாலை
சிறுதுளியால் வென்றதால்
விஷமே பெரிது..?????

--------------------------------------------------------

புதுத்துணி வாங்கித்தரும்
அப்பா-அம்மா
உடுத்திக் கொள்கிறார்கள்
பாசத்தை
 பண்டிகைக்கு பண்டிகை
மட்டும்!
 -------------------------------------

 ஆயிரம் முறை
கண்ணாடி பார்த்தேன்
நீ
ஒரு முறை பார்ப்பதற்காக!
 ----------------------------------------------

பூக்கள்
வாடாமல்
இருக்க
கண்ணீர்
தெளித்து
விற்கிறாள்
விதவை!
 --------------------------------------
கண்ணே உன் கூந்தலுக்கு பூச்சூட
நான் உந்தன் குடும்பத்துக்கே
பூச்சூட வேண்டியிருக்கிறது.

அவர்கள் காதுகளில்!

-----------------------------------------------------

கண்ணேகொஞ்சம் வெளியே வா!
வெண்ணிலாவைக் காணாமல்
எதிர்வீட்டுக் குழந்தை
உண்ண மறுக்கிறது!

---------------------------------------------- 

கருக்கலைப்பு

முகவரி தெரிந்தும்
முகம் தெரியவில்லை
விடை அறியுமுன்
வினா அழிக்கப்பட்டடது!

 -------------------------------------------
கடவுள் சன்னதியிலும்
நிம்மதியில்லை
காவலில்லாமல் காலணிகள்!
 -----------------------------------------
படிக்க விரும்பினேன்
தடுத்தார் அப்பா
காதல் பாடம்!
--------------------------------

கடைசியாக
எப்படியோ மனசு மாறி
காதலைச் சொல்கிறாள். . .
அவன் கல்லறையில்!
 ---------------------------------

நல்லவர்களையும்
நாசமாக்கிவிடும்
நாலந்தா பல்கழைக்கழகம்.
அரசியல்!

 ---------------------------------------------------------------------


உண்மையின் பக்கம் போவதை பலர்
விரும்புவதில்லை.
உண்மையை தன் பக்கம் வளைத்துக்
கொள்ளவே விரும்புகிறார்கள்..!


  
 -------------------------------------------------------------- 
தோற்றுக்கொண்டேயிருப்பது தோல்வி அல்ல!
முயற்சியைக் கைவிடுவதே உண்மையான
தோல்வி..!
 -----------------------------------------------------------------
மழைக்கு ஏங்கிக் கிடக்கும் ஊரிலும்
மழை பெய்தால்,

திட்டறதுக்கு இரண்டு பேர்
இருப்பான்..!

-------------------------------------------------------------------
அலைதல் இனிது,
திரிதல் இனிது
தேடல் இனிது,
தெளிதல் இனிது
தெளிந்த பின்னும்
தேடல் தொடர
வாழ்தல் இனிது..!

 ----------------------------------------------
பெண்ணுரிமை பேசும் ஆண்களை திருமணம்
என்ற சடங்கு ஆணாதிக்கவாதிகளாக மாற்றி
விடுகிறது என்கிறார் நண்பர் ஒருவர்…
-
#உண்மைதானோ..?
 -------------------------------------------------------------
உன் நினைவை எங்கும் இறங்கி வைக்க
மனமில்லை…
சுமந்து கொண்டே திரிகிறேன்..!

-----------------------------------------------------------------------
-------------------------------------------------------------
டாக்டர் சொல்லாமலேயே
மூச்சை இழுத்துவிட்டான் நோயாளி
எதிரே நர்ஸ்!
----------------------------------------

மெளசுக்கு மவுசு கணிணியில்

மெளசால் ரவுசு

கழனியில்
-------------------------------- 




ஓடும் வாகனம் 
விடும் மூச்சு
கருத்தது காற்று !

-------------------------------------------------- 
அஹிம்சையை போதிக்க 
ஆசிரியர் வந்தார்
கையில் பிரம்போடு....

----------------------------------------------------------------




இறந்து போனவனை
கடித்தது எது?
நல்ல பாம்பு.
-------------------------------


காலில் வலி.
மருத்துவரிடம் போனேன்.

இப்பொழுது,

கையில் வலி.
ஊசி போட்டதால்!

சட்டை பையில் வலி.
காசு போனதால்!
----------------------------------------


பேருந்துக்குள்ளே
இடிதாங்கிகள்
பெண்கள்!

-------------------------------------------------

 மந்திரித்த மரத்தில் பழம்.
பறித்தவன் ரத்தம் கக்குவானாம்.

சிரித்தன அணிலும் கிளியும்...

-------------------------------------------------
நலமுடன் உள்ளவர்.
மனசு சரியில்லை என்றார்.

உடலெங்கும் காயம்.
நலம் என்றார்.

-----------------------------------------------------------
அம்மாதாயே பிச்சை போடும்மா,

போட்டபின் கேட்டேன்
உன் பெயர் என்னப்பா?

'கோடீஸ்வரன்'

---------------------------------------------------

நெற்றியில் காயம்
ரத்தத்திற்குத் தெரியாது.

அவள் 'விதவை' என்று!

-------------------------------------------------------------------

வேண்டாம் எனக் கதறியும்
மரண தண்டனை.
கொடுத்தவர்கள் கேட்ட கேள்வி.
"கடைசி ஆசை என்ன?"

-----------------------------------------------------------------------------

மேடையில் ஜீவகாருண்யம் பேச்சு
ஓங்கி ஒரு அடி
கையில் ரத்தம் குடித்த 
கொசு காலி.

----------------------------------------------------------------------------

எறும்பும் தேளும் இருந்தால் என்ன?
எடுத்துப் போட்டுவிட்டு இன்னும் குடிக்கிறேன்..
இனிக்கிறது வாழ்க்கைக் கள்!

---------------------------------------------------------------

வாயினால் கூறிய வார்த்தைகளை...
கேட்ட காதுகள்தானே வலிக்க வேண்டும்.
இதயமே நீ வலிப்பது ஏன்?

------------------------------------------------
குழந்தையிடம் முத்தம்
கேட்டால் மாமன்,

குமரியிடம் முத்தம் 
கேட்டால் காமன்.

என்னப்பா உலகம் இது.

--------------------------------------------------------
ஈரம் என நினைத்து...
உரசிய தங்கம்... 
உருகிய பின் உணர்ந்தது 
தீண்டியது திராவகம்.

--------------------------------------------------

வரும் நேரமோ இருள்.
வந்து கொடுப்பதோ ஒளி -
நிலவு. :)
--------------------------------------------------------
காப்பாற்றி பறக்கவிட்ட பூச்சி
நேரே போனது
சிலந்திவலை நோக்கி

--------------------------------------------------------------

எங்களுக்கும் சிறகுகள் வேண்டும்
இது 
இலையுதிர் காலம்
வேடந்தாங்கல் மரங்கள்!
----------------------------------------------------
''சில வாரங்கள் பூசுங்கள்..
சிவப்பழகு நிச்சயம்'' -
கருத்த முகத்தில் வேர்வையும்
சிரிப்புமாய் விற்பனைப் பெண்

--------------------------------------------------------------------------------------
"உங்களுக்காக இத்தனை வருடங்கள் உங்கள் இஷ்ட்டப்படி வாழ்ந்தது போதும் 
இனிமேல் எங்களுக்காக எங்கள் இஷ்ட்டப்படி வாழுங்கள்என்று என் மனைவி 
அவளுடைய பிறந்த நாளான இன்று என்னிடம் கேட்டது பளிச்சென்று உறைக்கிறது எனக்கு!!!

------------------------------------------------
களத்துமேடும் இல்ல..
களஞ்சியமும் இல்ல..
கதிரறுப்பு முடிஞ்சிருச்சு..!

----------------------------------------------------------

வாகன ஓட்டியின் பார்வையில் -

கொளுத்தும் மதியம்... 
தகிக்கும் வெப்பம் ...
மெ..ல்..... மாறும் சிவப்பு விளக்கு..!



கணவன் மனைவி சண்டை 
அமைதியாக முடிந்தது 
பாத்திரங்கள் பேசிக் கொண்டன...


பெண்களுக்கு 33 சதம் என்ன?
பாதிக்கும் மேலே இடம் தந்தார்
படுக்கையிலே தலைவர்!

-----------------------------------------------------------
குளிர்காலத்துக்காக கோடையில் உழை
கோடையை எண்ணி குளிரில் மகிழ்
கற்றுக்கொடுக்குது கட்டெறும்பு..

-----------------------------------------------
தென்னை மரத்தில்
ஓலை தட்டி.

'கோக்'குடன் விக்ரம்!

---------------------------------------------------


குருடனுக்கு விளக்கேற்றி
வீணாய்ப் போனது
விலைமதிப்பற்ற எண்ணெய்!

-----------------------------------------------
சேற்றில் எருமை
சுத்தமான நெய்யாம்
தொலைகாட்சியில் விளம்பரம்
--------------------------------------------
பூ விற்று
பிழைப்பு நடத்துகிறாள் 
விதவை.

-----------------------------------
வெண்மைக்கு
இழுக்கு....
விதவைகோலம்.!

கருமை 
கௌவரவிக்கப்படுகிறது...
கார்மேகம்...!


பலருடன் உறவு 
கொள்பவள் என்று
ஊருக்கு வெளியே 
இருக்கச் சொன்னார்கள்,
அவளுடன் உறவு 
கொண்ட பெரியவர்கள்.
-
-
----------------------------------------------------


அத்துணையும் துறந்த 
மகாவீரரைக் காக்க
சுற்றிலும் கோட்டை!




ஆங்கிலப்படக்கதை
அப்பட்ட திருட்டுத்தழுவல்
அழகிய தமிழில் தலைப்பு!

திருடிய கதைக்கு
தமிழில் தலைப்பு சொந்தம்..!!

---------------------------------------------------------------

சந்திரன்,

தான் ஒளி பெறும் சூரியனுக்கு 
நன்றி கூறுகிறதோ இல்லையோ..

நாம் கூறுவோம்
நம் சூரியனுக்கு....!!

----------------------------------------------------------
ஒன்றே குலம் ஒருவனே தேவன்
முழங்கினார் சட்டசபையில்
ஜாதி கட்சியைச் சேர்ந்த எம்.எல்..

-----------------------------------------------------------------
காலை
கண்ணகி பட்டிமன்றம்
தலைவர் தலைமையில்.

இரவு
தலைவர் தனியறையில்
அருகில் விலைமகள்!!!

காலையில் கண்ணகி..
மாலையில் மாதவியோ..?
---------------------------------------------------------
இழந்துவிட்ட இளைஞனுக்கு ஆசை.

கற்புள்ள பெண்ணை மணமுடிக்க!

-------------------------------------------------------------------------------------

சாலையை கடக்க 
முயன்ற பொழுது
அடிபட்டு இறந்தார்
போக்குவரத்து அதிகாரி...

No comments:

Post a Comment

நான் ஒரு விவசாயி.

My photo
CHENNAI, TAMILNADU, India
Work "MORE",Talk "LESS"
Powered By Blogger

Search This Blog