27.10.15

முகநூலில் எனது பதிவேற்றங்கள்-1





அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலை கழகத்தில் ஒரு ஆராய்ச்சி செய்தார்கள்.
பழையதை வைத்து.
முன்தினம் வடித்த சோறை நீர்விட்டு அதில் தயிரையும் சேர்த்து பிசைந்து சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும் என்று.
கிடைத்த முடிவுகளை பார்த்து மூக்கின் மேல் விரலை வைத்துக்கொண்டு சொன்னார்களாம் தென்னிந்தியர்கள் மனிதர்கள் அல்ல அவர்கள் தேவர்களாகத்தான் இருக்க வேண்டும். ஏனெனில் அவர்களின் பாரம்பரிய உணவான
இந்த பழையதையும் தயிரையும் உண்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.!
வெள்ளை அணுக்கள் அதிகரிக்கிறது.!
உடல் சோர்வை போக்குகிறது.!
உடலில் உள்ள அனுச்சிதைவுகளை
தடுக்கிறது.!
உடல் சூட்டை தணிக்கிறது.!
வயிற்றிலுள்ள பழைய கழிவுகளை விரைந்து வெளியேற்றுகிறது.!
உற்சாகமான மனநிலையை தருகிறது.!
என்று பலவிதமான நன்மைகளை
பட்டியலிட்டனர்.
இந்த ஆராய்ச்சி முடிவுகள் வெளிவந்ததும்.
நம்மவர்கள் குப்பை உணவான பர்கரையும்
பீட்சாவையும் புரோட்டவையும் தேடி
அலைவது போல உலகமே பழையச்சோறை
தேடி அலைந்தது
HOW to MAKE PALAYA
SORU? என்று அமெரிக்கர்கள் இந்திய
நண்பர்களிடமும் இணையத்திலும்
கேள்விகேட்க ஆரம்பித்துவிட்டனர்.
நட்சத்திர ஓட்டல்களிலெல்லாம்
பழையச்சோறை புதிய நவீன உணவு
பட்டியலில் சேர்த்தர்வு விட்டனர்.
ஆனால் இன்றைக்கு நம்மவர்கள்
சளிபிடிக்கும், உடல் குண்டாகி விடும்
என்றெல்லாம் சொல்லி பழையதை பழித்து
வருகிறார்கள்.
அதுபெரிய தவறு வெயில் காலங்களில்
மட்டுமல்ல அனைத்து நாட்களிலும்
சாப்பிடுவதற்கேற்ற அருமையான உணவு பழையசோறு.!
சாப்பிட்டு மீதம் உள்ள சாதத்தில் சுமார் ஒரு மணிநேரம் கழித்து தேவையான அளவு
தண்ணீரை ஊற்றி மூடிவைத்து 6 முதல் 8 மணிநேரம் கழித்து திறந்து பார்த்தால் அமிர்த பானம் தாயரிக்க தேவையான முக்கிய
பொருளான பழையது தயார்.
இதில் தேவையான அளவு சாதத்தை ஒரு மண்சட்டியில் எடுத்து அதனுடன் தயிர் கலந்து சின்னவெங்காயம், வெண்டைக்காய்
ஆகிய வற்றையும் சிறிது சிறிதாக
வெட்டிப்போட்டு, தேவைப்பட்டால் சிறுது உப்பையும் ஒரு பச்சை மிளகாவையும் கலந்து நன்றாக பிசைந்து சாப்பிட்டு பாருங்கள்.
ஆகா.! இதுதான் தேவாமிர்தம் என்பதை நீங்களே ஒப்புக்கொள்வீர்கள்.
இந்த உணவு முறையை வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமாவது கடைபிடியுங்கள்
பாற்கடலை கடைந்து அமிர்தம் எடுத்தவர்கள்
தேவர்கள்.!
அரிசிப்பானையில் தேவாமிர்தம் எடுக்க கற்றுக்கொடுத்தவர்கள் நம் முன்னோர்...
✿ பிடிச்சா லைக் பண்ணுங்கள்...
ரொம்ப பிடிச்சா ஷேர் பண்ணுங்கள்...
சூப்பரா இருந்தா கமண்ட் பண்ணுங்கள்.-
----------------------------------------------------------------------------------------------------

இது ஒரு பொது பதிவு.👇...
ஆண்களும் பெண்களும் காதலிக்கும் முன்பு
யோசிக்க
வேண்டியவை.....????
காதல் எப்ப எங்க எப்பிடி வரும் என்று
தெரியாது என்பீர்கள்
ஆனாலும் முடிந்தால்
படியுங்கள்.👇
1) முதலில்
உங்களை பற்றி உணருங்கள்.
2) உங்கள் குடும்பத்தை பற்றி யோசியுங்கள்.
3) நம் குடும்பத்தில் காதலை ஏற்பாற்களா ?
என்று சிந்தியுங்கள்.
4) நாம் காதலிக்க கூடிய நபரை பற்றி தெரிந்து
கொள்ளுங்கள்.
5) அவருடைய குடும்பத்தை விசாரியுங்கள்.
6) காதலிக்க நினைக்கும் நபரிடம்
தோழமையோடு பழகி அவருடைய நல்ல /
கெட்ட விசயத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
7 ) நீங்கள் காதலிக்கும் நபரை பற்றி உங்கள்
வீட்டில் பேச
உங்களுக்கு தைரியம் இருக்கின்றதா என்று
யோசியுங்கள்.
8 )காதலிக்கும் நபர் விட்டு கொடுக்கும் மணம்
இருக்கின்றதா என்று எண்ணுங்கள்.
9) நம் வீட்டில் உள்ளவர்கள் ஜாதி பார்பவர்களா
என்று பாருங்கள்.
10. அன்பு நண்பர்களே .
அடுத்தவர்கள் காதலிக்கிறார்கள் என்று நீங்கள்
காதலிக்காதீர்கள்.
இவை அணைத்தும் சரியாக இருந்தால்
நீங்கள் தாராளமாக காதலிக்கலாம்.
நீங்கள் ஆராய்ந்தவற்றில் தவறு இருந்தால்
தயவு செய்து காதலிக்காதீர்.
நீங்க காதலிச்சு அது நடக்கவில்லை எனில்
கஷ்டம்
உங்களுக்கு மட்டும் இல்ல.
நீங்க காதலிக்குறவங்களுக்கும் கஷ்டம்.
உங்கள் பெத்தவங்களுக்கும் கஷ்டம்... ........🏻

----------------------------------------------------------------------------------------------------

திருமணமான அன்று அந்த இளம் தம்பதியினர் அவர்களுக்குள் ஒரு போட்டி வைத்து கொண்டனர்.
அதாவது இன்று முழுவதும் யார் கதவை தட்டினாலும் நாம் திறக்க கூடாது என்பது தான் அந்த போட்டி.
போட்டி துவங்கிய சில மணி நேரத்திலே கணவரின் பெற்றோர்கள் கதவை தட்டினர். கணவர் கதவை திறக்கலாம் என்று நினைக்கும் போது, போட்டி ஞாபகத்துக்கு வரவே கதவை திறக்காமலே இருந்தார். அவரின் பெற்றோரும் சிறிது நேரம் கதவு அருகிலேயே நின்றிருந்து, கதவு திறக்காததால் சென்று விட்டனர்.
சில மணி நேரத்தில் அந்த பெண்ணின் பெற்றோர் கதவை தட்டினர். கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர். மனைவியால் தன் பெற்றோர் வெளியே நிற்பதை பார்க்க முடியாமல் கண் கலங்கி கொண்டே "என்னால் இனி மேலும் சும்மா இருக்க முடியாது" என்று கூறியவாரே கதவை திறந்து விட்டாள்.
கணவரும் ஒன்றும் சொல்லவில்லை .
நாட்கள் உருண்டோடின. அவர்களுக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் பிறந்தனர்.
அவள் கணவர் தனக்கு மகள் பிறந்ததை கொண்டாட பெரிய விருந்து ஏற்பாடு பண்ணினார். மகிழ்சியுடன் விருந்து நடந்து முடிந்தது.
அன்று இரவு அவர் மனைவி,
"நமக்கு மகன்கள் பிறந்த போது இந்த அளவு நீங்கள் கொண்டாடவில்லையே ஏன்? என்று கேட்டார்.
அதற்கு அந்த‌ கணவர் சொன்னார்,
"என் மகள் தான் நாளை எனக்காக கதவை திறப்பாள்"
===பெண்கள் எப்போதுமே விலை மதிப்பில்லாதவர்கள்,
பாசத்துக்குறியவர்கள். பெண்மையை போற்றுவோம்!!!


-------------------------------------------------------------------------------------------------------------------------------

ஒரு ஊரில் ஒரு சிட்டுக் குருவிஒன்று  இருந்தது. அதற்கு வினோதமான பொழுதுபோக்கு.
ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை சேகரிப்பது போல, தனக்குக் பின்னால் ஒரு பை-யை கட்டிக் கொண்டு, வினோதமான உணர்வுகளை மனித இனத்திலிருந்து சேகரிக்க ஆரம்பித்தது.
மனிதர்களுக்கு இடையே ஒரு இடத்தில் சண்டை நடப்பதைப் பார்த்தால் அங்குள்ள கோபத்தை அது சேகரிக்கும். இன்னொரு இடத்தில் இருக்கும் ஏமாற்றத்தை அது சேகரித்துக் கொள்ளும். பொறாமையில் ஒருவன் தீயாக எரிந்ததைப் பார்த்தால் சிட்டுக்குருவிக்கு சந்தோசம் வந்து விடும். தன் பையில் பொறாமையை சேர்த்துக் கொள்ளும்.
இப்படி பார்க்கும் இடமெல்லாம் அபூர்வமான வினோதமான உணர்வுகளைச் சேகரிக்க ஆரம்பித்தது.
மனிதர்களின் சண்டைகளில் தான் எத்தனை விதம்! பொறாமைகளில் எத்தனை புது மாதிரிகள்!! பேராசைகளின் அடிப்படையிலான வினோதமான உணர்வுகளுக்கோ அளவே இல்லை. தனது சேகரிப்பினை எண்ணி மகிழ்ந்து போனது அது! இன்னும் சில நாட்களில் அதன் குட்டிப் பை வினோத உணர்வு சேகரிப்புகளினால் நிரம்பித் தளும்பப் போகிறது!!
ஒரு நாள் அதற்கு பறப்பதற்கு சற்று கஷ்டமாக இருந்தது. இது வரை லகுவாக மயிலிறகு போல ஜம்மென்று வானில் சீறிப் பாய்ந்த அதனால், இன்று வேகமாகப் பறக்க முடியவில்லை.
சோர்ந்து போன அது, ஒரு மரத்தில் வந்து உட்கார்ந்தது. அதைப் பார்த்த அதனுடைய நண்பனான நாய், "என்ன குருவி! வழக்கத்திற்கு மாறாக இப்படிச் சோர்ந்து உட்கார்ந்திருக்கிறாயே! உடம்புக்கு என்ன?" என்றது. "நண்பனே! என்னால் பறக்க முடியவில்லை! வேகமாகச் செயல்பட முடியவில்லை. எனது ஆற்றல் போய் விட்டதைப் போல உணர்கிறேன். காரணமும் புரியவில்லை" என்றது.
நண்பனான நாய், "அது சரி, உன் பின்னால் ஒரு பை வைத்திருக்கிறாயே, அதில் என்ன இருக்கிறது?" என்று கேட்டது. "அதுவா, என்னுடைய சேகரிப்புகளான உணர்வுகளை வைத்திருக்கிறேன்!" என்றது குருவி. "அட, அப்படியா? என்ன என்ன உணர்வுகள்? எனக்குச் சொல்லேன்" என்றது நாய்.
"எங்கு பார்த்தாலும் ஏமாற்றம், பொறாமை, சோகம், கோபம், பேராசை. இவையெல்லாம் வேறு வேறு ரூபத்தில் விதவிதமாக எனக்குக் கிடைத்தன. அனைத்தையும் சேகரித்திருக்கிறேன்." என்றது குருவி.
"அப்படியா! இந்த பை தான் உன்னைப் பறக்க விடாமல் செய்கிறது என நான் எண்ணுகிறேன். இதைக் கவிழ்த்துக் கொட்டிப் பாரேன்" என்றது நாய்.
"சே! புரியாமல் பேசுகிறாயே! இது மிகவும் சிறிய பை! இதில் கனமே இல்லை" என்றது குருவி. நாய் நண்பன் விடவில்லை. "எனக்காக நான் சொல்வதைச் செய்து பாரேன்" என்றது அது.
ஒத்துக் கொண்ட குருவி, தன் பையிலிருந்து ஒரு கோப உணர்வை எடுத்துக் கீழே போட்டது. அடுத்த கணம் வானில் ஜிவ்வென்று பறந்தது. அதிசயித்துப் போன அது இன்னொரு உணர்வான பொறாமையை எடுத்துக் கீழே போட்டது. என்ன அதிசயம்! இன்னும் ஆற்றல் கூடி அதிக உயரத்தில் பறக்க ஆரம்பித்தது. ஒவ்வொன்றாக அது கீழே போடப் போட முன்பிருந்ததை விட லேசாக மாறி அதிக உயரத்தில் அதிக ஆற்றலுடன் அது பறக்க ஆரம்பித்து விண்ணையே தொட்டு விட்டது.
சிறிது காலம் சென்ற பின்னர் அது நாயைச் சந்தித்த போது சொன்னது:- "நண்பனே! ஒரு அரிய உண்மையை எனக்கு நீ உணர்த்தி விட்டாய். இந்த எதிர்மறை உணர்வுகளை சேகரிக்கவே கூடாது. அவை மிகச் சிறியவை போலத் தோற்றமளித்தாலும் அதன் பாரம் மிகவும் பெரிது. அது மட்டுமல்ல, அவை என்னுடைய சக்தியை உறிஞ்சி விட்டன! ஒவ்வொன்றாக அவற்றைக் கழட்டி விட கழட்டி விட எனது ஆற்றலும் வேகமும் முன்பை விடப் பல நூறு மடங்கு பெருகி விட்டது. விண்ணையே என்னால் இப்போது தொட முடிகிறது.
மனிதர்களும் இது போன்ற உணர்வுகளைச் சுமக்காமல் அவ்வப்பொழுது இவற்றைக் கழட்டி விட்டால், அவர்களும் விண்ணைத் தொடும் சாதனைகள் பல புரியலாம் அல்லவா!" என்றது சிட்டுக்குருவி."ஆமாம்! ஆமாம்! மிகச் சரியாகச் சொன்னாய்" என்று தலை ஆட்டியபடியே ஒத்துக் கொண்டது நாய்.
------------------------------------------------------------------------


மக்களோடு டை அப் போட்டுக்கொண்டு அரசு ஊழலில் ஈடுபடுகிறது. மக்களுக்கு கமிஷனை இலவசம், விலையில்லா பொருள் என்ற வகையில் கொடுத்து விடுகிறது.

அதனால் மக்களுக்கு ஊழல் ஒரு பிரச்சனையே அல்ல. ஏனெனில் அவர்களும் அதில் பங்குதாரர்கள்.

மக்கள் சக்திக்கு மீறி ,அவர்களுக்கு பங்கு கொடுக்காமல், அவர்கள் வயிறெரியும் அளவுக்கு ஊழல் செய்யும்போதுதான் கோபப்படுகிறார்கள்.

வணக்கம்,
நான் பீட்ரூட் விவசாயிகள் படும் துயரம் பற்றி நான்கு நாட்களுக்குமுன் பதிவிட்டிருந்தேன்.அந்த பதிவுக்கு ஆதரவாக நிறைய பிண்ணூட்டங்கள் இட்டிருந்தீர்கள்.விவசாயிகளுக்கு ஆதரவாக நீங்கள் இருக்கிறீர்கள் என்பது எனக்கு இன்னும் பெரும்பலத்தை தருகிறது.

பீட்ரூட்மட்டுமல்ல,அவரை,பீன்ஸ்,காளிஃப்ளவர்,தக்காளி,புடலை,வெண்டை,தேங்காய் போன்ற அனைத்து காய்கறிகள் பயிரிடும் அனைத்து விவசாயிகளுக்கும் இதே நிலைதான்.

எங்கள் கிராமங்கள் ஒட்டன்சத்திரத்தை மையமாகக் கொண்டுள்ளன.தமிழ்நாட்டிலேயே மிகப்பெரிய காய்கறி மார்கெட் இங்குதான் உள்ளது.இங்கிருந்து தமிழ்நாடு முழுவதும் மற்றும் தென் மாநிலங்களுக்கும் தினசரி சுமார் 200 முதல் 300 லோடு காய்கறிகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. எனவே காய்கறி பயிரிடுவதே எங்களது பிரதான விவசாயமாக உள்ளது.

என்னுடைய பீட்ரூட் பதிவின் பிண்ணூட்டங்களில் நீங்கள் கூறியிருப்பது:
1)உழவர் சந்தையில் விற்கலாம்.
2)நேரடியாக மக்களிடம் போய் விற்கலாம்.
3)சிண்டிகேட் அமைத்து விற்கலாம்.
4)விவசாயிகள் நேரடியாக ஹோட்டல் போன்ற இடங்களில் விற்பனை செய்ய முயற்சி செய்ய வேண்டும்.
5)விவசாயம் மட்டும் தெறிந்தால் போதாது வணிக யுக்தியும் தெறிய வேண்டும்.
6)நேரடி விற்பனை செய்ய வேண்டியதுதானே.

இவையாவுமே சொல்வது எளிது.ஆனால் நடைமுறைப்படுத்த இயலாதுங்க.

உழவர் சந்தையில்,ஊருக்குள்,ஹோட்டல்களில்,நேரடியாக
மக்களிடத்தில் எல்லாம் விற்க முடியாது.ஒரு விவசாயி 5000 கிலோ ஒருநாளைக்கு விற்க முடியுமா?ஆயிரம் விவசாயிகளின் காய்கறிகளை நீங்கள் சொல்வதுபோல சந்தைப்படுத்த இயலாது.மேலும் ஸ்டாக் வைத்து விற்கும் பொருள்களும் கிடையாது.எனவேதான் இந்த கதி எங்களுக்கு.இந்த இயலாமைக்கு நாங்கள் பலிகடா ஆவதைதவிர வேறு வழியே இல்லை.

நாங்கள் வேண்டுமானால் ஒன்று செய்யலாம்,
இனிவரும் காலங்களில் எங்கள் தேவைக்கு மட்டும் காய்,கனிகளை விளைவித்துக் கொண்டு,மீதி நிலங்களை தரிசாகப் போட்டுவிடலாம்.இதற்கும் எங்களுக்குள் ஒற்றுமை இருக்காது.

இந்த ஒற்றுமையின்மையை பயன்படுத்திதான் வியாபாரிகள்,இடைத்தரகர்கள் எல்லாம் குளிர்காய்கிறார்கள்.இந்த நிலை ஒருநாள் மாறும்.அப்போதுதான் தெரியும் விவசாயியின் அருமை.

"எங்களுக்கும் காலம்வரும்"

இப்படிக்கு:
அந்த காலத்திற்காக காத்திருக்கும்
அபலை விவசாயிகள்.




ஊமையான செவிட்டு அரசாங்கம்
ஜனநாயக அரசு என்று சொல்லிக் கொள்ள தமிழக அரசுக்கு உள்ள தகுதியை மறுபரிசிலனை செய்ய வேண்டிய காலம் வந்து விட்டது.சாதாரன மக்கள் முதல் காந்தியவாதி சசிபெருமாள் வரை, பத்திரிக்கைகள் முதல் இரட்டை வேடம் போடும் அரசியல் கட்சிகள் வரை மது விலக்கினை கோரி போராட்டங்களை தொடரும் நிலையில் தமிழக அரசு மக்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்காமல் இருப்பது வேதனைக்குரியது. ஒரு படி மேலே போய் வெளிநாட்டு மது வகைகளை தமிழகத்தில் விற்க எலைட் மது அருந்தகங்களை கொண்டுவரவுள்ளதாக வெளியாகும் பத்திரிக்கைச் செய்திகள் இந்த அரசு மக்களை எந்த அளவுக்கு கேவலமாக எண்ணியுள்ளது என்பதை நமக்கு எடுத்துரைக்கிறது.
சசி பெருமாள் செத்தாலும் அரசு பணியாது, நந்தினி போன்ற மாணவர்கள் போராடினாலும் அரசு செவி சாய்க்காது, தன்னார்வ அமைப்புகள், தனி நபர் போராட்டங்கள், மக்கள் கூட்டம் என்று யாருடைய கருத்தையும் அரசு ஏற்காது, பதில் அளிக்காத இந்த அரசை ஊமையான செவிட்டு அரசாங்கம் என்றே சொல்லவேண்டியுள்ளது. மக்களின் பலவீனங்களின் மீது அரசு நடத்திவரும் தமிழக அரசு அதிகார போதையில் முறை தவறிய அரசு என்றே கருத வேண்டியுள்ளது. அம்மா அரசு அதிகார போதையிலிருந்து விடுபடுமா? மக்களின் உணர்விற்கு மதிப்பளிக்குமா? சாராயத்தை தயாரித்து விற்கும் கேவலத்தை கைவிடுமா?
அதிமுக தொண்டர்களே மது விலக்கு வேண்டாமா? உங்கள் வீட்டுப்பிள்ளைகள் மதுவால் சீரழிந்தாலும் பரவாயில்லை, உங்களுக்கு அம்மா புகழ் பாடுவது தான் முக்கியமா? தமிழகத்தில் மது விலக்கு சாத்தியமில்லை என்பது அதிமுகவின் கொள்கையானால், அதிமுக தலைமையிலான அரசு ஏன் பதவி விலக கூடாது? நன்மையை முன்னெடுக்க, முயற்சிக்க கூட ஒரு கட்சியினால் முடியாது எனில் ஏன் உங்கள் கட்சியை கலைத்துவிடக் கூடாது. இதை விட ஒரு நன்மையை நீங்கள் தமிழகத்திற்கு செய்து விட முடியாது. சாராயம் விற்பதை சரி என்று சொல்லுபவர்கள் தான் எங்கள் மாநிலத்தின் தலைவர்கள் என்பதை எந்த ஒழுக்கமான தமிழனும் ஏற்றுக் கொள்ள மாட்டான். சமூக நல திட்டங்கள் என்ற பெயரில் இலவச வீட்டுப்பொருள்களை அளிக்கும் தலைவர்களை எந்த சுயமரியாதை உள்ள தமிழனும் ஏற்றுக் கொள்ளமாட்டான்.
நீங்கள் தேர்தலில் வெற்றி பெற்று விட்டதால் உங்கள் அயோக்கியத்தனங்களை மக்கள் ஏற்கிறார்கள் என்று அதிமுக நினைக்கிறதா? மக்கள் தவறான பாதையில் செல்லும் போது அவர்களை நல்வழிப்படுத்துவது தான் ஒரு நல்ல தலைமைக்கு அடையாளம். மக்களுடைய பலவீனங்களை லாபமாக்கி அவர்களை தவறான வழிக்கு இட்டுச்செல்வது தான் தேசத் துரோகம். இந்த தேசத்து மக்களின் சிந்திக்கும் ஆற்றலை மட்டுப்படுத்தி சீரழிக்கும் அரசு, மக்கள் நல அரசு அல்ல, தூக்கியேறிய வேண்டிய அரசு. இது மட்டுமே இப்போதுள்ள ஆளும் கட்சிக்கும், வரவிருக்கும் ஆளும் கட்சிகளுக்கும் பாடமாய் அமையும்.




மக்களின் முதல்வருக்கு மக்களில் ஒருவனின் ஒர் கடிதம்
மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு
    இந்த ஜனநாயகம் மக்களுக்கு கருத்தை தெரிவிப்பதற்கும்அரசைகேள்வி கேட்பதற்கும்விமர்சிப்பதற்கும் எல்லா உரிமைகளையும்கொடுத்துள்ளது என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள் என்றநம்பிக்கையுடன் தான் இந்த கடிதம் எழுதப்பட்டுள்ளது.
    செல்வி.ஜெயலலிதா அவர்களே நீங்கள் வருமானத்திற்கு அதிகமாகசொத்துக்குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் எப்படியோ சிலசர்சைகள்சந்தேகங்கள் இருந்தாலும் நீங்கள் விடுவிக்கப்பட்டது சுமார்46% வாக்குகளை அளித்த அதிமுக ஆதரவாளர்களுக்கு மிகப் பெரியமகிழ்ச்சி தான்அதற்காக தமிழகமெங்கும் வெடி வெடித்துசாலைகளை குப்பையாக்கினர்உங்கள் ஆதரவாளர்களிடம் இந்தசெயலை தவறுஏன் இப்படி பொது இடத்தை அசுத்தமாக்கினீர்கள்என்று கோபித்துக்கொண்டிர்களாஇப்படி ஒரு கருத்து உங்களிடம்இல்லை என்று தான் நினைக்கிறேன்ஏனென்றால் நீங்கள்வழக்கிலிருந்து தப்பிக்கும் போதோ அல்லது தேர்தலில் வெற்றிபெறும் போதெல்லாம் உங்கள் கட்சியினர் இப்படித்தான் தெருக்களைகுப்பையாக்கியுள்ளனர்ஏன் நீங்கள் இந்த கலாசாரத்தைஆதரிக்கிறீர்கள்?
சட்டமன்ற முதல்வர் திரு.பன்னீர் செல்வத்தின் ஆட்சிஉங்களுக்கு திருப்தியாக இருக்கிறதாஆம் எனில் அவரைமுதல்வராக தொடரச்செய்து ஜனநாயகத்தைசெழுமையுறச்செய்யலாமேஉங்கள் பிரதான எதிர்கட்சியான திமுகவிற்கு உதாரணமாக திகழும் வாய்பை ஏன் தவறவிடுகிறீர்கள்?காமராஜருக்கு பிறகு பதவியை உதறிய பெருமை உங்களுக்குகிட்டுமேஇதற்காக நீங்கள் திரு.பன்னீர் செல்வத்தின் ஆட்சி சரியாகஇல்லை என்று சொல்லிவிடாதீர்கள் ஏனெனில் உங்களின்வழிகாட்டுதலின் பெரில் தான் அவர் ஆட்சி நடைபெற்றுள்ளது.
நீங்கள் வழக்கிலிருந்து தப்பிக்க உங்கள் கட்சியினர்மண் சோறுசாப்பிடுதல்யாகங்கள் செய்தல்பூஜைகள் செய்துள்ளனர்அதுஅவர்களின் நம்பிக்கை ஆனால் பெரியாரின் பாசறையிலிருந்து வந்தஅண்ணாவின் பெயரை இனியும் நீங்கள் கட்சியின் பெயரில்வைக்கலாமா?  உங்கள் கட்சியின் கொள்கையிலிருந்து வெளியேற்றியஅண்ணாவை கொடியிருந்தும்கட்சியின் பெயரிலிருந்துவெளியேற்றுவதில் சிரமம் இல்லைசெய்வீர்களா?
மது விலக்கு தமிழகத்தில் சாத்தியமில்லை என்று கூறுகிறதுஉங்கள் தலைமையிலான அரசுநல்லதை உங்களால் செய்யமுடியாதபோது அடுத்தவர்களுக்கு வழிவிடுவது தானே முறையான செயல்.மதுவை அகற்றமுடியாதமுயலாத நீங்கள் தேர்தல் அரசியலைவிட்டு ஏன் விலகக்கூடாதுமற்றவர்கள் முயற்சி செய்வதைஆதரிக்கலாமேஏன் இந்த ஜனநாயக போக்கு உங்களிடம் இல்லை?
தமிழகத்தில் பொறியியல் பெரிதாக வளர்ச்சியுறாதகாலகட்டத்தில் கூட எண்ணற்ற அணைகள்நீர் தேக்கங்கள்,தொழிற்சாலைகளை தமிழக அரசின் பொதுப்பணித்துறை கட்டியது.பொதுப்பணித்துறை என்ற ஒரு துறையை வைத்துக்கொண்டு சாலைஅமைத்தல்பாலம் அமைத்தல் என அனைத்திற்கும் ஒப்பந்தபுள்ளிகளை தனியார் கட்டுமான அமைப்புகளிடம் கோருவது ஏன்?உங்கள் அரசின் பொதுப்பணித்துறையினால் சாலைகள்பாலங்களைகட்டமுடியாதாஅல்லது உங்கள் கட்சியினர் பயனடைவதற்காகபொதுப்பணித்துறை பலவீனப்படுத்தப்பட்டுள்ளதா?
அம்மா என்ற பெயரில் உருவாக்கப்பட்ட திட்டங்களில் பயன்படுத்தப்படும் அம்மா என்ற சொல் உங்களை தான் குறிக்கிறது என்பது உங்களுக்கு தெரியாதா? மக்கள் வரிப்பணத்தில் உங்களை விளம்பரம் செய்து கொள்வது ஜனநாயக நாட்டில் என்ன நியாயம்? அடுத்தவர் மொய் பணத்தை தன் பெயரில் பரிசளிக்கும் கள்ளத்தனம் தானே?  
Annual Status of Education Report -2014 ல் உள்ளதுபடி 31% தமிழகஅரசுப்பள்ளிகள் பெண்குழந்தைகளுக்கான கழிவறை வசதிஇல்லாமலும், அப்படி இருந்தால் பயன்படுத்தமுடியாத நிலையிலும்இருக்கிறது. உங்களால் காமராஜர் உருவாக்கியது போல் பொதுத்துறை தொழிலகங்களைத்தான் கட்டமுடியவில்லை, பள்ளிகளில் கழிப்பறைகளைக் கூட 100% கட்ட முடியவில்லை என்பது உங்களுக்கு அவமானமாக இல்லையா?
நீங்கள் ஊழல் செய்வதும், தண்டனை பெறுவதும், பதவி விலகுவதுமாகத்தான் உங்கள் அரசியல் பயணம் உள்ளது. நீங்கள் பதவி நீங்கள் தண்டனை பெறும் போதும், தண்டனையிலிருந்து விடுவிக்கப்படும் போதும் இடைத்தேர்தல்கள் நடத்தப்படுகிறது. இதனால் எவ்வளவு பொருள் விரயம், உழைப்பு விரயம் ஏற்படுகிறது. இதனை உணர்ந்து நீங்கள் ஏன் மக்களின் முதல்வராகவே இருக்கக்கூடாது, உங்கள் வழிகாட்டுதலின் பெயரில் உங்கள் கட்சியின் ஒரு தன்மான சிங்கம் ஆட்சி நடத்தும் அவலத்தை இடைத்தேர்தல் வீண் செலவுக்காக நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். என்ன சொல்கிறீர்கள்?
உங்களுக்காக தீக்குளிக்கும் அளவிற்கு விசுவாசமான தொண்டர் படை உங்களுக்கு உள்ளது வாழ்த்துக்கள், ஆனால் ஒரு டீ குடிக்கக்கூட முடியாத சூழலில் இருக்கும் மக்களுக்கு, நீங்கள் திமுகவுடன் போட்டி போட்டுக்கொண்டு போலி இலவசங்களை வழங்கியதை தவிர தன்மானத்துடன் வாழ என்ன செய்துள்ளீர்கள்?
மின்சார தட்டுபாடும் உங்கள் தேர்தல் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணம் என்பதை நீங்கள் மறுக்க மாட்டீர்கள். இந்த நான்காண்டுகளில் எத்தனை காற்றாலைகளை தமிழக அரசு நிறுவியுள்ளது? எத்தனை சூரிய மின் சக்தி பூங்காக்களை தமிழக அரசு அமைத்துள்ளது?
பிறப்புச் சான்றிதழ், இறப்புச் சான்றிதழ், பத்திரப் பதிவு, வாகன உரிமம் என அரசின் அனைத்து துறைகளிலும் லஞ்சம் புரையோடியிருப்பது உங்களுக்கு தெரியாதா? லஞ்சத்தை நீக்க இதுவரை நீங்கள் என்ன செய்துள்ளீர்கள்? அதில் நானே பங்குதாரர் என்கிறீர்களா?
உங்களிடம் கேட்க இன்னமும் எத்தனையோ கேள்விகள் உள்ளன. ஆனால் ஒரு ஜனநாயக நாட்டில் தலைவர்கள் பத்திரிக்கையாளர்களை சந்தித்து அவர்கள் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும், அந்த பண்பு உங்களிடமும் இல்லை என்ன செய்வது?
ஒரு கைப்பையை பேருந்தில் திருடுபவனை அந்த பேருந்தில் உள்ள அனைவரும் சேர்ந்து அடித்து துவைக்கும் அளவுக்கு கோபமான தமிழர் இனம், நீங்கள் எத்தனை முறை தவறு செய்தாலும் உங்களை மன்னித்து மன்னித்து பதவி வழங்குகிறது. நீதிமன்றமும் உங்களை மன்னிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது. இப்படி ஆசிர்வதிக்கப்பட்ட நீங்கள் ஆணவத்துடன், ஜனநாயக மாண்புகளை குப்பைத்தொட்டியில் தூக்கியேறிவதில் எந்த வியப்பும் இல்லை. வாழ்க ஜனநாயகம்.


மாண்புமிகு பிரதமர் அவர்களே
வங்கி ஊழியர்கள்.டி மற்றும் கார்பரேட் துறைகளில் பணிபுரியும்ஊழியர்கள் தாமாக முன்வந்து சமையல் எரிவாயு மானியத்தைஇரத்து செய்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளது நல்லமுயற்சி தான்வாழ்த்துக்கள்தலைவர்கள் முன்மாதிரியாக வாழ்ந்துகாட்டும் போது தான் மக்கள் தலைவர்களை பின் தொடர்வார்கள்என்பது நாம் கண்ட வரலாறுகாந்தி முதல் காமராஜ் வரை அனைத்துதலைவர்களுமே தாங்கள் மக்களுக்கு கூறிய அறிவுரைகளை தங்கள்வாழ்வில் வாழ்ந்து காட்டினர்பிரதமர்முதலமைச்சர்கள்மத்தியமற்றும் மாநில அமைச்சர்கள் முதலில் சமையல் எரிவாயுமானியத்தை விட்டுக்கொடுப்பார்களாகுளிர் சாதன அறைகள்உயர்ரக வாகனங்கள்நட்சத்திர விடுதிகள் என்று ஆடம்பர வாழ்கையைஅனுபவித்துக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகளுக்கு மாண்பு மிகுபிரதமர் அவர்களே ஏன் நீங்கள் சாதாரன அரசு ஊழியர்கள் மற்றும்பொது மக்கள் வாழுகின்ற வாழ்வினை  வாழ வேண்டும் என்றுவேண்டுகோள் விட வில்லைஇந்த உத்தரவு உங்கள் பத்து லட்சரூபாய் கோட்டுப் பாக்கெட்டில் தங்கிவிட்டதோ?  
தூய்மை இந்தியாவுக்காக பல கோடி ரூபாய் மக்கள் வரிப்பணத்தைசெலவு செய்து விளம்பரம் தேடிக் கொண்டிருக்கும் உங்கள் அரசுதலைமை செயலகங்களில் உள்ள குளிர் சாதன அறைகள்,இரயில்களில் பயனிகளின் எண்ணிக்கை குறைக்கும் குளிர் சாதனவசதி கொண்ட பெட்டிகள்குளிர் சாதன வசதி கொண்ட மகிழுந்துகள் போன்றவற்றில் உள்ள குளிர் சாதன வசதியை நீக்க உத்தரவிட்டால்தியாகமும் உழைப்பும் நிறைந்த இந்தியாவின் வளிமண்டலம் தூய்மைபெறும் என்பதை உங்களுக்கு எடுத்துச்சொல்ல என்னைப் போன்றசாதரன மனிதனால் தான் முடியும்.  


பதவி, பட்டம், பொருள், பெருமை என்று எதுவாயினும் அதை தன் தகுதிக்கு அதிகம் என தெரிந்தாலும் மகிழ்ச்சியாக சுமக்கும் சராசரி சுமை தாங்கி மனிதர்களுக்கு மத்தியில் அதை துச்சமென மதிக்கும் மனிதர்களை பாராட்டாமல் இருப்பது மிகப் பெரிய தவறு ஆகும். எத்தனை வயது ஆனாலும், எத்தனை மோசடி வழக்குகள் நடந்தாலும் தலைவர் பதவி, முதல்வர் பதவி என்று நாற்காலிகளை கெட்டியாக பிடித்துக்கொண்டிருக்கும் தமிழக தலைவ்ர்களை பார்த்து சலித்துப்போன நமக்கு சில அரிய வட இந்திய தலைவர்களின் தற்போதைய முடிவுகள் ஜனநாயகத்தில் நமக்குள்ள நம்பிக்கையை அதிகப்படுத்துகின்றன.

பீகார் மாநில முதல்வர் திரு. நிதிஷ் குமார் 2014 பாரளுமன்ற தேர்தல் தோல்விகளுக்காக தனது அமைச்சரவையை கலைக்குமாறு மாநில ஆளுனருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். தன் கட்சியின் மீது மக்கள் நம்பிக்கையிழந்ததாலேயே மக்கள் ஓட்டளிக்கவில்லை என முடிவு செய்து தான் இந்த முடிவை எடுத்துள்ளார். இது பாராளுமன்ற தேர்தல் என்பதினால் மக்கள் தேசிய கட்சிக்கு வாக்களித்துள்ளனர் என்றோ, பா..க பணம் பட்டுவாடா செய்து வெற்றி பெற்றது என்றோ நொண்டிச்சாக்கு சொல்லாமல் பதவியை உதறியிருப்பது வரவேற்கத்தக்கது. இது நாடகம் என்று எதிர்கட்சிகள் சொன்னாலும், பத்திரிக்கைகள் எழுதினாலும் இந்த முடிவின் உயர்வை குறைத்துவிட முடியாது.

காமராஜர் தன்னுடைய கே பிளான் மூலமாக இளையவர்களுக்கு வழிவிட முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

அரியலூர் இரயில் விபத்துக்கு பொறுப்பெற்று மத்திய இரயில் மந்திரி பதவியை ராஜினாமா செய்த திரு.லால் பகதூர் சாஸ்த்ரி,

செயல்திட்டங்களை நிறைவேற்ற முடியாததால் டெல்லி முதல்வர் பதவியை ராஜினாமா செய்த அரவிந் கெஜ்ரிவால் போன்றவர்களால் தான் ஜனநாயகம் தழைக்கிறது.

தலைவர்களை நினைத்து கவலைபடவில்லை, மக்களின் தரத்தை பார்த்து தான் கவலைகொள்ள  வேண்டியுள்ளது. மக்கள் தான் சிறிய வசதிகளுக்காக குற்றவாளிகளாகும் போது குற்றவாளிகளை மன்னிக்க மட்டுமல்ல தன்னுடைய தலைவர்களாக வைத்து அழகு பார்க்கவும் தயாரக உள்ளனர் என்பது வேதனையானது தான். எப்போது தான் ஜனநாயகத்தின் நீதிகளை வளைக்காமல் பாடம் கற்போம்?
-
-

இது அரியணை பந்தயம்
வெல்வோர் ஆள்வது நிச்சயம்

அரசனும் ஆண்டியாகலாம்
ஆண்டியும் அரசனாகலாம்
பல்லாக்கு ராஜாக்களை
பக்கத்தில் பார்க்கலாம்
நாட்டுக்கு உழைப்போம்
என்ற சத்தங்களை கேட்கலாம்
ஒலிபெருக்கிகாரருக்கு
ஒளிமயமான காலமிது
அச்சகத்தார் காசு பார்க்கும் நேரமிது
இங்கு தாஜா செய்யாமல்
யாரும் ராஜா ஆக முடியாது
கைக்கூப்பும் மந்திரிகள்
காலில் விழும் மந்திரிகள்
கும்பிட்டு கும்பிட்டு கூண்
விழுந்த மந்திரிகள் அனைவருமே
தேர்தல்களில் தந்திரிகள்.
இவர்கள் காலில் விழுவதே
நிமிர்ந்து நிற்க்கத்தான்
வாசனை வார்த்தைகளால்
ஆகாய கோட்டைகளை கட்டுவர்
வானவில் திட்டங்களை
வகை வகையாய் அடுக்குவர்
மக்கள் மதியிழக்க
மதுவினை அள்ளிவிடுவர்
தன் செல்வத்தில் கொஞ்சம்
கிள்ளி எறிவர்
மனசாட்சி வாக்குகளை விட
பணசாட்சி வாக்குகளையே நம்புவர்
சாதி வாக்குகளே சாதிக்கும் என்பர்

கரை வேஷ்டிகள் களை கட்டும்
சுய விளம்பரம் விண்ணை முட்டும்
போகாத ஊருக்கு வழி சொல்வர்
பெய்யாத மழைக்கு குடை பிடிப்பர்
போடாத திட்டங்கள்
இல்லாத பட்டங்கள்
அணி வகுக்கும்
உண்மையை நினைத்தாலோ
மனம் கணக்கும்
இங்கு மையின்
கரும்புள்ளிகளால் தான்
பெரும் புள்ளிகளே ஆகின்றனர்
ஆனால் இவர்களே
கரும்புள்ளிகள் ஆகும்போது
நாம் வெறும் புள்ளிகள் ஆகின்றோம்
மனம் நொந்து நொந்து சாகின்றோம்
ஆட்சிக்கட்டில்களை அசைத்தாலும்
காட்சிப் பொருட்களில் மாற்றமில்லை
நாம் சாட்சிகளாகவே இருப்பதுவும் தீரவில்லை
சாத்தான்களை சட்டம் செய்யவிட்டு
சத்தமின்றி இருக்கின்றோம்
கழுதை போல அத்தனையும் பொறுக்கின்றோம்
யுத்தம் ஒன்று தேவைதான்
நாம் நித்தம் வாழும் பூமியில்
துடைத்திடுவோம் அழுக்குகளை துடைப்பத்தால்
தில்லி காட்டிய வழியில்

தீரர்கள் ஆவோம்
தீமையை ஒழிப்போம்
தீயாய்
நல்லன செய்யும் பேயாய் எழுவோம்
தேசத்தை நன்றாய் உழுவோம்.
-
-


விளம்பரமாகும் பக்தி

என்னே கடவுளுக்கு வந்த சோதனை? ஏற்கனவே கோயில்கள் எல்லாம் பக்தியைச் சந்தைப்பொருளாக்கி விற்கும் கடைகளாகிவிட்டது.  இந்தத் துரித உணவுக்காலத்தில் கடவுளையும் துரிதமாகத் தரிசிக்கக் கோயில்களில் குறுக்கு வழி மன்னிக்கவும் சிறப்பு வழிக்கான கட்டணங்கள், கோயில்களின் கேண்டீன்களாகிவிட்ட பிராசாத கடைகள், ஆன் லைன் தரிசன வழிமுறைகள், மொட்டை அடித்தல், காது குத்துதல், தங்க ரதம் இழுத்தல், காவடி எடுத்தல், திருமணம் செய்தல் என்று கோயில்கள் விற்பனை மையங்களாகிவிட்ட நிலையில் வினாயக சதுர்த்தி கொண்டாட்டம் என்ற பெயரில் கடவுளரை தெருவில் கொண்டுவந்து வைத்துவிட்டோம். காசு இருந்தால் மட்டுமே கடவுளை தரிசிக்க முடியும் அதிலும் எந்த அளவு அதிகமாக வசதி உள்ளதோ அந்த அளவு வசதியாக தரிசிக்க முடியும் என்ற நிலை. மனிதர்களிடையே உள்ள ஏற்றத்தாழ்வுகளை கடவுள்களிடையேயும் கொண்டுவந்துவிட்டோம். பணக்கார பக்தர்களின் இந்த சதியையும், அதை ஏற்றுக்கொண்டுவிட்ட சமுதாயத்தையும், என்ன கொடுமை சார் இது என்று சொல்வதைத் தவிர வேறு இல்லை.
     சரி சொல்லவந்த விஷயத்திற்கு வருவோம். வினாயக சதுர்த்தியை ஒட்டி பக்த கேடிகள் மன்னிக்கவும் பக்த கோடிகளின் ஆர்ப்பாட்ட ஆன்மீக வெளிப்பாடுகள் அவர்களின் அறியாமை, பொறுப்பின்மையை வெளிச்சம் போட்டு காட்டுகின்றன. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு எற்படுத்தும் பிளாஸ்ட்ர் ஆஃப் பாரிஸ் கொண்டு செய்யப்பட்ட வினாயகர் சிலைகள், சாலை நடைபாதைகளை ஆக்கிரமித்து நிறுத்தப்படுகிறது. உண்டியல் வசூல், மிகுந்த சத்தத்துடன் ஒலிக்கும் ஒலிபெருக்கி என கலைகட்டுகிறது வினாயகர் சதுர்த்தி விழா. குழந்தைகள், வயதுமுதிர்ந்தோர், நோய்வாய்ப்பட்டோர் என எவரையும் பற்றி இவர்கள் யோசிப்பதில்லை. இவர்களின் பக்தி பரவசத்தில் பாதிக்கப்படவேண்டியதுதான்அடுத்து வினாயகர் ஊர்வலம், இது பக்தியை அல்ல படாடோபத்தை வெளிப்படுத்தும் விதமாகத்தான் நடைபெறுகிறதுமத நல்லிணக்கத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் பல இடங்களில் நிகழ்ச்சிகள் நடைபெறுவதை காணமுடிகிறது. இந்த விளம்பர பக்தி தேவையா?
உள்ளம் பெருங்கோயில் என்றார் திருமூலர். பேசா துறவியாய் சேவையையே பக்தி என வாழ்ந்து காட்டினார் ரமணர். மக்கள் சேவையையே பக்தி என்று பசிப்பிணி போக்கினார் வள்ளலார். இந்த வழியில் வந்த நாம் பக்தியின் புனிதத்தை  வீண் அமர்க்களத்தால் கெடுக்காமலிருந்தால் நம் மதம் மனிதநேயத்தின் வெளிப்பாடாய் அமையும். அதைத்தான் இறைவனும் விரும்புவார். இதை நாம் எப்பொழுது புரிந்து கொள்ளப்போகிறோம்? எல்லாம் வல்ல அந்த வினாயகர் தான் நம்மைக் காப்பாற்ற வேண்டும்.
ரெ.ஐயப்பன்






கர்ம வீரர் காமராஜ்
விருதுப்பட்டி தந்த
தங்கக் கட்டி நீ
விடுதலை போரில் சீறிப்பாய்ந்த சிங்கக் குட்டி நீ
காந்தி வழி நின்று 
கதராடை கொண்டாய்
காலனி ஆட்சியை எதிர்த்து
9 ஆண்டு சிறையில் நின்றாய்
மக்கள் பணி செய்வதற்கு 
இல்லம் துறந்தாய்
பாரதியின் வரிகளுக்கு
உயிர் கொடுத்தாய்
வீதி தோறும் பள்ளிகளை 
கட்டி வைத்தாய்
அங்கு மதிய உணவு உண்டு என சொல்லி வைத்தாய்
தமிழ் நாட்டிற்க்கு கிடைத்திடாத அறியவன் நீ
வறியவரின் துயர் துடைத்த பெரியவன் நீ
எத்தனையோ அணைகள் கட்டி நீரை தேக்கினாய்
தமிழகத்தின் வயல்களையே பசுமை ஆக்கினாய்
அத்தனையும் இழந்ததினால் வென்றவன் நீ
எளிமையையே ஏராளமாய் அணிந்தவன் நீ
மகுடத்தை உதறிவிட்ட மன்னவன் நீ
தமிழர் நெஞ்சில் என்றும் நிரந்தர முதல்வன் நீ  
ரெ.ஐயப்பன்



கோன் ஐஸ்க்ரீம்
எல்லோருக்கும் பிடிக்கும்
ஆசையாய் வாங்கி
கையில் பிடித்ததும்
உருக ஆரம்பித்துவிடும்!
ரசித்து ருசித்து 
அனுபவித்து சாப்பிட
வேண்டிய நேரத்தில்
வீணாய் போகிறதே என
அவசரமாக சாப்பிட்டு 
அப்படி இப்படி சமாளித்து 
அனுபவித்து சாப்பிட 
கற்று கொள்ளும் 
நேரத்தில் மிஞ்சுவது
உப்பு சப்பில்லாத
கோன் மட்டுமே!

வாழ்க்கையும் கோன் ஐஸ்க்ரீம் தான்!
இன்னொரு கோன் ஐஸ்க்ரீம் கிடைக்கும்
ஆனால் வாழ்க்கை?



ராணுவத்தில அழிஞ்சவனை விட, ஆணவத்துல அழிஞ்சவன் தான் அதிகம். ----------------------------------------------------------------------------------------------------------------------------------------
பாசத்தைக் காட்டி தோற்றவனும் இல்லை
கோபத்தைக் காட்டி ஜெயித்தவனும் இல்லை..!
------------------------------------------------------------- 
தப்பு செய்யாத மனிதனே இல்லை... 
தப்பு செய்யாட்டி அவன் மனிதனே இல்லை .....
-------------- 
உனக்குப் பிடித்த ஆயிரம் பேரிடம் பழகுவதைவிட , உன்னை மட்டுமே பிடித்த ஒருவரிடம் பழகிப்பார் உன்னை...

No comments:

Post a Comment

நான் ஒரு விவசாயி.

My photo
CHENNAI, TAMILNADU, India
Work "MORE",Talk "LESS"
Powered By Blogger

Search This Blog