27.10.15

படித்ததில் பிடித்தது.....




---------------------------------------------------------------------------------------------
நம் நாட்டிலிருந்து வெளிநாட்டுக்கு வேலை தேடிச் சென்றார் ஒருவர்.
அங்கே ஒரு விற்பனை நிலையத்தில்....
"சேல்ஸ் துறையில் உனக்கு முன் அனுபவம் இருக்கிறதா?" மேனேஜர் கேட்க,
"நான் எனது நாட்டில் சேல்ஸ்மேனாகத்தான் வேலை பார்த்தேன்" என்றார் நம்மாளு.
"அப்படியானால் உனக்கு நான் வேலை தருகிறேன். நாளை முதல் நீ வேலையைத் தொடங்கலாம். கடை மூடும்பொழுது நீ எப்படி வேலை பார்த்தாய் எனப் பார்ப்பதற்கு நான் வருவேன்"
முதல் நாள் கடை மூடும் நேரம் மேனேஜர் வருகிறார்.
"இன்று எத்தனை நபர்களிடம் சேல்ஸ் செய்தாய்?"
"ஒருவரிடம் மட்டும்…"
"என்ன ஒருத்தர் மட்டுமா? ... உன்னுடன் வேலை பார்க்கும் மற்றவர்களெல்லாம் நாள் ஒன்றுக்கு 20லிருந்து 30 வரை செய்யக் கூடியவர்கள். உன் வேலை நிரந்தரமாக வேண்டுமானால் நீயும் இவர்களைப் போல் முயற்சி செய்ய வேண்டும். சரி எவ்வளவு டாலருக்கு விற்றாய்?"
"$1012347.64"
"ஒரே ஒரு நபரிடம் இவ்வளவு டாலருக்கா? என்னென்ன விற்றாய்?"
"முதலில் அவரிடம் சிறிய தூண்டில்,
கொஞ்சம் பெரிய தூண்டில்,
அதைவிடப் பெரிய தூண்டில்,
ஃபிஷிங் ராட்,
ஃபிஷிங் கியர் எல்லாம் விற்றேன்.
பிறகு அவரிடம் “எங்கே மீன் பிடிக்கிறீர்கள்?” என்று கேட்டேன். அவர் கரையில் அமர்ந்து மீன் பிடிப்பதாகச் சொன்னார். உடனே நமது போட்டிங் டிபார்ட்மெண்ட் சென்று ஒரு போட்டை விற்றுக் கொடுத்தேன். அவர் என்னுடைய கார் இந்த போட்டை இழுக்குமா எனத் ன்று தெரியவில்லையே என்றார். நான் நமது ஆட்டோமோடிவ் டிபார்ட்மெண்ட் சென்று ஒரு 4x4 ட்ரக் விற்றுக் கொடுத்தேன். பின்னர் அவரிடம் நீங்கள் எங்கு தங்கியிருக்கிறார் எனக் கேட்டேன். இப்போதைக்கு இடம் எதுவும் இல்லை என்று சொன்னார். உடனே நான் அவருக்கு 4 பேர் தங்கக் கூடிய அளவுள்ள “டெண்ட்” –ம் விற்றுக் கொடுத்தேன்"
"என்ன ஒரு தூண்டில் வாங்க வந்தவரிடமா இவ்வளவும் விற்றாய்?"
மேனேஜர் அதிசயமாய்க் கேட்க, நம்மாளு சொன்னார்,
"அய்யோ! இல்லை சார்! அவர் தலைவலிக்காக அனாசின் மாத்திரை வாங்க வந்தார். நான்தான் மீன் பிடித்தால் மனசுக்கு ரொம்ப ரிலாக்ஸ் - ஆக இருக்கும். எப்போதும் உங்களுக்குத் தலைவலியே வராது என்று கூறினேன்"
இந்தியன்னா சும்மாவா?


----------------------------------------------------------------------------

நினைவிருக்கிறதா..?
போபால் விஷவாயு கசிவு கோரம்.....
1984-டிசம்பர் 3-ம் தேதி...!!!
போபால் ரயில்வே ஸ்டேஷனில்
'துருவே' என்ற ஸ்டேஷன் மாஸ்டருக்கு இரவு நேரப்பணி.
போபால் ஸ்டேஷன் வழியாக லக்னோவில் இருந்து மும்பை செல்லும் ரயிலுக்கு சிக்னல் க்ளியரன்ஸ் கொடுத்துவிட்டு வெளியே வந்தார்.அவரால் காற்றில் ஏதோவித்தியாசத்தை
உணர முடிந்தது. அவசர அவசரமாக சிக்னல்அறைக்கு ஓடினார். எப்படியாவது
லக்னோ டு மும்பை ரயிலைத் தடுத்துவிடுவதுதான் அவரது
நோக்கம். ஆனால், அந்த ரயில்
ஏற்கெனவே கிளம்பிவிட்டது.
துருவேயால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
லக்னோ-மும்பை ரயில் வந்தது. அதில் இருந்து இறங்கிய பயணிகள் எல்லாம் விஷ வாயுவைத் தாங்க முடியாமல் சுருண்டுவிழுந்தார்கள்.
ஓடியவர்கள் இன்னும் சீக்கிரம்
இறந்தார்கள்.கொஞ்ச நேரத்தில் போபால் ரயில் நிலையத்தில் 191 பிணங்கள்கிடந்தன.
அந்தக்காட்சி துருவேயை
நிலைகுலையவைத்தது.
பதற்றத்தோடு சிக்னல் அறைக்கு ஓடினார். அங்கு அவருக்குக்
கீழ் பணிபுரியும் சிக்னல் மேன்
வாயில் ரத்தம் வழிய செத்துக்கிடந்தார். அவரை
ஓரமாக நகர்த்திப்போட்டுவிட்டு, 'எந்த ரயிலும் போபால் வழியே வந்துவிட வேண்டாம்' என்று
தகவல் அனுப்பத் தொடங்கினார்.
அதையும் மீறி வரும் ரயில்கள்
ஜன்னலை மூடிக்கொண்டு போபால்ஸ்டேஷனில் நிற்காமல் வேகமாகப் போய்விடுமாறு
அறிவுறுத்தினார்.
மூக்கிலும் வாயிலும் வழிந்த
ரத்தத்தைத் துடைத்துக்கொண்டு, இரவு முழுவதும் விழித்திருந்து வேலை பார்த்தார்.
அந்த இரவு விடிந்தது. அடுத்த நாள் சிக்னல் அறையைத்
திறந்தபோது, ஸ்டேஷன் மாஸ்டர்
துருவே வாயில் ரத்தம் வழிந்த நிலை யில் சிக்னல் அனுப்பும் கருவியை ஒரு கையால் பிடித்தபடி செத்துக்கிடந்தார்.
துருவே மட்டும் இல்லை எனில்,
போபால் விஷவாயுக் கசிவின் மரண எண்ணிக்கைஇன்னும்
சில ஆயிரங்கள் கூடியிருக்கும்.
ஆனால்,போபால் நகரத்தில் விஷவாயு கசிந்த அந்த இரவில் மாநில முதல்வர் அர்ஜுன் சிங்,
நகரில் இருந்து 14 கி.மீ ஓடோடிச்
சென்று தப்பித்தார்.
’துருவே’ போன்றவர்களின்
தியாகம் ஏனோ
அங்கீகரிக்கப்படுவதுமில்லை,
ஞாபகம்இருப்பதும் இல்லை.
'துருவே' வுக்கு தலைவணங்கி வீரவணக்கம் செலுத்துவோம்.
-ஆனந்த விகடன் இதழிலிருந்து....

----------------------------------------------------------------------------------------


அடிப்படையில் சென்னையைச் சேர்ந்ததமிழரான அரவிந்துக்கு தற்போது வயது 32.தானியங்கித் துறையில் மிகுந்த ஆர்வம்
கொண்டவரான அரவிந்துக்கு,
அடிக்கடி நீண்ட மகிழுந்துப் பயணம்
மேற்கொள்ளுவது பிடித்தப்
பொழுதுபோக்கு. குறிப்பாக, சோதனை ஓட்டத்திற்கென்று
கொடுக்கப்படும் வாகனங்களைச்
சோதிப்பதற்காக நெடுந்தூரம் ஓட்டிச்
செல்வது இவரது வாடிக்கை.
அப்படித்தான் அண்மையில், ஃபோக்ஸ்வாகன் நிறுவனத்தின் ’பஸாட்’ காரை ஓட்டிச்
சென்ற அரவிந்திற்கு, அது ஒரு
வரலாற்று நிகழ்வாக அமையப்போகிறது என்று
நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார்.தற்செயலாக, அந்த வாகனத்தின் புகை
வெளியிடும் அளவைச் சோதித்த அரவிந்தும்,அவரது நண்பர் மார்க் பெஸ்சும் அதிர்ந்து போனார்கள்.
காரணம் புகை வெளியிடும் அளவை நிர்ணயிக்கும் ஈ.பி.ஏ
கட்டுப்பாட்டு விதிகளில் குறிப்பிட்டுள்ள அதிகபட்ச அளவை விட, இந்த வாகனத்தின் புகை வெளியேற்ற அளவு 20 மடங்கு
அதிகமாக இருந்தது.
இதேபோல ஃபோக்ஸ்வாகன் நிறுவனத்தின் மற்றொரு தயாரிப்பான ’ஜெட்டா’ விலும் 15 முதல் 35 விழுக்காடு அதிகப் புகைவெளியேறியிருக்கிறது.
ஆனால் தர நிர்ணயச்
சோதனைகளிலெல்லாம் மிக எளிமையாகத் தேர்வு பெற்றவை இந்த கார்கள்.
அது எப்படி? என்ற குழப்பத்திற்கான விடையைத் தேடுகையில்தான் அரவிந்த், ஃபோக்ஸ்வாகன்
நிறுவனத்தின் மாபெரும் ஊழலைக்
கண்டறிந்திருக்கிறார்.
காற்றில் நச்சுத்தன்மையை அதிகரிக்கும், மோனோ
நைட்ரஜன் ஆக்ஸைடு போன்ற காரீயத்தை (Lead)
சுற்றுச்சூழலில் அளவிற்கு அதிகமாக வெளியிடும் போதிலும், அந்த அளவைக் குறைத்துக் காட்டுமாறு, ஏமாற்றுத் திறன்
வாய்ந்த ஒரு மென்பொருளை
இந்த வாகனங்களில்
பொருத்தியிருக்கிறது இந்த நிறுவனம்.இதைக் கண்டறிந்த உடன், தன்னம்பிக்கையும்
துணிச்சலும் கொண்டவராக,
உடனடியாக புகார் பதிவு
செய்துள்ளார் அரவிந்த்.
இதைத் தொடர்ந்து, உலக ஊடக
வெளியில் பட்டவர்த்தனமாக
அம்பலமானது ஃபோக்ஸ்வாகன் ஊழல்.
இந்த அவமானத்தைத் தொடர்ந்து,
அந்த நிறுவனத்தின் முதன்மை இயக்குநரான மார்ட்டின் விண்டர்கோர்ன், இந்த மோசடிக்குப்
பொறுப்பேற்றுப் பதவி விலகினார்.
மேலும் ஃபோக்ஸ்வாகன் நிறுவனம், 18 பில்லியன் டாலர்கள் இழப்பீடு கட்டவேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதைத் தொடர்ந்து 5 நாட்களில் ஃபோக்ஸ்வாகன் நிறுவனம், பங்குச்சந்தையில்
தன் மதிப்பில், 25 பில்லியன் யூரோக்களை இழந்து,
அடிமட்டத்தை அடைந்துள்ளது.
ஒரு ராட்சத கார்ப்பரேட் நிறுவனத்தை, தனி
மனிதனாக நின்று ‘நெற்றிக்கண்
திறப்பினும் குற்றம் குற்றமே’ என்பது போல வீழ்த்திய தமிழரான அரவிந்த் திருவேங்கடம்,
உலக அரங்கில் உயர்ந்து நிற்கிறார்.
-
-
காராளர் வம்சம்.

No comments:

Post a Comment

நான் ஒரு விவசாயி.

My photo
CHENNAI, TAMILNADU, India
Work "MORE",Talk "LESS"
Powered By Blogger

Search This Blog