28.10.15

முகநூலில் எனது பதிவேற்றங்கள்-3




அதிகாலை நான்கு மணிக்கு எழுந்தால் போதும்
என்று தெரிந்தும் மூன்று மணிக்கே அலாரம்
வைக்கும் முன்ஜாக்கிரதைக்காரர்கள்ஐந்து மணிக்கு
மேலேயே விழித்து எழுகிறார்கள்…!

 ----------------------------------------------------------------------------

சலூனில் ஷேவிங் செய்து கொள்வது கழுத்திற்கு நல்ல பயிற்சி.

360 டிகிரியிலும் திருப்பறாங்கய்யா கழுத்தை…!
 --------------------------------------------------------------------------------------
பொண்ணைப் பார்த்துட்டு ஊருக்குப்போய் லெட்டர் போடுறோம்னுசொன்னவங்களும்,

ஹெச்.ஆர்.கால்பண்ணுவாங்கன்னு
சொன்னவங்களும்

பதில் சொன்னதா…சரித்திரமே இல்லை..!



---------------------------------------------------------------------- 
நான் நானாவே இருக்கேன்!
நீங்க நீங்களாவே இருங்க!
எதுக்கும் நடுவுல இருக்கட்டும்இந்த அருவா!

--------------------------------------------------------------------------------------


வளர்த்த கெடா மார்ல பாயுது”னு சொல்ற ஆடு
மேய்ப்பர்களிடம் கேட்க விரும்பும் கேள்வி:

வெட்டுறதுக்குத்தானே நீங்களும் நீவிநீவி
வளர்த்துறீங்க”


--------------------------------------------------------------- 
சீட்’ நிரம்பாத என்ஜினியரிங் காலேஜ்’வீட்டுமனை’ விற்பனையாகாத ரியல் எஸ்டேட்கம்பெனி 
இடையே லோக்கல் டிவி விளம்பரங்களில் கடும் போட்டி!
-
-------------------------------------------------------------------- 

2Hrs லேட்டாகும்னு கூடச்சொல்லுங்க, 120 நிமிசம் வெயிட் பண்ணித் தொலைக்கிறோம்.ஆனா மூனே நிமிசத்துல வந்துடுறேனு முக்கா மணி நேரம் படுத்தாதீங்க!
------------------------------------------------------- 
எல்லாவற்றையும் சந்தேகிப்பவன் இறுதியாய் ஒரு நாள் சந்தேகத்தையும் சந்தேகிப்பான்!



--------------------------------------------------------------------------------------காலையில் ரிலீஸாகுற படத்துக்கு அன்னிக்கு மதிய மாலை மலர்ல ”அரங்கு நிறைந்தகாட்சி”னு விளம்பரம் கொடுக்கிற வித்தைய 
எங்கதான் கத்துக்கிட்டாங்ளோ!
-
--------------------------------------------------------------------------
செல்போன்ல சிக்னல் கிடைக்காதபோது சப்தமாகப் பேசினால்எதிர்முனையில்கேட்கும்ங்கிறதைக் கண்டுபிடிச்சது யாரா இருக்கும்!?
-
--------------------------------------------------------------------------------------- 
"அரசு பஸ்களில் ரூ.10க்கு மினரல் வாட்டர்” தனியார் பேருந்துகளைவிட அரசுப்பேருந்துகளில் கட்டணம் அதிகம்
தனியாரைவிட அரசு தண்ணீர் விலை குறைவு
-------------------------------------------------------------------- 
பார்வைக்கு அழகாய் இருக்கும் மலர் வாசனையாகவும் இருக்க வேண்டுமென்பதில்லை!
 -------------------------------------------------------
எதைச் சொன்னாலும் நம்புவதற்கு ஒரு கூட்டம் இருப்பதுபோல்எதைச் சொன்னாலும்நம்பாததற்கும் ஒரு கூட்டம் இருப்பதுதான் உலகின் விந்தை!
----------------------------------------------------------------------------------சிரிக்கவியலாமல் இறுகியிருக்கும் தருணங்களில் சிரிக்கவைக்கும் வல்லமைகொண்டவனும் தெய்வமே!

------------------------------------------------------------------------------------ 
வீட்டைவிட்டு வெளியே சென்றாலும்உள்ளேயே இருந்தாலும் கதவுகளை 
மூடியேவைத்திருக்கவேண்டும் எனும் 
பாடத்தைத்தான் நகரம் முதலில் கற்றுத்தருகிறது
-
--------------------------------------------------------------------------- 
நண்பர் ஒருவரைச் சந்தித்தேன்மூன்று செல்ஃபோன்கள் வைத்திருந்தார்இரண்டுகாதுகள்தான் அவரிடமும் இருந்தன.
----------------------------------------------------------------------- <Saving அக்கவுண்ட்ல கட்டின பணம் மாதிரி பொசுக்னு தீர்ந்து போயிடுது ஞாயிற்றுக்கிழமை.
-------------------------------------------------------------
தலையைவிட வால் தான் அதிகம் ஆடுகிறது!

-------------------------------------------------------------------------- 
கடல் நீரில் கால் நனைக்கும் எல்லோரிடமும் எழும் கத்தல் 
மகிழ்ச்சியின் குரலா
பயத்தின்மொழியா
அடைந்துகிடக்கும் அழுத்தத்தின் பிரசவமா?
-
------------------------------------------------------------ 
குடிப்பதில் தெளிவாக இருப்பதைவிட
குடித்த பாட்டிலை உடைப்பதில் 
தெளிவாகஇருக்கின்றனர் மக்கள்.
--------------------------------------------------------------------- 


நன்றி சொல்கையில்நட்பின் அதிபிரியத்தில்
 ’நன்றி எதுக்கு’னு மறுப்பவர்களிடம் நன்றியை எப்படிச்சொல்ல
#ஹெல்ப் மீ திருவள்ளுவரே!
-
----------------------------------------------------------------------------
சம்மர் கோச்சிங் கிளாஸை” கண்டுபிடித்தவர்கள் 
சூனியக்கார கிழவிகளின் நவீனவார்ப்புகள்!
-
-------------------------------------------------------------------- 
வறுத்த கடலை பொரிக்கு நிகரான காம்பினேசன் 
இன்னும் கண்டுபிடிக்கப்படல.

-------------------------------------------------------------------------------------------

பார்த்தவுடன் எழுந்து நிற்பதை’ மரியாதைனு மொதமொத 
கண்டுபிடிச்ச விஞ்ஞானி யாரா இருப்பாங்க!
-
------------------------------------------------------------------------------ 
எவனொருவன் தன்னை ’எளியவன்’ என உரத்துச் சொல்கிறானோ
அவன் எளியவனாகஇருக்க விரும்பியிருக்கவில்லையென்று அர்த்தம்!
-------------------------------------------------- 

கடந்த 2 முறை ஆளும் கட்சியைத் தீர்மானிப்பதில் குழம்பிய கர்நாடகா வாக்காளர்கள்
இந்தமுறை எதிர்க்கட்சியைத் தீர்மானிப்பதில் குழம்பிட்டாங்க!
------------------------------------------------------------------------ 

முதுமையில் பணம் என்பதைவிட 
சட்டெனத் தழுவும் மரணம் முக்கியம்!
 -----------------------------------------------------------------

தெளிவாக இருக்க முயல்வது போன்ற 
கிறுக்குத்தனத்திற்கு நிகர் ஏதும் இல்லை!
----------------------------------------------------- 
கொதிக்கும் வெயிலில் பெட்ரோல் தீர்ந்து 
வண்டியைத் தள்ளுபவன்
துரதிருஷ்டசாலியாகவோ
பாவப்பட்டவனாகவோ 
மட்டுமே இருக்க வேண்டும்என்பதில்லை
சரியான நேரத்துக்குப் பெட்ரோல் 
போடாத சோம்பேறியாகவும் 
கூடஇருக்கலாம்
------------------------------------------------------------
தோல்விகள்துன்பங்கள் என வலிக்க வலிக்க சுயசரிதை 
எழுதும் வாய்ப்பு வெற்றிபெற்றவர்களுக்கு மட்டுமே அளிக்கப்படுகிறது!

------------------------------------------------------------------------------------------

ரொம்ப பிசியா இருக்கிற ஆஸ்பத்திரில ஒருபொழுது இருந்து பார்த்தாத் தெரியும்உடல்ஆரோக்கியத்தோட வாழ்ந்துட்டு 
இருக்கிறதே எத்தனை பெரிய வரம்னு!
 -----------------------------------------------------------------------

நிஜமா சொல்றேன் “ஓசி சோத்துக்கு ருசி அதிகம்

 ------------------------------------------------------------------

கம்மஞ் சோற்றைத்தான் 'அமிர்தம்னு
சொல்லியிருப்பாங்களோ!?

-------------------------------------------------------- 
அறிமுகங்கள் முடிந்து
ஆர்வங்கள் பகிர்ந்து
எல்லாம் கரைந்த ஒரு நற்பொழுதில்(!) 

எளிதாய்ஆரம்பிக்கிறார்கள் ’பொறணி’ பேச!
 -----------------------------------------------------------------------

நான் ஒன்னு கேட்டா தப்பா நினைச்சுக்க மாட்டீங்களே!? 
எனும் பீடிகைகளில் தப்பாநினைக்க 
ஏதோ ஒன்று இருக்கவே செய்கின்றது!

------------------------------------------------------------------


இதென்னடாது காலண்டர்ல 
பிப்ரவரி 28ம் தேதிய கிழிச்சா
மார்ச் ஒன்னாம் தேதி வருது.

#நடுவுல கொஞ்சம் தேதியக் காணோம்!

 ------------------------------------------------------------------



மவனேஇந்த ”போர் அடிக்குதுங்ற வார்த்தையை கண்டுபிடிச்சவன் மட்டும் எனக்கு எதிரில் அப்போது வந்திருந்தால்கொலைக்கேசு ஆனாலும் சரினு வண்டிய அப்படியே ஏத்திக் கொலை செய்திருப்பேன்அப்போது தென்படவில்லைஅவனைத்தான் தேடிக்கொண்டிருக்கிறேன்.

-------------------------------------------------------------------------------------------------------- 

--------------------------------------------------------- 
பசி இனிது...!

 ------------------------


'எதுவும் சில காலம்தான்எனும் 
சொற்றொடர் மட்டும் நீண்ட காலமாய் !
------------------------------------------------------------------------ 
நகரத்து மண்ணில் பாய்ந்த கிராமத்து வேர்


-------------------------------------------------------------------
உடலிற்கு ஓய்வளித்தாலும் உங்கள் மூளைக்கு
ஓய்வளிக்காதீர்கள்,,,நம் வெற்றி மூளையின் ஓர்
மூலையில்தான் இருக்கிறது

--------------------------------------------------------------------------

திறம்பட திருடத் தெரியாமல் மாட்டிக் கொள்பவனை
மட்டுமே வரலாறு ‘திருடன்’ என்று அழைக்கின்றது..!!

-------------------------------------------------------------------------------

சிறகுகள் முளைக்கும் வரைதான் கூட்டுக்
குடித்தனைம்…பறவைகளுக்கு..!!
 -------------------------------------------------------------
வாழ்க்கை ஓர் நாடக மேடை தான்,
இங்கு இயல்பாய் நடிக்க சொரனை தேவையில்லை…

------------------------------------------------------------------------------ 


டிவில தமிழக அரசின் ஆண்டு சாதனைன்னு
சொல்லிக்கிட்டு இருந்தாங்க…கரண்ட் போச்சு…!
-
இனி மணி நேரம் கழிச்சிதான் பாக்கணும்..!!
---------------------------------------------------------------------------------------
கறை’ இடம் மாறுவது நம் ஜனநாயகத்தின் சிறப்பு-
வாக்காளர் விரலிலிருந்து எம.எல்.கரங்களுக்கு..!

-----------------------------------------------------------------------------------

குளியலறையில் தண்ணீர் திறந்துவிடும் வரை ஒட்டிக்
கொண்டே இருக்கிறது சோம்பலும்தூக்கமும்…!

------------------------------------------------------------------------------------------

எதிரிகளைப் போல நாம் சிந்திக்க ஆரம்பித்து விட்டால்
நாம் தோற்றுக் கொண்டிருக்கிறோம் என்று அர்த்தம்..!

 --------------------------------------------------------------------------------------------
மருத்துவ சேர்க்கைக்கு விலையை விசாரிக்கச் சென்ற
கல்லூரிகளில் நம் கைபேசிகளை தனியே வாங்கி
வைதுக் கொண்டார்கள்ஆங்காங்கே உற்று நோக்கும்
சிசிடிவி கேமராக்கள்.
உக்கும்.. உஷாரா கொள்ளையடிக்கிறாய்ங்களாம்..!


 -----------------------------------------------------------------------
சில பார்வைகளில் கண்டறியும்
பிரியம்நூறு கோடிவார்த்தைகளாலும்
சொல்ல முடியாதது..!
---------------------------------------------------------

அடுத்த மாசச் சம்பளத்தில் ஒரு .டி.எம்.மெஷின் 
வாங்கிடணும்
மாசா மாசம் 1-ம் தேதி லைன்ல நிற்கிற பொழப்பே 
இருக்கக்கூடாது..!
 -------------------------------------------------------------
தோல்விகளை அதிகம் நேசிப்பவர்டுடோரியல் காலேஜு 
ஓனர்..!
 -----------------------------------------------------------
நண்பர்களாகப் பிரிவோம் என்பவர்களுக்கு…
நண்பர்கள் பிரிவதேயில்லை என்பது தெரியாதா..?

 --------------------------------------------------------------------
பெரிய விஷயங்களைப் பேசுகிறார்கள் என்பதற்காக,
சின்ன விஷயங்களைப் புரிந்து கொள்வார்கள் என்று 
எதிர்பார்க்க முடியாது.

 ----------------------------------------------------------
மனைவியின் மௌனமான பதிலுக்கும்,
மௌனமே பதிலாக இருப்பதற்கும்,
நிறைய வித்தியாசம் இருப்பதைப் புரிந்து 
கொள்பவர் நல்ல கணவன்,

-----------------------------------------

தொலைத்த என் நினைவுகளை விட
என்னை துளைத்த உன் நினைவுகளே,
அதிக வலிகளை விதைக்கின்றன…
 --------------------------------------------------------

Hi!
SURPRISE FOR YOU

Click on the below link.  You will get a black page. Click your mouse anywhere (& everywhere) on the page & see what happens!  Better yet, click & drag your mouse over the black page.
Hope you will like it . 

  

No virus.




கொன்று குவிக்கும் 
கொடூர மயானத்தின் பெயர் -
பாதுகாப்பு வளையம்..


வீட்டுக்கார'னு'ம் பிச்சைக்கார'ரு'ம்..

ஏம்பா உனக்கு ரூபாய் போட்டா என்ன பண்ணுவே..?

வாயார வாழ்த்துவோம் சாமி..

25 பைசா போட்டா..?

எங்க செலவுல திருவோடு வாங்கித் தருவோம்....!

-------------------------------------------------------------------------------------------------------

உணவு விடுதியில் காதலனும் காதலியும்...

காதலன் அன்பே.. நாம் இருவரும் ஒன்றறக் கலந்து விட்டோம் கண்ணே..!

காதலி அந்தக் கதையே வேணாம்.. ஒழுங்கா ரெண்டு ரவா தோசைக்கு ஆர்டர் கொடுங்க.. கஞ்சப் பிசிநாறி...!

------------------------------------------------------------------------------------------------------------------

ஒரு அமெரிக்கர் தமிழ்நாட்டை சுற்றிப் பார்க்க வந்தார்வழிகாட்டியிடம் பேசும்போது அரசியல் பக்கம் பேச்சு திரும்பியது.

அமெரிக்கர் நாங்கள் தேர்தல் நேரங்களில் டாக்சியில் போனால்டிரைவருக்கு மீட்டருக்கு மேல் டிப்ஸ் கொடுத்து எங்கள் கட்சிக்கு வாக்களிக்க சொல்லுவோம்.

வழிகாட்டி நாங்கள் டாக்சியை விட்டு இறங்கி டிரைவரின் முகத்தில் ஒரு அறை கொடுத்து 'காசா கேக்கறே.. ஒழுங்கா ஓட்டைப் போடுன்னு எதிர்க் கட்சி பேரை சொல்லிட்டு போவோம்...!

--------------------------------------------------------------------------------------------------


புயல் காரணமாக பள்ளிக்கு நாள் விடுமுறை..

பள்ளி திறந்த பிற்பாடு ஆசிரியர் கேட்டார்.. பிள்ளைகளே..!
விடுமுறையை நல்ல வழியில் செலவிட்டீர்களா..?

ஒரு மாணவன் ஆமாம் அய்யா.. கடவுளை வணங்கினேன்..

என்ன வேண்டிக்கொண்டாய்..?

இன்னொரு புயல் வரவேண்டும் என்று...!!!

----------------------------------------------------------------------------------------------

நோயாளி.; ..டாக்டரய்யா..! வயித்துப்போக்கு அரெஸ்ட் 
ஆயிடும்ன்னு மாத்திரை கொடுத்தீங்க.. மறுபடி வந்துடிச்சே...!

டாக்டர்.; . கவலைப்படாதீங்க.. "ஜாமீன்ல வந்திருக்கும்.. 
இப்போ "அரெஸ்ட்பண்ணிடறேன்..!


விருந்தாளியும்.. வீட்டு சிறுவனும்..

வாங்க மாமா.. ஆயுசு நூறு.. இப்போதான் அப்பா உங்களப் பத்தி சொல்லிட்டு இருந்தார்..

அப்படியா.. என்ன சொன்னார்..

கடன்காரப் பய வர்றதுக்குள்ள இலையைப் போடு.. சாப்பிட்டுட்டு ஓடறேன்னு அம்மாகிட்ட சொன்னார்.

No comments:

Post a Comment

நான் ஒரு விவசாயி.

My photo
CHENNAI, TAMILNADU, India
Work "MORE",Talk "LESS"
Powered By Blogger

Search This Blog